Followers

Friday 9 November 2018

*தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள்....*


🔯திருதியை அல்லது அஷ்டமி உடன் கூடிய ரோஹிணி நட்சத்திர நாள்..

🔯சதுர்த்தி அல்லது அஷ்டமி உடன் கூடிய உத்திர நட்சத்திரம் நாள்..


🔯பஞ்சமி திதியும் திருவோணம் கூடிய நாள்..

🔯சஷ்டி திதியுடன் மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள்..

🔯சப்தமி திதியுடன் ரேவதி நட்சத்திரம் கூடிய நாள்...

🔯நவமி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாள்...

🔯தசமி திதியுடன் பூசம் நட்சத்திரம் கூடிய நாள்..

🔯திருதியை அல்லது துவாதசி திதியுடன் அனுஷம் நட்சத்திரம் கூடிய நாள்...

🔯ஏகாதசி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் அல்லது மகம் நட்சத்திரம் கூடிய நாள்..

🔯தசமி திதியுடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாள்...

🔯திரயோதசி திதியுடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய நாள்...

போன்ற நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள் எடுத்தால்
நோய் தீரும்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
 *63 நாயன்மார்கள் வரலாறு -*

 எளிமையாக, தொகுக்கப்பட்டுள்ளது

நாயன்மார் வரலாற்று சுருக்கம்.

1. திருநீலகண்ட நாயனார்:
கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

2. இயற்பகை நாயனார்:
சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3. இளையான்குடிமாற நாயனார்:
நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4. மெய்ப்பொருளார்:
தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5. விறல்மிண்டர்:
சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

6. அமர்நீதியார்:
சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.

7. எறிபத்தர்:
சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8. ஏனாதிநாதர்:
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9. கண்ணப்பர்:
பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

10. குங்கிவியக்கலயர்:
சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

11. மானக்கஞ்சறார்:
தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

12. அரிவாட்டாயர்:
சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13. ஆனாயர்:
புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14. மூர்த்தி நாயனார்:
சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.

15. முருக நாயனார்:
வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

16. உருத்திரபசுபதி:
கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

17. திருநாளைப்போவார்:
தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18. திருக்குறிப்புத் தொண்டர்:
சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19. சண்டேசுர நாயனார்:
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

20. திருநாவுக்கரசர் சுவாமிகள்:
தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21. குலச்சிறையார்:
பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22. பெருமிழலைக் குறும்பர்:
சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.

23. காரைக்கால் அம்மையார்:
இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24. அப்பூதி அடிகள்:
திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.

25. திருநீலநக்கர்:
திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்

26. நமிநந்தி அடிகள்:
ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

27.திருஞானசம்பந்தர்:
ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28. ஏயர்கோன் கலிக்காமர்:
இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்:
திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

30. தண்டி அடிகள்:
கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

31. மூர்க்கர்:
சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

32. சோமாசிமாறர்:
நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

33. சாக்கியர்:
அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

34. சிறப்புலி:
சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்:
பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36. சேரமான் பெருமாள்:
சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

37. கணநாதர்:
சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

38.கூற்றுவர்:
நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39. புகழ்ச்சோழ நாயனார்:
எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

40. நரசிங்க முனையரையர்:
சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

41. அதிபத்தர்:
வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42. கலிக்கம்பர்:
முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43. கலியர்:
வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

44. சத்தி:
சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45. ஐயடிகள் காடவர்கோன்:
மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46. கணம்புல்லர்:
விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்

47. காரி:
காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48. நின்றசீர் நெடுமாறனார்:
திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49. வாயிலார்:
இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50. முனையடுவார்:
அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.

51. கழற்சிங்க நாயனார்:
சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52. இடங்கழி:
அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53. செருத்துணை நாயனார்:
சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54. புகழ்த்துணை:
வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

55. கோட்புலி:
சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56. பூசலார்:
பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57. மங்கையர்க்கரசியார்சை:
சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58. நேசர்:
சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59. கோச்செங்கட் சோழர்:
முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60. திருநீலகண்ட யாழ்ப்பாணர்:
ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்

61. சடையனார் நாயனார்:
சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62. இசைஞானியார்:
சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63. சுந்தரமூர்த்தி நாயனார்:
தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அன்பு தங்களை நிகழ்த்தினார்.

