Followers

Friday 14 December 2018

,

#கல்_கருடன்_உருவான_கதை செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழனின் அந்த சாம்பல் நிறப்பட்டத்துப் புரவி, அரசலாற்றங்கரையில் வந்து நின்றபோது மாலைப்பொழுது முற்றத் தொடங்கியிருந்தது. கரையோரத்து மரங்களிலிருந்து கூடு திரும்பிய பறவைகள் எழுப்பிய கூச்சல் எந்த இசைக் கருவியும் எழுப்ப முடியாத இன்னிசையை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த இரைச்சலை ரசித்தபடியே புரவியை விட்டு இறங்கினான் மன்னன் செங்கட்சோழன். நெடுநெடு’வென்ற உயரத்துடனும் ஆஜானு பாகுவான தேகத்துடனும், புரவியிலிருந்து இறங்கியவனின் பெயருக்கேற்றபடி சிவந்து கிடந்த விழிகளில் அரசலாற்றங்கரையிலிருந்து வடக்கே பிரிந்த பாதையில் சற்றுத் தொலைவில் இரண்டொரு பந்தங்களும் பத்துப் பதினைந்து குடில்களும் புலப் பட்டன. புரவியைப் பிடித்தபடி மெல்ல நடந்தவன், குடில்களை நெருங்க நெருங்க, பாதை நன்றாகச் செப்பனிடப்பட்டிருப்பதையும், இரு புறங்களிலும் மலர்ச்செடிகளும் கொடிகளும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருப்பதையும் கவனித்தான். அதுமட்டுமின்றி, பாதையின் இரு புறங்களிலும் கல் இருக்கைகள், உடைக்கப்பட்ட சில பாறைகள், யானைகள், குதிரைகள் பறவைகளின் கற் சிற்பங்கள் மட்டுமின்றி, அழகிய பெண்களின் சிற்பங்களும், ஓரிரு மன்னர்களின் சிற்பங்களும் கூடத் தென்பட்டன. அந்தத் தமிழகத்து மன்னர்களின் சிற்பவரிசையில் தனது சிற்பமும் கூட நிற்பதைக் கவனித்தவன், முகத்தில் முறுவல் ஒன்று நெளிந்தது. தேவசேனாபதி யாரின் சிற்பக் கூடத்தில் பயில வட நாட்டிலிருந்தும்கூட சீடர்கள் வருகிறார்கள் என்றால் அதற்குக் காரண மிருக்கவே செய்கிறது" என்று முணுமுணுத்துக் கொண்டவன், பிரதான மாகத் தெரிந்த குடிலை நெருங்க முற்பட்டான். பிரதானக் குடிலின் முன்பாக தரையில் கருங்கல்லால் தளமிடப்பட்டு நடுவில் உயரமான கம்பமொன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. மன்னன் அந்தக் கல்தளத்தில் கால்களைப் பதித்து இரண்டொரு அடிகள் நடக்கு முன்பாக, குடில்களின் கதவுகள் திறக்கப்பட்டு ஏந்திய பந்தங்களுடன் சிற்பியாரின் சீடர்கள் வெளிவந்தனர். மன்னனை நெருங்கிய சீடர்கள், வந்திருப்பவர் மன்னர் என்பதைக் கண்டு கொண்டதும் அவர்களில் ஒருவன் குடில்களின் வரிசையில் பின்னால் சற்றுத் தள்ளி தெரிந்த பெரும் குடிலை நோக்கிப் பறந்தான். சற்று நேரத்தில் சிற்பியார் வெளெரென்ற உடையும், அதைவிட வெளுத்து நீண்டுக் கிடந்த தாடி மீசையும் அரசலாற்றுக் காற்றில் வேகமாக அசைய, அரை ஓட்டமாகவே மன்னனை நோக்கி வந்தார். வர வேண்டும், வர வேண்டும் மன்னா..." என்று வரவேற்றவர், முன்னறிவிப்போ உடன் காவலரோ இன்றி தாங்கள் இப்படித் தனித்து வரலாமா" என்று கடிந்துகொள்ளவும் செய்தார். மன்னன் முகத்தில் மந்தகாசம் விரிந்தது. ஆசார்யரே, நான் இங்கு மன்னனாக வர வில்லை. உமது பழைய சீடனாகத்தான் வந்திருக்கிறேன். அதுவும் உம்மிடம் ஏற்கெனவே நான் கேட்டிருந்தபடி உதவி கேட்டு" என்றான். தமது சீடர்களை நோக்கிய சிற்பி, சீடனே,சென்று கனிகளையும் பாலையும் எடுத்துக் கொண்டு எனது குடிலுக்கு வந்து சேர்" என்று உத்தரவிட்டு மன்னனின் கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டு தமது குடிலை நோக்கி நடந்தார். சீடன் கொண்டு வந்த கனிகளையும் பாலையும் அருந்திய மன்னன், சிற்பியை ஏறெடுத்தான். மன்னனின் சிவந்த விழிகளில் புலப்பட்ட கேள்வியைப் புரிந்துகொண்ட சிற்பியாரின் முகத்தில் முறுவல் விரிந்தது. மன்னவா, நீ கேட்டபடி என் சீடனொருவனை உனக்குப் பரிசாக அனுப்பிவைக்கிறேன். முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன். அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன். நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்" என்றவர், சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா" என்றார். சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பி யையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது. கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது. இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா" என்ற சிற்பி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப் போகிறா?" என்றும் வினவினார். மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது, திருநறையூருக்கு" என்று. ‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு. மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான். மயூரா... ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறா?" என்றான் மன்னன். மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?" மயூரனின் பதில் கேள்வி யாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது. இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன். மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும். மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்." மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம் வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன். சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன். மயூரசன்மனின் விழிகள் மின்னின. மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும். பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன். செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன். தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் நிற்கிறது. மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது

