Followers

Thursday 23 August 2018

*#ஸ்ரீராமகிருஷ்ணரின்_உபதேசங்கள்*

*கடவுள் எல்லா உயிரிலும் நிறைந்திருக்கிறார், எறும்புவரை உள்ள உயிரினங்களில் இருக்கிறார்.ஆனால் சக்தி வெளிப்பாட்டில் வேறுபாடு உள்ளது.யாரை பலர் மதிக்கிறார்களோ போற்றுகிறார்களோ அவர்களிடம் கடவுளின் சக்தி அதிகம் வெளிப்பட்டுள்ளது.*

*புத்தகம் படிப்பது கடவுளை அடைவதற்கான வழியை தெரிந்துகொள்வதற்காகத்தான். வெறுப் படிப்பினால் எந்த பயனும் இல்லை. படித்து முடித்தபிறகு இறைவனை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.*

*அரசமரத்தை வெட்டினால் அது மறுபடியும் தளிர்விடும். அதேபோல் ஞானிகளுக்கு சமாதிநிலையில் நான்-உணர்வு போய்விடுகிறது. சமாதி கலைந்த பிறகு மறுபடியும் வந்துவிடுகிறது.அதனால் தான் விஞ்ஞானி பக்தி நெறியை பின்பற்றி வாழ்கிறான்.*

*மரணத்தைப்பற்றி எப்போதும் சிந்தித்துவர வேண்டும். மரணத்திற்கு பிறகு எதுவும் இருக்காது என்பதை மனத்தில் பதியவைக்க வேண்டும். வேலையின் காரணமாக மக்கள் நகரங்களுக்கு செல்வது போல் நாமும் சில கடமைகளை செய்வதற்காக பிறந்திருக்கிறோம்.*

*பணக்காரனின் ஒரு தோட்டத்தில் வேலைக்காரன் வேலை செய்கிறான்.   இது யாருடைய தோட்டம் என்று யாராவது கேட்டால். இது எங்களுடைய தோட்டம் என்று  சொல்வான். ஆனால் வேலை போய்விட்டால் அங்கிருந்து ஒரு தகரட்டபாவை கூட வெளியே கொண்டு வரமுடியாது. அதேபோல் வாழும்போது சம்பாதித்தவை அனைத்தும் என்னுடையது என்கிறோம்.மரணத்திற்கு பின் எதுவும் எடுத்து செல்ல முடியாது.*

*வேதம், புராணம்,தந்திரம்,ஆறுதரிசனங்கள் இவைகளை பற்றி வாயினால் விவரிக்கலாம்.அதனால் அவைகள் எச்சிலாகிவிட்டன. ஆனால் பிரம்மத்தை வாயினால் விவரிக்க முடியாது. அதனால் அது ஒன்றுமட்டும் எச்சிலாகவில்லை.பிரம்மத்தை நேரில் உணர்ந்தவர்கள் அதை குறித்து வாயால் விவரிக்க முடியவில்லை.*

*உலகியல் ஆசையின் சுவடு இருந்தால்கூட பிரம்மஞானம் கிடைக்காது.பார்ப்பது,கேட்பது,சுவைப்பது,தொடுவது போன்றவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருந்தால்தான் பிரம்மஞானம் கிடைக்கும்.ரிஷிகள் தனிமையில் அமர்ந்து நாள் முழுவதும் தியானம்செய்வார்கள்.அதானால் தான் அவர்களால் பிரம்மஞானம் பெற முடிந்தது.*

*கலியுகத்தில் மனிதன் உணவை நம்பி இருக்கிறான். உணவை சார்ந்து இருக்கும்வரை உடல் உணர்வு நீங்காது. உடல் உணர்வு உள்ளவர்கள் நானே பிரம்மம் என்று சொல்வது நல்லதல்ல. உடல் உணர்வு யாருக்கு இல்லையோ அவர்கள் தான் நானே அது என்று சொல்ல தகுதியானவர்கள்.*

*உடல் பிரம்மமல்ல, மனம் பிரம்மமல்ல,இந்த உலகம் பிரம்மல்ல இதுவல்ல,இதுவல்ல என்று ஆராய்ந்து பிரம்மத்தை அறிந்த பின். அந்த பிரம்மமே உடலாகவும்,மனமாகவும்,இந்த உலகமாகவும் ஆகியிருப்பதை காண்கிறான்.பிரம்மத்தை அறிந்தவன் ஞானி. அந்த பிரம்மமே அனைத்துமாக ஆகியிருப்பதை காண்பவன் விஞ்ஞானி.*