நாயன்மார்கள் வரலாறு எப்படி உருவானது?

நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார்.
அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாயன்மாரின் பட்டியல்
நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு
விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார்.
அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.
* பக்தியே பிரதானம்:
நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.
பெண்கள் வீட்டோடு இருந்த அக்காலகட்டத்தில் காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசி, இசைஞானியார் மற்றும் திலகவதியார், சந்தனத்தாதியார், கமலவதியார்,
ஆகியோர் சிவ பூஜையே பிரதானமாக கொண்டு சிவனாடியார்களுக்கு தொண்டுகள் பல செய்து முக்தியடைந்தது வியக்கத்தக்க ஒன்று.
ஈசன் இன்றி அணுவும் ஆசையாது, காலனை உதைத்த கருணாமூர்த்தியே தன்னலமற்ற பக்தியுடன் நாம் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவோம்; நம் துன்பம், வறுமை, நோய் நீங்கி வாழ்வில் வளங்கள் பல பெறுவோம்.

Sunday 4 November 2018

பிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி..?

#ஆகம_சாஸ்திரத்தின்_அற்புதம்

கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல.

கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது.

அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.

கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.

சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது "சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.

அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.

ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும்.

இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம்.

இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.

அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.

48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள்.

அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம்.

இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.

ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.

பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும்.

இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது.

எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.

சரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும்.

நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும்.

தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.

அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும்.

அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.

6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள்,  பிரதிஷ்டைசெய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்..." என்றார்.

தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறையைப்பற்றி சுந்தரேச சர்மா சிவாச்சாரியார் அவர்கள் கூறும்போது "இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப்பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள்.

இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள்.

பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது.

புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள்.

இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.

தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது.

அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது.

பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.

ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது" என்றார்.

கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை.

அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது.

மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன போலும்.

ஓம்நமசிவாய போற்றி.......

Thursday 1 November 2018

*பல வருஷங்களுக்கு முன்…*
 ஒரு நாள் மாலை வேளை. காஞ்சி ஸ்ரீ மடத்தில், மஹா ஸ்வாமிகளைத் தரிசிக்க ஏகக் கூட்டம். தனது அறையை விட்டு வெளியே வந்த ஸ்வாமிகள், காத்திருக்கும் பக்தர் கூட்டத்தைச் சற்று நின்று உற்றுப் பார்த்து விட்டு, சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். ஒவ்வொருவராக வந்து நமஸ்கரித்து, தங்கள் குறைகளை ஸ்வாமிகளிடம் தெரிவித்து, பரிகாரம் பெற்றுக் கொண்டு நகர்ந்தனர். *பக்தர்கள் வரிசையில் சிறுவன் ஒருவனின் கையை இறுகப் பற்றியபடி நின்றிருந்தார், நடுத்தர வயது மனிதர் ஒருவர். அவர் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. சிறுவன் பேந்தப் பேந்த விழித்தபடி எந்த விதச் சலனமும் இன்றி நின்றிருந்தான்.*

பெரியவாளுக்கு முன் வந்து நின்ற அவர், சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். சிறுவனும் நமஸ்கரித்தான். கண்களை இடுக்கிக் கொண்டு அவரைக் கூர்ந்து பார்த்த மஹா ஸ்வாமிகள், “ஏண்டாப்பா, நீ மயிலாப்பூர் ஆடிட்டர் சங்கர நாராயணன் தானே ? ஏன் இப்பிடி கண் கலங்கிண்டு நிக்கறே ? என்ன சிரமம் ஒனக்கு ?” என்று ஆதரவுடன் விசாரித்தார்.

பெரியவா கேட்டதும் துக்கம் மேலும் அதிகரித்து விட்டது அவருக்கு. கேவிக் கேவி அழுது கொண்டே, “ஆமா பெரியவா. இப்போ எனக்குத் தாங்க முடியாத சிரமம் ஒண்ணு ஏற்பட்டிருக்கு. என்ன பண்ணறதுன்னே தெரியலே… *நீங்க தான் என் தெய்வம். எப்படியாவது நிவர்த்தி பண்ணிக் கொடுக்கணும். வேற கதியில்லே !”* என்று மீண்டும் பெரியவா பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்.