Saturday 1 December 2018


!!*அமாவாசையை பற்றிய சில தெய்வீக தகவல்கள்*!! ******************************************************** தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம். ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம். ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள். எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே. இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது. முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும். அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா். ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா். அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா். சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும். வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம். அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம். அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும். உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது. ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள். நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது. அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும். எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை. முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும். அமாவாசை தினம் நமது சமயத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றது..! தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது..! அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமாவாசையில் பிறந்தவர்கள் புத்தி மிகவும் கூர்மையாக செயல் புரியும் ஆகையால் அவர்கள் அறிவை சரியான முறையில் செயல் படுத்தினால் மிக உயர்ந்த இடத்திற்க்கு செல்ல முடியும். அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.அமாவாசைப் பிறவிகளில் அனேகருக்கு தலையில் இரண்டு சுழி இருப்பதாக கூறப்படுகிறது முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. முன்னோர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது உகந்தது.மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்தபோது, அவர்களை சரிவர கவனிக்காததால், அவர்கள் அடையும் துன்பங்கள் யாவும், பாவத்தின் வடிவில் கவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக கூறப்படுகிறது. பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான்.நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள். ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். அமாவாசை வழிபடுவது எப்படி..? ************************************ அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து தெற்கு பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்க்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.செய்ய கூடாதவை அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

Friday 9 November 2018

*தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள்....*


🔯திருதியை அல்லது அஷ்டமி உடன் கூடிய ரோஹிணி நட்சத்திர நாள்..

🔯சதுர்த்தி அல்லது அஷ்டமி உடன் கூடிய உத்திர நட்சத்திரம் நாள்..


🔯பஞ்சமி திதியும் திருவோணம் கூடிய நாள்..

🔯சஷ்டி திதியுடன் மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள்..

🔯சப்தமி திதியுடன் ரேவதி நட்சத்திரம் கூடிய நாள்...

🔯நவமி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாள்...

🔯தசமி திதியுடன் பூசம் நட்சத்திரம் கூடிய நாள்..

🔯திருதியை அல்லது துவாதசி திதியுடன் அனுஷம் நட்சத்திரம் கூடிய நாள்...

🔯ஏகாதசி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் அல்லது மகம் நட்சத்திரம் கூடிய நாள்..

🔯தசமி திதியுடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாள்...

🔯திரயோதசி திதியுடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய நாள்...

போன்ற நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள் எடுத்தால்
நோய் தீரும்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
 *63 நாயன்மார்கள் வரலாறு -*

 எளிமையாக, தொகுக்கப்பட்டுள்ளது

நாயன்மார் வரலாற்று சுருக்கம்.

1. திருநீலகண்ட நாயனார்:
கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

2. இயற்பகை நாயனார்:
சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3. இளையான்குடிமாற நாயனார்:
நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4. மெய்ப்பொருளார்:
தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5. விறல்மிண்டர்:
சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

6. அமர்நீதியார்:
சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.

7. எறிபத்தர்:
சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8. ஏனாதிநாதர்:
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9. கண்ணப்பர்:
பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

10. குங்கிவியக்கலயர்:
சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

11. மானக்கஞ்சறார்:
தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

12. அரிவாட்டாயர்:
சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13. ஆனாயர்:
புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14. மூர்த்தி நாயனார்:
சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.

15. முருக நாயனார்:
வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

16. உருத்திரபசுபதி:
கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

17. திருநாளைப்போவார்:
தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18. திருக்குறிப்புத் தொண்டர்:
சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19. சண்டேசுர நாயனார்:
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

20. திருநாவுக்கரசர் சுவாமிகள்:
தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21. குலச்சிறையார்:
பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22. பெருமிழலைக் குறும்பர்:
சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.

23. காரைக்கால் அம்மையார்:
இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24. அப்பூதி அடிகள்:
திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.

