Followers

Saturday 18 August 2018

அஞ்சுவதும்_அடிபணிவதும்
#ஈசன்_ஒருவனுக்கே. இது சரியா ??

அச்சம் என்ற உணர்வை நீக்கி, அரவணைப்பு என்று உணர்த்தி, அஞ்சேல் என்ற துணிவும் அருள்வதே இறைவன்,

அச்சம் என்ற உணர்வு ஓர் சிறு துளி இருக்கும் என்றாலும், ஒன்றால், சமர்ப்பணம், காதல், பரிபுரனத்துவம் எப்படி நடைபெறும்,

அஞ்சவைப்பதும், அடிபணியவைப்பதும், படைப்புகள் குணமே, அது எப்படி படைத்தவனை குறிக்கும்,

நம் விட்டிலேயே எடுத்துகொள்வோம் அப்பாவை காட்டி பயமுறுத்தி நம்மை வளர்ப்பதாலேயே நம் தந்தையோடு ஆத்மார்த்தமாக ஒன்றுவது இல்லை, அந்த ஒன்றால் தாயிடம் இருப்பது போல தந்தையிடம் இருப்பது இல்லை, காரணம் அச்சம் என்ற உணர்வின் பிரதிபலிப்பு !!

இதே போல இறைவன் கண்ணை குத்தும், உன்னை சும்மாவிடாது, அப்படி இப்படி என்று பயமுறுத்தியே, நம்மோடு இரண்டற கலந்த இறைவனை பிரித்து பார்த்து, நாம் தவறு என்று செய்வதில் இறைவனுக்கு இடமில்லை என்று பூஜை அறையில் துணிகொண்டு மூடுவது, கதவை சாற்றிவிட்டு, உங்கள் இஷ்டம் போல இருப்பது,

உங்களை இப்படி, இங்கே, இருக்கவைப்பது, வைத்துக்கொண்டு இருப்பது யார் ?

இந்த அச்சம் என்ற உணர்வு இறைவனை பிரித்து பார்க்கவே வைக்கும், அவனின்றி ஏதுமில்லை என்று வாய் அளவே சொல்ல வைக்கும் !!

அவனின்றி ஏதுமில்லை என்று அனுபவித்து எதிலும், எப்போதும் வாழவைக்குமா ??

அஞ்சேல் ( அச்சபடாதே ) என்று அருளியவாறு யார்பெறுவார் அச்சோவே !! என்று அனைத்துமாய் இறைவனை அனுபவித்தவர்கள் வாக்கு !!

அச்சம் நீக்கவே இறைவன், அஞ்சவேண்டாம் உன்னுள் நானே என்று இருக்கிறேன், என்று தெளிவு படுத்துவதே இறைவனை அனுபவிக்கும் வழிபாடு !!
எனவே அச்சத்தை ஒருபோதும் இறைவனோடு - சிவத்தோடு இணைத்து நினைக்ககூட செய்யாதிர்கள் !!

அடிபணிவது என்று தனித்து ஏதும் இல்லை, சிவமாகி பிரபஞ்சத்தில் இருக்கும் யாவும் அவனுள் இருப்பதே, இதில் நீ அடிபனியவேண்டும் என்று ஒரு போதும் இறைவன் நினைப்பது இல்லை, அனுபவித்து வாழவேண்டும் என்றே வாழ்விக்கிறான் !!

ஆப்படியே அடிபணியாது வாழ்ந்த காலம் எத்தனை ?? அடிபணியாது காக்கப்பட்ட பிறவிகள் எத்தனை ?? அதையெல்லாம் கடந்துதானே இப்போது இருக்கிறாய், அப்போதே நீ அடிபணியவில்லை என்று உன்னை அழித்து இருக்க வேண்டாமா இறைவன் !!

உன்னை யாரிடமும் அடிமைப்பட்டு அடிபணித்து கிடக்கக்கூடாது என்றே வாழ்விக்கும் இறைவன் அவனிடம் அடிபணிந்து கிடக்கவேண்டும் என்று என்னுவானா !!

உன்னுடைய விருப்பமே இறைவனுக்கு அடிபணித்து கிடக்கவேண்டுமா, இல்லை ஏதாவது எவனாவது தருவான் என்று நம்பிக்கொண்டு அடிபணிந்து கிடக்கிறாயா ?? என்பதே !!

மெய்யாய் இறைவன் யாரையும் அடிபணித்து கிடக்கவேண்டும் என்று எண்ணுபவன் அல்ல !!

உன்னை ஏன் அடிபணித்து கிடக்கிறாய் என்று தெளிவுபடுத்தி, அதற்காக நீ வரவில்லை என்ற மெய்யை உணர்வித்து அரவணைத்து அருள்வதே கருணையாளன் திருவருள் !!

மெய்யை உணருங்கள்,
அச்சம் என்ற உணர்வு எதையும் நெருங்கவிடாது விளக்கி வைக்கும், உண்மையான காதல், பந்தம், சிவமே என்று அனுபவிக்கும் ஆன்மா எதுவும் அச்சம் என்ற உணர்வு ஓர் துளிகூட இல்லாது இறைவனை அனுபவிக்கும் !!

அச்சம் தவிர்ப்பவனே இறைவன், அனுபவித்து வாழ்விப்பவனே இறைவன், மெய்யை உணருங்கள் !!

மெய்யானவன் திருவருளால், அனுபவிக்கும் அற்புதமே, அனுபவிக்க காரனமாவன் கருணையால், பதிவாக !!

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே...

No comments:

Post a Comment