நிலைமையை உணர்ந்த பெரியவா, வாத்ஸல்யத்தோடு, “சங்கரா…ஒண்ணும் தாபப்படாதே ! சித்த நீ அப்படி ஒக்காந்துக்கோ…இவாள்லாம் பேசிட்டுப் போன அப்புறம் ஒன்ன கூப்பிடறேன் !” என்று எதிரில் கை காண்பித்தார்.

“உத்தரவு பெரியவா…அப்படியே பண்ணறேன் !” என்று கூறி விட்டுச் சற்று தள்ளி எதிரில் அமர்ந்தார் ஆடிட்டர். சுமார் அரை மணி நேரம் கழித்து, பக்தர்கள் ஆச்சார்யாளைத் தரிசித்து விட்டுக் கிளம்பினார்கள். ஸ்வாமிகளுக்குப் பணி விடை செய்கிற இரு இளைஞர்களைத் தவிர, அங்கு வேறு எவரும் இல்லை. ஆடிட்டர் சங்கர நாராயணனை ஜாடை காட்டி அழைத்தார் ஸ்வாமிகள். வந்து நமஸ்கரித்தார் ஆடிட்டர். ஆச்சார்யாள் வாஞ்சையோடு ஆடிட்டரைப் பார்த்து, “சங்கரா…ப்ராக்டீசெல்லாம் நன்னா நடந்துண்டிருக்கோலியோ? நீ தான் ‘லீடிங்’ ஆடிட்டர் ஆச்சே …ப்ராக்டீசுக்குக் கேப்பானேன் ?

அது சரி. ஒன் தகப்பனார் பஞ்சாபகேச ஐயர் தஞ்சாவூர்லே தானே இருக்கார் ? சௌக்கியமா இருக்காரோலியோ ?” என்று கேட்டார். உடனே ஆடிட்டர் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “ப்ராக்டீசெல்லாம் ரொம்ப நன்னா நடக்கிறது பெரியவா. அப்பாவும், அம்மாவும் பம்பாயிலே இருக்கிற என் தம்பி கிட்டே போயிருக்கா. ரெண்டு மாசமாறது. எனக்குத் தான் ஒரு துக்கம் ஏற்பட்டுடுத்து பெரியவா. அதத் தாங்க முடியலே…நீங்க தான் நிவர்த்தி பண்ணிக் கொடுக்கணும்” என்று கூறியபடி அருகில் இருந்த சிறுவனைக் கட்டி அணைத்துக் கதறி அழ ஆரம்பித்தார்.

*சிறுவன் சம்பத்தப்பட்ட ஏதோ ஒரு துக்கம், ஆடிட்டர் சங்கர நாராயணனின் மனதை மிகவும் பாதித்திருக்கிறது என்று நொடிப் பொழுதில் புரிந்து கொண்டது அந்த நடமாடும் தெய்வம்.*

“அழப்படாது சங்கரா..எதுவா இருந்தாலும் புருஷா கண் கலங்கப்படாது! அது சரி…இந்தப் புள்ளையாண்டான் யாரு ? ஒம் புத்ரனா ?” எனக் கேட்டார் ஸ்வாமிகள்.

“ஆமாம் பெரியவா. இவன் என் பையன் தான். பேரு சந்திரமௌலி. இவனுக்குத் தான் பெரியவா திடீர்னு..” என்று மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க நின்றார் சங்கர நாராயணன்.

உடனே ஆச்சார்யாள் கவலை தோய்ந்த முகத்தோடு, “சங்கரா ! இவனுக்கு திடீர்னு என்னாச்சு ? சந்திரமௌலி ஸ்கூல்லே படிச்சுண்டிருக்கானோலியோ… பதட்டப்படாம விவரமா சொல்லேன் !” என்று ஆறுதலாகச் சொன்னார்.