25. திருநீலநக்கர்:
திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்

26. நமிநந்தி அடிகள்:
ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

27.திருஞானசம்பந்தர்:
ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28. ஏயர்கோன் கலிக்காமர்:
இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்:
திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

30. தண்டி அடிகள்:
கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

31. மூர்க்கர்:
சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

32. சோமாசிமாறர்:
நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

33. சாக்கியர்:
அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

34. சிறப்புலி:
சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்:
பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36. சேரமான் பெருமாள்:
சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

37. கணநாதர்:
சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

38.கூற்றுவர்:
நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39. புகழ்ச்சோழ நாயனார்:
எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

40. நரசிங்க முனையரையர்:
சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

41. அதிபத்தர்:
வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42. கலிக்கம்பர்:
முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43. கலியர்:
வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

44. சத்தி:
சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45. ஐயடிகள் காடவர்கோன்:
மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46. கணம்புல்லர்:
விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்

47. காரி:
காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48. நின்றசீர் நெடுமாறனார்:
திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49. வாயிலார்:
இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50. முனையடுவார்:
அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.

51. கழற்சிங்க நாயனார்:
சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52. இடங்கழி:
அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53. செருத்துணை நாயனார்:
சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54. புகழ்த்துணை:
வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

55. கோட்புலி:
சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56. பூசலார்:
பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57. மங்கையர்க்கரசியார்சை:
சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58. நேசர்:
சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59. கோச்செங்கட் சோழர்:
முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60. திருநீலகண்ட யாழ்ப்பாணர்:
ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்

61. சடையனார் நாயனார்:
சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62. இசைஞானியார்:
சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63. சுந்தரமூர்த்தி நாயனார்:
தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அன்பு தங்களை நிகழ்த்தினார்.

நாயன்மார்கள் வரலாறு எப்படி உருவானது?

நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார்.
அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாயன்மாரின் பட்டியல்
நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு
விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார்.
அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.
* பக்தியே பிரதானம்:
நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.
பெண்கள் வீட்டோடு இருந்த அக்காலகட்டத்தில் காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசி, இசைஞானியார் மற்றும் திலகவதியார், சந்தனத்தாதியார், கமலவதியார்,
ஆகியோர் சிவ பூஜையே பிரதானமாக கொண்டு சிவனாடியார்களுக்கு தொண்டுகள் பல செய்து முக்தியடைந்தது வியக்கத்தக்க ஒன்று.
ஈசன் இன்றி அணுவும் ஆசையாது, காலனை உதைத்த கருணாமூர்த்தியே தன்னலமற்ற பக்தியுடன் நாம் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவோம்; நம் துன்பம், வறுமை, நோய் நீங்கி வாழ்வில் வளங்கள் பல பெறுவோம்.

Sunday 4 November 2018

பிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி..?

#ஆகம_சாஸ்திரத்தின்_அற்புதம்

கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல.

கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது.

அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.

கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.

சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது "சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.

அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.

ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும்.

இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம்.

இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.

அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.

48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள்.

அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம்.

இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.

ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.

பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும்.

இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது.

எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.

சரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும்.

நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும்.

தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.

அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும்.

அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.

6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள்,  பிரதிஷ்டைசெய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்..." என்றார்.

தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறையைப்பற்றி சுந்தரேச சர்மா சிவாச்சாரியார் அவர்கள் கூறும்போது "இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப்பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள்.

இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள்.

பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது.

புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள்.

இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.

தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது.

அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது.

பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.

ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது" என்றார்.

கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை.

அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது.

மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன போலும்.

ஓம்நமசிவாய போற்றி.......

Thursday 1 November 2018

*பல வருஷங்களுக்கு முன்…*
 ஒரு நாள் மாலை வேளை. காஞ்சி ஸ்ரீ மடத்தில், மஹா ஸ்வாமிகளைத் தரிசிக்க ஏகக் கூட்டம். தனது அறையை விட்டு வெளியே வந்த ஸ்வாமிகள், காத்திருக்கும் பக்தர் கூட்டத்தைச் சற்று நின்று உற்றுப் பார்த்து விட்டு, சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். ஒவ்வொருவராக வந்து நமஸ்கரித்து, தங்கள் குறைகளை ஸ்வாமிகளிடம் தெரிவித்து, பரிகாரம் பெற்றுக் கொண்டு நகர்ந்தனர். *பக்தர்கள் வரிசையில் சிறுவன் ஒருவனின் கையை இறுகப் பற்றியபடி நின்றிருந்தார், நடுத்தர வயது மனிதர் ஒருவர். அவர் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. சிறுவன் பேந்தப் பேந்த விழித்தபடி எந்த விதச் சலனமும் இன்றி நின்றிருந்தான்.*

பெரியவாளுக்கு முன் வந்து நின்ற அவர், சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். சிறுவனும் நமஸ்கரித்தான். கண்களை இடுக்கிக் கொண்டு அவரைக் கூர்ந்து பார்த்த மஹா ஸ்வாமிகள், “ஏண்டாப்பா, நீ மயிலாப்பூர் ஆடிட்டர் சங்கர நாராயணன் தானே ? ஏன் இப்பிடி கண் கலங்கிண்டு நிக்கறே ? என்ன சிரமம் ஒனக்கு ?” என்று ஆதரவுடன் விசாரித்தார்.