*உங்களுக்கு ஒரு மகாமந்திரம் சொல்கிறேன் கேளுங்கள். எல்லாவற்றையும் துறந்து கடவுளை நம்பி இருங்கள். அவரே உண்மை,மற்ற அனைத்தும் நிலையற்றவை. அவரை அறியவில்லை என்றால் மற்ற அனைத்தும் இருந்தும் வீண். அவரை அறியாமல் வாழ்வதுவீண். இதுதான் மகாமந்திரம்.*

*கழுகுகள் மிக உயரத்தில் பறக்கின்றன. ஆனால் அதன் பார்வை கீழே உள்ள அழுகிய பிணங்களை தேடுவதிலேயே இருக்கும். அதேபோல் மத கருத்துக்களை பேசும் பண்டிதர்கள் பார்வை எல்லாம் காமத்தின்மீதும் பணத்தின்மீதும்தான் இருக்கும்.*

*விளக்கின் வெளிச்சத்தில் ஒருவன் பகவானைபற்றிய புத்தகத்தை படிக்கிறான்.மற்றொருவன் திருட்டுகையெழுத்து போடுகிறான்.சூரியன் நல்லவனுக்கும் ஒளி தருகிறது தீயவர்களுக்கும் ஒளி தருகிறது. அதேபோல் பிரம்மம்(உருவமற்ற இறைவன்) நல்லவர்களிடமும் தீயவர்களிடமும் அனைவரிடமும் உள்ளார்.*

*பாம்பின் வாயில் விசம் இருக்கிறது. பாம்பு ஒருவனைக் கடித்தால் அவன் இறந்துவிடுவான் ஆனால் பாம்பை விசம் பாதிக்காது. அதேபோல் இந்த உலகத்தில் உள்ள துன்பம் பாவம் அமைதியின்மை போன்றவற்றால் பிரம்மம் பாதிக்கப்படுவதில்லை. உயிர்கள்தான் இவற்றால் பாதிக்கப்படுகின்றன.*

*மேற்கு இந்தியாவில் பெண்கள் குடத்தை தலையில் சுமந்தபடி வெகுதொலைவு நடந்து செல்வார்கள்.அவர்கள் மனம் முழுவதும் குடத்தின்மீதே இருக்கும். அதேவேளையில் சிரித்துபேசியபடியே நடப்பார்கள். அதேபோல் இல்லறத்தில் வாழ்பவர்கள் இறைவனை தலையில் தாங்கிய வண்ணம் வாழவேண்டும்.மனம்முழுவதும் இறைவனிடம் இருக்கவேண்டும்.இல்லற கடமைகளையும் செய்ய வேண்டும்.*

*நேரான வழியில் செல்லாமல் சுற்றிவழைத்து செல்லும் வழியில் சென்றால், சென்று நேரவேண்டிய இடத்தை அடைவது காலதாமதமாகலாம்.* *அதேபோல் இறைவனைப் பற்றி குருவிடமிருந்து கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும்.*
*இல்லாவிட்டால் முக்தி கிடைக்க காலதாமதம் ஆகலாம். பல பிறவிகள்கூட காத்திருக்கவேண்டிவரலாம்.*
*பெரிய மரக்கட்டை தானும் மிதக்கும், அதன்மேல் ஏறிக்கொள்பவர்களையும் தாங்கிக்கொள்ளும்.*

*குரு என்பவர் பெரிய மரக்கட்டை போன்றவர்கள் .உலகை வழிநடத்துவதற்காக ஒவ்வொரு யுகத்திலும் இறைவனே குருவாக அவதரிக்கிறார்..*

*எல்லாம் இறைவன் செயல். மனிதன் என்பவன் இறைவன் கையில் ஒரு கருவி. மனிதன் வீடு இறைவன் அதற்குள் குடியிருப்பவன். மனிதன் எந்திரம் இறைவன் அதை இயக்குபவர். இறைவன் எப்படி பேச வைக்கிறானோ அதேபோல் மனிதன் பேசுகிறான் என்று உணர்பவன் ஞானி. இந்த அறிவு வந்தால் அது தான் ஞானம்.*


*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*   

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!* 

                        *#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_நட்பே.*

 *#வாழ்க_வளமுடன்.*

No comments:

Post a Comment