சங்கர நாராயணன் கண்களைத் துடைத்தபடி, “பெரியவா…பையன் சந்திரமௌலி மயிலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூல்லே ஏழாவது படிச்சுண்டிருக்கான். பன்னெண்டு வயசாறது. படிப்புலே கெட்டிக்காரன். க்ளாஸ்லே இவன் தான் பர்ஸ்ட்.  *இருவது நாளக்கு முன்னாலே ஒரு நாள் காத்தாலேர்ந்து பேச்சு நின்னுடுத்து பெரியவா. கேட்டா, ‘பேச முடியலே’ னு ஜாடை காட்றான். அன்னிலேர்ந்து ஸ்கூலுக்குப் போகலே.* சாப்பாடு, டிபனெல்லாம் வழக்கம் போல் சாப்பிடறான்…. நன்னா தூங்கறான். அதெல்லாம் சரியா இருக்கு பெரியவா. ஆனா பேச்சு தான் வரல்லே… நா என்ன பண்ணுவேன்.. நீங்க தான் கிருபை பண்ணி, இவனைப் பேச வைக்கணும் !” என்று கண்களில் நீர் வழியப் பிராத்தித்தார்.

ஸ்வாமிகள் சற்று நேரம் மௌனம் காத்தார். பிறகு ஆடிட்டரிடம், *“பையனை அழைச்சுண்டு கோயில் குளத்துக்கு எல்லாம் போறது உண்டா ? சந்திரமௌலீக்கு ஸ்வாமி கிட்டே பக்தி உண்டோல்லீயோ ?”*

*“நிறைய உண்டு பெரியவா. கந்த சஷ்டி கவசம், ஆஞ்சநேயர், ராமர் ஸ்லோகங்களை எல்லாம் நித்யம் கார்த்தாலே குளிச்சுப்டு, ஸ்வாமி படத்துக்கு முன்னாடி நின்னு சொல்லிட்டுத் தான் ஸ்கூலுக்குக் கிளம்புவான். ஆத்லே (வீட்டில்) பெரிய கோதண்ட ராமர் படம் ஒண்ணு உண்டு பெரியவா. எங்க தாத்தா காலத்து தஞ்சாவூர் படம் அது. நித்யம் காலம்பற – சாயங்காலம் அத நமஸ்காரம் பண்ணிப்டு சீதா ராமன் திருவடிகளை நிறைய வாட்டி தொட்டுக் கண்ணுலே ஒத்திண்டே இருப்பான்.* “சீதையையும் ராமனையும் எனக்கு ரொம்பவும் புடிக்கும்’ னு அடிக்கடி சொல்லிண்டுருப்பான். வாரத்துலே ரெண்டு மூணு நாள் அவன் அம்மாவோட கபாலீஸ்வரர், முண்டகக் கண்ணி அம்மன், லஸ் ஆஞ்சநேயர் கோயிலுக்கெல்லாம் போய் தரிசனம் பண்ணுவான். அப்படிப்பட்ட நல்ல கொழந்தைக்கு இப்படி ஆயிடுத்தே பெரியவா..” சங்கர நாராயணனால் துக்கத்தை அடக்க முடியவில்லை. மீண்டும் கேவிக் கேவி அழ ஆரம்பித்தார்.

அவரை சமாதானப் படுத்திய ஆச்சார்யாள், சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டுக் கேட்டார். “மயிலாப்பூர்லே நடக்கிற உபன்யாசத்துக்கெல்லாம் இவனை அழைச்சுண்டு போற வழக்கமுண்டோ ?”

“உண்டு பெரியவா! சில நேரம் நா அழச்சுண்டு போவேன். இவனுக்கு பேச்சு நின்னு போன அன்னிக்கு மொத நாள் சாயங்காலம் கூட, நான் தான் இவனை ரசிக ரஞ்சனி சபாவுலே நடந்த இராமாயண உபன்யாசத்துக்கு அழைச்சிண்டு போயிருந்தேன். சிரத்தையா கேட்டான். மறு நாள் இப்படி ஆயிடுத்து !”

சிரித்துக் கொண்டே, “ராமாயணம் கேட்டதினாலே தான் இப்படி ஆயிடுத்துன்னு சொல்ல வர்றியா ?” என்று கேட்டார் ஆச்சார்யாள்.

*“ராம ராம ! அப்படி இல்லே பெரியவா ! அதுக்கு அடுத்த நாள்லேங்கறத்துக்காகச் சொல்ல வந்தேன் !”* என கன்னத்தில் போட்டுக் கொண்டார் ஆடிட்டர்.

“அது சரி. உபன்யாசம் பண்ணினது யாரோ ?” என வினவினார் பெரியவா.