பெரியவா கேட்டதும் துக்கம் மேலும் அதிகரித்து விட்டது அவருக்கு. கேவிக் கேவி அழுது கொண்டே, “ஆமா பெரியவா. இப்போ எனக்குத் தாங்க முடியாத சிரமம் ஒண்ணு ஏற்பட்டிருக்கு. என்ன பண்ணறதுன்னே தெரியலே… *நீங்க தான் என் தெய்வம். எப்படியாவது நிவர்த்தி பண்ணிக் கொடுக்கணும். வேற கதியில்லே !”* என்று மீண்டும் பெரியவா பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்.

நிலைமையை உணர்ந்த பெரியவா, வாத்ஸல்யத்தோடு, “சங்கரா…ஒண்ணும் தாபப்படாதே ! சித்த நீ அப்படி ஒக்காந்துக்கோ…இவாள்லாம் பேசிட்டுப் போன அப்புறம் ஒன்ன கூப்பிடறேன் !” என்று எதிரில் கை காண்பித்தார்.

“உத்தரவு பெரியவா…அப்படியே பண்ணறேன் !” என்று கூறி விட்டுச் சற்று தள்ளி எதிரில் அமர்ந்தார் ஆடிட்டர். சுமார் அரை மணி நேரம் கழித்து, பக்தர்கள் ஆச்சார்யாளைத் தரிசித்து விட்டுக் கிளம்பினார்கள். ஸ்வாமிகளுக்குப் பணி விடை செய்கிற இரு இளைஞர்களைத் தவிர, அங்கு வேறு எவரும் இல்லை. ஆடிட்டர் சங்கர நாராயணனை ஜாடை காட்டி அழைத்தார் ஸ்வாமிகள். வந்து நமஸ்கரித்தார் ஆடிட்டர். ஆச்சார்யாள் வாஞ்சையோடு ஆடிட்டரைப் பார்த்து, “சங்கரா…ப்ராக்டீசெல்லாம் நன்னா நடந்துண்டிருக்கோலியோ? நீ தான் ‘லீடிங்’ ஆடிட்டர் ஆச்சே …ப்ராக்டீசுக்குக் கேப்பானேன் ?

அது சரி. ஒன் தகப்பனார் பஞ்சாபகேச ஐயர் தஞ்சாவூர்லே தானே இருக்கார் ? சௌக்கியமா இருக்காரோலியோ ?” என்று கேட்டார். உடனே ஆடிட்டர் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “ப்ராக்டீசெல்லாம் ரொம்ப நன்னா நடக்கிறது பெரியவா. அப்பாவும், அம்மாவும் பம்பாயிலே இருக்கிற என் தம்பி கிட்டே போயிருக்கா. ரெண்டு மாசமாறது. எனக்குத் தான் ஒரு துக்கம் ஏற்பட்டுடுத்து பெரியவா. அதத் தாங்க முடியலே…நீங்க தான் நிவர்த்தி பண்ணிக் கொடுக்கணும்” என்று கூறியபடி அருகில் இருந்த சிறுவனைக் கட்டி அணைத்துக் கதறி அழ ஆரம்பித்தார்.

*சிறுவன் சம்பத்தப்பட்ட ஏதோ ஒரு துக்கம், ஆடிட்டர் சங்கர நாராயணனின் மனதை மிகவும் பாதித்திருக்கிறது என்று நொடிப் பொழுதில் புரிந்து கொண்டது அந்த நடமாடும் தெய்வம்.*

“அழப்படாது சங்கரா..எதுவா இருந்தாலும் புருஷா கண் கலங்கப்படாது! அது சரி…இந்தப் புள்ளையாண்டான் யாரு ? ஒம் புத்ரனா ?” எனக் கேட்டார் ஸ்வாமிகள்.

“ஆமாம் பெரியவா. இவன் என் பையன் தான். பேரு சந்திரமௌலி. இவனுக்குத் தான் பெரியவா திடீர்னு..” என்று மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க நின்றார் சங்கர நாராயணன்.

உடனே ஆச்சார்யாள் கவலை தோய்ந்த முகத்தோடு, “சங்கரா ! இவனுக்கு திடீர்னு என்னாச்சு ? சந்திரமௌலி ஸ்கூல்லே படிச்சுண்டிருக்கானோலியோ… பதட்டப்படாம விவரமா சொல்லேன் !” என்று ஆறுதலாகச் சொன்னார்.

சங்கர நாராயணன் கண்களைத் துடைத்தபடி, “பெரியவா…பையன் சந்திரமௌலி மயிலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூல்லே ஏழாவது படிச்சுண்டிருக்கான். பன்னெண்டு வயசாறது. படிப்புலே கெட்டிக்காரன். க்ளாஸ்லே இவன் தான் பர்ஸ்ட்.  *இருவது நாளக்கு முன்னாலே ஒரு நாள் காத்தாலேர்ந்து பேச்சு நின்னுடுத்து பெரியவா. கேட்டா, ‘பேச முடியலே’ னு ஜாடை காட்றான். அன்னிலேர்ந்து ஸ்கூலுக்குப் போகலே.* சாப்பாடு, டிபனெல்லாம் வழக்கம் போல் சாப்பிடறான்…. நன்னா தூங்கறான். அதெல்லாம் சரியா இருக்கு பெரியவா. ஆனா பேச்சு தான் வரல்லே… நா என்ன பண்ணுவேன்.. நீங்க தான் கிருபை பண்ணி, இவனைப் பேச வைக்கணும் !” என்று கண்களில் நீர் வழியப் பிராத்தித்தார்.

ஸ்வாமிகள் சற்று நேரம் மௌனம் காத்தார். பிறகு ஆடிட்டரிடம், *“பையனை அழைச்சுண்டு கோயில் குளத்துக்கு எல்லாம் போறது உண்டா ? சந்திரமௌலீக்கு ஸ்வாமி கிட்டே பக்தி உண்டோல்லீயோ ?”*

*“நிறைய உண்டு பெரியவா. கந்த சஷ்டி கவசம், ஆஞ்சநேயர், ராமர் ஸ்லோகங்களை எல்லாம் நித்யம் கார்த்தாலே குளிச்சுப்டு, ஸ்வாமி படத்துக்கு முன்னாடி நின்னு சொல்லிட்டுத் தான் ஸ்கூலுக்குக் கிளம்புவான். ஆத்லே (வீட்டில்) பெரிய கோதண்ட ராமர் படம் ஒண்ணு உண்டு பெரியவா. எங்க தாத்தா காலத்து தஞ்சாவூர் படம் அது. நித்யம் காலம்பற – சாயங்காலம் அத நமஸ்காரம் பண்ணிப்டு சீதா ராமன் திருவடிகளை நிறைய வாட்டி தொட்டுக் கண்ணுலே ஒத்திண்டே இருப்பான்.* “சீதையையும் ராமனையும் எனக்கு ரொம்பவும் புடிக்கும்’ னு அடிக்கடி சொல்லிண்டுருப்பான். வாரத்துலே ரெண்டு மூணு நாள் அவன் அம்மாவோட கபாலீஸ்வரர், முண்டகக் கண்ணி அம்மன், லஸ் ஆஞ்சநேயர் கோயிலுக்கெல்லாம் போய் தரிசனம் பண்ணுவான். அப்படிப்பட்ட நல்ல கொழந்தைக்கு இப்படி ஆயிடுத்தே பெரியவா..” சங்கர நாராயணனால் துக்கத்தை அடக்க முடியவில்லை. மீண்டும் கேவிக் கேவி அழ ஆரம்பித்தார்.

அவரை சமாதானப் படுத்திய ஆச்சார்யாள், சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டுக் கேட்டார். “மயிலாப்பூர்லே நடக்கிற உபன்யாசத்துக்கெல்லாம் இவனை அழைச்சுண்டு போற வழக்கமுண்டோ ?”

“உண்டு பெரியவா! சில நேரம் நா அழச்சுண்டு போவேன். இவனுக்கு பேச்சு நின்னு போன அன்னிக்கு மொத நாள் சாயங்காலம் கூட, நான் தான் இவனை ரசிக ரஞ்சனி சபாவுலே நடந்த இராமாயண உபன்யாசத்துக்கு அழைச்சிண்டு போயிருந்தேன். சிரத்தையா கேட்டான். மறு நாள் இப்படி ஆயிடுத்து !”

சிரித்துக் கொண்டே, “ராமாயணம் கேட்டதினாலே தான் இப்படி ஆயிடுத்துன்னு சொல்ல வர்றியா ?” என்று கேட்டார் ஆச்சார்யாள்.

*“ராம ராம ! அப்படி இல்லே பெரியவா ! அதுக்கு அடுத்த நாள்லேங்கறத்துக்காகச் சொல்ல வந்தேன் !”* என கன்னத்தில் போட்டுக் கொண்டார் ஆடிட்டர்.

“அது சரி. உபன்யாசம் பண்ணினது யாரோ ?” என வினவினார் பெரியவா.

“ஸ்ரீ வத்ஸ ஜெயராம சர்மா, பெரியவா !”

“பேஷ்…பேஷ்…சோமதேவ சர்மாவோட புத்ரன். நல்ல பரம்பரை. ரொம்ப வாசிச்சவா…அது போகட்டும் சங்கரா. பையனை யாராவது டாக்டர் கிட்டே காமிச்சியோ ?”