“ஸ்ரீ வத்ஸ ஜெயராம சர்மா, பெரியவா !”

“பேஷ்…பேஷ்…சோமதேவ சர்மாவோட புத்ரன். நல்ல பரம்பரை. ரொம்ப வாசிச்சவா…அது போகட்டும் சங்கரா. பையனை யாராவது டாக்டர் கிட்டே காமிச்சியோ ?”

“காமிச்சேன் பெரியவா !”

“எந்த டாக்டர் ?”

“டாக்டர் சஞ்சீவி !”

“அவர் என்ன சொல்லறார் ?” – பெரியவா.
0
“டெஸ்ட்டெல்லாம் பண்ணிப்புட்டு, ‘குரல்வளைலே ரெண்டு நரம்பு பாதிக்கப்பட்டிருக்கு. ஒரு ஆபரேஷன் பண்ணினா சரியாயிடலாம்’ னு சொன்னார் பெரியவா. ”

“நிச்சயமா சரி ஆயிடும்னு சொல்லலியா ?”

“அப்படி உறுதியா சொல்லலே பெரியவா.. *எப்படியாவது நீங்க தான் இவனுக்குத் திருப்பியும் பேச்சு வரும்படி பண்ணனும். நீங்க தான் காப்பாத்தணும் ❗”*

சற்று நேர மௌனத்துக்கு பிறகு பேசினார் ஆச்சார்யாள். ” நீ ஒரு காரியம் பண்ணு சங்கரா. பையன் சந்திரமௌலியை அழைச்சுண்டு போய், இந்த ஊர்லே இருக்கிற கோயில்களுக்குப் போய் தரிசனம் பண்ணிப் பிரார்த்தனை பண்ணிண்டு வா. ராத்திரி மடத்துலேயே பலகாரம் பண்ணிட்டு தங்கிடு. கார்த்தாலே ஸ்நானம் பண்ணி, அனுஷ்டானம் இருந்தா அதையெல்லாம் முடிச்சுண்டு பத்து மணிக்கு வந்து என்னைப் பாரு !”

ஆச்சார்யாள் சொன்ன வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருந்தன சங்கர நாராயணனுக்கு ! பெரியவாளை நமஸ்கரித்து விட்டு இருவரும் ஆலய தரிசனத்துக்குப் புறப்பட்டனர்.

அடுத்த நாள் காலை பத்து மணி. முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தனர், அந்த நடமாடும் தெய்வம் முன். அதிகக் கூட்டமில்லை. ஐந்தாறு பேர் காத்திருந்தனர். அனைவரும் தரிசித்துச் சென்றனர்.

ஆச்சார்யாளை நமஸ்கரித்து, கை கட்டி நின்றார் சங்கர நாராயணன். சந்திரமௌலியும் நமஸ்கரித்து எழுந்தான். ஸ்வாமிகள் அவனையே உற்றுப் பார்த்து விட்டுப் பேசினார்:
*“சங்கரா…ஒரு கார்யம் பண்ணு. சந்திரமௌலீயையும் அழைச்சிண்டு போய், மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில்லே அம்பாளுக்கு ஒரு பூர்ணாபிஷேகம் பண்ணி, அத தரிசனம் பண்ணி வை. அப்புறமா நீ என்ன பண்ணறே…அதே ஸ்ரீ வத்ஸ ஜெயராம சர்மா வேற எங்கேயாவது பூர்த்தியா ஸ்ரீமத் ராமாயணம் சொல்றாரானு பாரு…அப்படி எங்கேயாவது கோவில்லேயோ, சபாவிலோ சொல்லறார்னா… நீ ஒரு கார்யம் பண்ணு. சுந்தர காண்டத்தில் இருந்து ஸ்ரீ சீதாராம பட்டாபிஷேக வைபவம் வரைக்கும் சந்திரமௌலியை கூட அழைச்சுண்டு போய் ‘ஸ்ரவணம்’ (கேட்டல்) பண்ணி வை ! ஸ்ரீ சீதாராமப் பட்டாபிஷேகப் பூர்த்தி அன்னிக்கு என்ன பண்ணறே… நல்ல மலை வாழைப்பழமா பார்த்து வாங்கிண்டு போய் ‘பௌராணிகர்’ (உபன்யாசகர்) கைல கொடுத்து, ரெண்டு பேருமா அவரை சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுங்கோ.*