“காமிச்சேன் பெரியவா !”

“எந்த டாக்டர் ?”

“டாக்டர் சஞ்சீவி !”

“அவர் என்ன சொல்லறார் ?” – பெரியவா.
0
“டெஸ்ட்டெல்லாம் பண்ணிப்புட்டு, ‘குரல்வளைலே ரெண்டு நரம்பு பாதிக்கப்பட்டிருக்கு. ஒரு ஆபரேஷன் பண்ணினா சரியாயிடலாம்’ னு சொன்னார் பெரியவா. ”

“நிச்சயமா சரி ஆயிடும்னு சொல்லலியா ?”

“அப்படி உறுதியா சொல்லலே பெரியவா.. *எப்படியாவது நீங்க தான் இவனுக்குத் திருப்பியும் பேச்சு வரும்படி பண்ணனும். நீங்க தான் காப்பாத்தணும் ❗”*

சற்று நேர மௌனத்துக்கு பிறகு பேசினார் ஆச்சார்யாள். ” நீ ஒரு காரியம் பண்ணு சங்கரா. பையன் சந்திரமௌலியை அழைச்சுண்டு போய், இந்த ஊர்லே இருக்கிற கோயில்களுக்குப் போய் தரிசனம் பண்ணிப் பிரார்த்தனை பண்ணிண்டு வா. ராத்திரி மடத்துலேயே பலகாரம் பண்ணிட்டு தங்கிடு. கார்த்தாலே ஸ்நானம் பண்ணி, அனுஷ்டானம் இருந்தா அதையெல்லாம் முடிச்சுண்டு பத்து மணிக்கு வந்து என்னைப் பாரு !”

ஆச்சார்யாள் சொன்ன வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருந்தன சங்கர நாராயணனுக்கு ! பெரியவாளை நமஸ்கரித்து விட்டு இருவரும் ஆலய தரிசனத்துக்குப் புறப்பட்டனர்.

அடுத்த நாள் காலை பத்து மணி. முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தனர், அந்த நடமாடும் தெய்வம் முன். அதிகக் கூட்டமில்லை. ஐந்தாறு பேர் காத்திருந்தனர். அனைவரும் தரிசித்துச் சென்றனர்.

ஆச்சார்யாளை நமஸ்கரித்து, கை கட்டி நின்றார் சங்கர நாராயணன். சந்திரமௌலியும் நமஸ்கரித்து எழுந்தான். ஸ்வாமிகள் அவனையே உற்றுப் பார்த்து விட்டுப் பேசினார்:
*“சங்கரா…ஒரு கார்யம் பண்ணு. சந்திரமௌலீயையும் அழைச்சிண்டு போய், மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில்லே அம்பாளுக்கு ஒரு பூர்ணாபிஷேகம் பண்ணி, அத தரிசனம் பண்ணி வை. அப்புறமா நீ என்ன பண்ணறே…அதே ஸ்ரீ வத்ஸ ஜெயராம சர்மா வேற எங்கேயாவது பூர்த்தியா ஸ்ரீமத் ராமாயணம் சொல்றாரானு பாரு…அப்படி எங்கேயாவது கோவில்லேயோ, சபாவிலோ சொல்லறார்னா… நீ ஒரு கார்யம் பண்ணு. சுந்தர காண்டத்தில் இருந்து ஸ்ரீ சீதாராம பட்டாபிஷேக வைபவம் வரைக்கும் சந்திரமௌலியை கூட அழைச்சுண்டு போய் ‘ஸ்ரவணம்’ (கேட்டல்) பண்ணி வை ! ஸ்ரீ சீதாராமப் பட்டாபிஷேகப் பூர்த்தி அன்னிக்கு என்ன பண்ணறே… நல்ல மலை வாழைப்பழமா பார்த்து வாங்கிண்டு போய் ‘பௌராணிகர்’ (உபன்யாசகர்) கைல கொடுத்து, ரெண்டு பேருமா அவரை சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுங்கோ.*

*மனசுக்குள்ளே அந்தப் பட்டாபிஷேக ஸ்ரீ சீதாராமனையும், பௌராணிகரையும் பிரார்த்தனை பண்ணிக்கோ… அந்தப் பட்டாபிராமன் காப்பாத்துவான். கவலையே படாதே…போயிட்டு வா’ என்று இருவருக்கும் பிரசாதம் கொடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்து அனுப்பி வைத்தது அந்தப் பரப்பிரம்மம்.*

சென்னையில் எங்கேயாவது ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவின் ஸ்ரீமத் ராமாயணப் பிரவசனம் நடைபெறுகிறதா’ என்று தினமும் நாளிதழ்களில் ‘இன்றைய நிகழ்ச்சிகள்’ பகுதியைப் பார்த்து வந்தார் ஆடிட்டர்.

அன்றைய பேப்பரில், *‘🌹மயிலை ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா கோயிலில் ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவின் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் ‘நவாஹ’ மாக (9 நாட்கள்) நடைபெறும்’ என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருந்தது.*

அன்று *சுந்தர காண்டம் பகுதி ஆரம்பம். சந்திரமௌலியுடன் ஷிர்டி சாய் பாபா கோவிலுக்குப் போனார் சங்கர நாராயணன். உருக்கமான உபன்யாசம். மெய் மறந்து கேட்டான் சந்திரமௌலி. சில நேரம் அவன் கண்களில் இருந்து நீர் பெருகியது. அப்போதெல்லாம் அவன் முதுகில் தடவிக் கொடுத்து, ஆசுவாசப் படுத்தினார் சங்கர நாராயணன்.*

அன்று *ஸ்ரீமத் இராமாயண உபன்யாச பூர்த்தி தினம். மயிலை ஷிர்டி சாய் பாபா கோயிலில் நல்ல கூட்டம். இரவு 10.30 மணிக்கு ஸ்ரீ சீதாராம பட்டாபிஷேகம் பூர்த்தி ஆகி, ராமாயணம் கேட்டால் உண்டாகும் பலன்களைச் சொல்லி முடித்தார் ஸ்ரீ வத்ஸ ஜெயராம சர்மா. ஒவ்வொருவராக அவரை நமஸ்கரித்து எழுந்தனர். சங்கர நாராயணனும், சந்திரமௌலீயும் அவரை நமஸ்கரித்து எழுந்தனர். தான் வாங்கிச் சென்றிருந்த ஒரு டஜன் பெரிய வாழைப் பழ சீப்பை சந்திரமௌலீயிடம் கொடுத்து, ஸ்ரீ வத்ஸ ஜெயராம சர்மாவிடம் சமர்ப்பித்து நமஸ்கரிக்குமாறு கூறினார். அவன் அப்படியே செய்தான்.*

*🌹🌹சந்தோஷத்துடன் பழச் சீப்பை வாங்கிய அவர், தனக்குப் பின்புறமிருந்த ஸ்ரீ ராம பட்டாபிஷேக திருவுருவப் படத்துக்கும், ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா படத்துக்கும் அதைக் காட்டி அர்ப்பணித்தார். பிறகு அதிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்து, சந்திரமௌலியிடம் கொடுத்து, “கொழந்தே…நீ க்ஷேமமா இருப்பே. இந்த இரண்டு பழத்தையும் நீயே சாப்பிடு!” என்று கூறி ஆசீர்வதித்தார். கோயிலை விட்டு, வெளியே வந்ததும், அந்த இரு பழங்களையும் சாப்பிட்டான் சந்திரமௌலி.*

*🌹🌹அடுத்த நாள் காலையில், ஒரு அதிசயம் நிகழ்ந்தது. குளியல் அறையில் பல் துலக்கி விட்டு, ஹாலுக்கு வந்த சந்திரமௌலி, “அம்மா, காபி ரெடியா?” என்று உரக்கக் குரல் கொடுத்தான்.* பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவன் அப்பாவும், சமையல் அறையில் இருந்த அம்மாவும் தூக்கி வாரிப் போட்டபடி ஹாலுக்கு ஓடோடி வந்தனர். அங்கு சிரித்தபடி நின்றிருந்தான் சந்திரமௌலி.

“காபி ரெடியானு நீயாடா குரல் கொடுத்தே சந்திரமௌலி !” என்று ஆனந்தம் பொங்க அவனைக் கட்டி அணைத்து, முத்தமிட்டாள் அம்மா. சங்கர நாராயணன், அவனைத் தோளில் தூக்கி வைத்துக் கூத்தாடினார்.
 *🌹🌹சந்திரமௌலி சரளமாகப் பழையபடி பேச ஆரம்பித்தான். தெரிந்தவர்கள் அத்தனை பேரும் வந்து பார்த்து, சந்தோஷப்பட்டனர்.*

அன்று மாலை 5.30 மணி. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் மஹா ஸ்வாமிகள் ஏகாந்தமாக உட்கார்ந்திருந்தார். கூட்டம் அவ்வளவாக இல்லை. பத்து அல்லது பதினைந்து பேருடன் வேன் ஒன்றில் வந்தார் ஆடிட்டர் சங்கர நாராயணன்.

சந்திரமௌலீயுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தார் ஆடிட்டர். சிரித்தபடியே *ஆச்சார்யாள் கேட்ட முதல் கேள்வி: “சந்திரமௌலி…இப்போ நன்னா பேச வந்துடுத்தோல்லியோ ? பேஷ்…பேஷ்! எல்லாம் அந்த சீதாராமனோட கிருபை !”*

உடனே அந்த சந்திரமௌலி, “ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…காமகோடி சங்கர…” என்று உரக்க கோஷமிட்டான். அனைவரும் மெய் மறந்து நின்றிருந்தனர்.