*மனசுக்குள்ளே அந்தப் பட்டாபிஷேக ஸ்ரீ சீதாராமனையும், பௌராணிகரையும் பிரார்த்தனை பண்ணிக்கோ… அந்தப் பட்டாபிராமன் காப்பாத்துவான். கவலையே படாதே…போயிட்டு வா’ என்று இருவருக்கும் பிரசாதம் கொடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்து அனுப்பி வைத்தது அந்தப் பரப்பிரம்மம்.*

சென்னையில் எங்கேயாவது ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவின் ஸ்ரீமத் ராமாயணப் பிரவசனம் நடைபெறுகிறதா’ என்று தினமும் நாளிதழ்களில் ‘இன்றைய நிகழ்ச்சிகள்’ பகுதியைப் பார்த்து வந்தார் ஆடிட்டர்.

அன்றைய பேப்பரில், *‘🌹மயிலை ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா கோயிலில் ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவின் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் ‘நவாஹ’ மாக (9 நாட்கள்) நடைபெறும்’ என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருந்தது.*

அன்று *சுந்தர காண்டம் பகுதி ஆரம்பம். சந்திரமௌலியுடன் ஷிர்டி சாய் பாபா கோவிலுக்குப் போனார் சங்கர நாராயணன். உருக்கமான உபன்யாசம். மெய் மறந்து கேட்டான் சந்திரமௌலி. சில நேரம் அவன் கண்களில் இருந்து நீர் பெருகியது. அப்போதெல்லாம் அவன் முதுகில் தடவிக் கொடுத்து, ஆசுவாசப் படுத்தினார் சங்கர நாராயணன்.*

அன்று *ஸ்ரீமத் இராமாயண உபன்யாச பூர்த்தி தினம். மயிலை ஷிர்டி சாய் பாபா கோயிலில் நல்ல கூட்டம். இரவு 10.30 மணிக்கு ஸ்ரீ சீதாராம பட்டாபிஷேகம் பூர்த்தி ஆகி, ராமாயணம் கேட்டால் உண்டாகும் பலன்களைச் சொல்லி முடித்தார் ஸ்ரீ வத்ஸ ஜெயராம சர்மா. ஒவ்வொருவராக அவரை நமஸ்கரித்து எழுந்தனர். சங்கர நாராயணனும், சந்திரமௌலீயும் அவரை நமஸ்கரித்து எழுந்தனர். தான் வாங்கிச் சென்றிருந்த ஒரு டஜன் பெரிய வாழைப் பழ சீப்பை சந்திரமௌலீயிடம் கொடுத்து, ஸ்ரீ வத்ஸ ஜெயராம சர்மாவிடம் சமர்ப்பித்து நமஸ்கரிக்குமாறு கூறினார். அவன் அப்படியே செய்தான்.*

*🌹🌹சந்தோஷத்துடன் பழச் சீப்பை வாங்கிய அவர், தனக்குப் பின்புறமிருந்த ஸ்ரீ ராம பட்டாபிஷேக திருவுருவப் படத்துக்கும், ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா படத்துக்கும் அதைக் காட்டி அர்ப்பணித்தார். பிறகு அதிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்து, சந்திரமௌலியிடம் கொடுத்து, “கொழந்தே…நீ க்ஷேமமா இருப்பே. இந்த இரண்டு பழத்தையும் நீயே சாப்பிடு!” என்று கூறி ஆசீர்வதித்தார். கோயிலை விட்டு, வெளியே வந்ததும், அந்த இரு பழங்களையும் சாப்பிட்டான் சந்திரமௌலி.*

*🌹🌹அடுத்த நாள் காலையில், ஒரு அதிசயம் நிகழ்ந்தது. குளியல் அறையில் பல் துலக்கி விட்டு, ஹாலுக்கு வந்த சந்திரமௌலி, “அம்மா, காபி ரெடியா?” என்று உரக்கக் குரல் கொடுத்தான்.* பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவன் அப்பாவும், சமையல் அறையில் இருந்த அம்மாவும் தூக்கி வாரிப் போட்டபடி ஹாலுக்கு ஓடோடி வந்தனர். அங்கு சிரித்தபடி நின்றிருந்தான் சந்திரமௌலி.

“காபி ரெடியானு நீயாடா குரல் கொடுத்தே சந்திரமௌலி !” என்று ஆனந்தம் பொங்க அவனைக் கட்டி அணைத்து, முத்தமிட்டாள் அம்மா. சங்கர நாராயணன், அவனைத் தோளில் தூக்கி வைத்துக் கூத்தாடினார்.
 *🌹🌹சந்திரமௌலி சரளமாகப் பழையபடி பேச ஆரம்பித்தான். தெரிந்தவர்கள் அத்தனை பேரும் வந்து பார்த்து, சந்தோஷப்பட்டனர்.*

அன்று மாலை 5.30 மணி. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் மஹா ஸ்வாமிகள் ஏகாந்தமாக உட்கார்ந்திருந்தார். கூட்டம் அவ்வளவாக இல்லை. பத்து அல்லது பதினைந்து பேருடன் வேன் ஒன்றில் வந்தார் ஆடிட்டர் சங்கர நாராயணன்.

சந்திரமௌலீயுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தார் ஆடிட்டர். சிரித்தபடியே *ஆச்சார்யாள் கேட்ட முதல் கேள்வி: “சந்திரமௌலி…இப்போ நன்னா பேச வந்துடுத்தோல்லியோ ? பேஷ்…பேஷ்! எல்லாம் அந்த சீதாராமனோட கிருபை !”*

உடனே அந்த சந்திரமௌலி, “ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…காமகோடி சங்கர…” என்று உரக்க கோஷமிட்டான். அனைவரும் மெய் மறந்து நின்றிருந்தனர்.

சற்று நேரத்துக்குப் பிறகு அந்தப் பரப்பிரம்மம் பேசியது: “சங்கரா…இப்போ சொல்றேன், கேளு. சந்திரமௌலிக்கு இப்டி திடீர்னு ஏற்பட்டதுக்கு வேற ஒண்ணும் காரணமில்லே. *அவனுக்கு இயற்கையாகவே சீதாதேவி கிட்டேயும், ஸ்ரீ ராமனிடமும் அளவு கடந்த பிரியமும், பக்தியும் இருந்திருக்கு. அவாளுக்கு ஒரு சிரமம்னா அதை இவனாலே தாங்கிக்க முடியாது ! மொதல்லே உபன்யாசத்த இவன் கேக்கற அன்னிக்கு ஜெயராம சர்மா, சீதா பிராட்டியை ராவணன் அபகரிச்சுண்டு போற ‘கட்ட’ த்த சொல்லி இருக்கணும். நான் சொல்லறது சரி தானே (சரி தானா) சங்கரா…?”*

பிரமித்து நின்ற ஆடிட்டர் வாய் திறந்து, *“அதேதான் பெரியவா..அதேதான் ! அன்னிக்கு அந்தக் கட்டத்தைத் தான் ரொம்ப உருக்கமாகச் சொன்னார் !” என ஆமோதித்தார்.*

*🌹ஸ்வாமிகள் தொடர்ந்தார்: “நாம அளவு கடந்த பக்தியும், ஆசையும் வெச்சுண்டிருக்கிற மாதா சீதையை, ஒரு ராட்சஷன் தூக்கிண்டு போறான்கறதைக் கேட்ட ஒடனே இவனுக்கு உள்ளூரப் பிரமை புடிச்சு ஸ்தம்பிச்ச நெலமை ஏற்பட்டுடுத்து. பேச்சும் ஸ்தம்பிச்சுடுத்து. வேற ஒண்ணுமில்லை. இதுக்கு ஒரே நிவர்த்தி மார்க்கம் என்ன ? அதே பௌராணிகர் வாயாலேயே ‘அம்மா சீதைக்கு ஒரு சிரமும் இல்லாம திரும்பவும் மீட்டுண்டு வந்தாச்சு’ ங்கறத இவன் காதாலே கேட்டுட்டா மனசையும் வாக்கையும் அமுத்திண்டு இருக்கிற அந்த பிரமை விட்டுப் போயிடும்னு தோணித்து. அதனாலே தான் அப்படிப் பண்ணச் சொன்னேன். சீதாராமன் கிருபையாலே எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. சந்திரமௌலி…நீ பரம க்ஷேமமா இருப்பே !”*