சற்று நேரத்துக்குப் பிறகு அந்தப் பரப்பிரம்மம் பேசியது: “சங்கரா…இப்போ சொல்றேன், கேளு. சந்திரமௌலிக்கு இப்டி திடீர்னு ஏற்பட்டதுக்கு வேற ஒண்ணும் காரணமில்லே. *அவனுக்கு இயற்கையாகவே சீதாதேவி கிட்டேயும், ஸ்ரீ ராமனிடமும் அளவு கடந்த பிரியமும், பக்தியும் இருந்திருக்கு. அவாளுக்கு ஒரு சிரமம்னா அதை இவனாலே தாங்கிக்க முடியாது ! மொதல்லே உபன்யாசத்த இவன் கேக்கற அன்னிக்கு ஜெயராம சர்மா, சீதா பிராட்டியை ராவணன் அபகரிச்சுண்டு போற ‘கட்ட’ த்த சொல்லி இருக்கணும். நான் சொல்லறது சரி தானே (சரி தானா) சங்கரா…?”*

பிரமித்து நின்ற ஆடிட்டர் வாய் திறந்து, *“அதேதான் பெரியவா..அதேதான் ! அன்னிக்கு அந்தக் கட்டத்தைத் தான் ரொம்ப உருக்கமாகச் சொன்னார் !” என ஆமோதித்தார்.*

*🌹ஸ்வாமிகள் தொடர்ந்தார்: “நாம அளவு கடந்த பக்தியும், ஆசையும் வெச்சுண்டிருக்கிற மாதா சீதையை, ஒரு ராட்சஷன் தூக்கிண்டு போறான்கறதைக் கேட்ட ஒடனே இவனுக்கு உள்ளூரப் பிரமை புடிச்சு ஸ்தம்பிச்ச நெலமை ஏற்பட்டுடுத்து. பேச்சும் ஸ்தம்பிச்சுடுத்து. வேற ஒண்ணுமில்லை. இதுக்கு ஒரே நிவர்த்தி மார்க்கம் என்ன ? அதே பௌராணிகர் வாயாலேயே ‘அம்மா சீதைக்கு ஒரு சிரமும் இல்லாம திரும்பவும் மீட்டுண்டு வந்தாச்சு’ ங்கறத இவன் காதாலே கேட்டுட்டா மனசையும் வாக்கையும் அமுத்திண்டு இருக்கிற அந்த பிரமை விட்டுப் போயிடும்னு தோணித்து. அதனாலே தான் அப்படிப் பண்ணச் சொன்னேன். சீதாராமன் கிருபையாலே எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. சந்திரமௌலி…நீ பரம க்ஷேமமா இருப்பே !”*

Monday 1 October 2018

*பூரி ஜெகநாதர் கோவிலில் உள்ள ஆச்சர்யமூட்டும் ரகசியங்கள். அறிவியல் கூட இங்கு நடக்கும் விசித்திரமான சம்பவங்களுக்கு பதில் கூற தடுமாறுகிறது.*

கோவிலில் இருக்கும் மடப்பள்ளி உலகிலேயே பெரிய மடப்பள்ளியாக விளங்குகிறது. இந்த கோவிலில் சமைக்கும் பிரசாதம் எப்போதும் ஒரே அளவில் தான்  இருக்கும் . ஆனால், பக்தர்களின்   வருகை கூடினாலும், குறைந்தாலும் தயாராகும் பிரசாதம் ஒருபோதும் பக்தர்களுக்கு பற்றாமல் போனதில்லை; அது போல மீதமும் ஆவதில்லை . இந்த அதிசயம் யாருக்கும் விளங்கவில்லை.

இந்த கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம், நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் உங்களை நோக்கி பார்ப்பது போலவே காட்சி அளிக்கும். அப்படி ஏன் தெரிகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.
அதே போல் அந்த சக்கரத்தின் மேலே ஒரு கொடி பறந்து கொண்டு இருக்கும். இது சாதரணக்கொடி அல்ல, ஏன் என்றால் இந்த கொடியானது காற்று எந்த பக்கம் வீசுகிறதோ, அதற்கு எதிர் திசையில் பறக்கும். அது ஏன் என்று இன்று வரை மிகப்பெரிய விஞ்ஞானிகளால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த ஜகன்நாதர் கோபுரத்தின் நிழல் எந்த நேரத்திலும் தரையில் படுவதில்லை. இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு மேல் விமானங்களோ, பறவைகளோ பறப்பதில்லை. சாதாரணமாக பறவைகள் கோவில் கோபுரங்களில் கூடு கட்டி வாழும், பல பறவைகள் கோவில் கோபுரத்தில் அமரும் , ஆனால் இந்த கோவிலில் எதிர்மறையாக ஒரு பறவையை கூட பார்க்க முடியாது. அப்படி ஏன் பறவைகள் கோவில் பகுதியில் பறப்பதில்லை என்பது இதுவரை அறியப்படாத அமானுஷ்யமாகும்.

கடற்கரையை ஒட்டி ஜெகந்நாதர் இருந்தாலும், கோவிலின் முதல் படியை தாண்டினால் கொஞ்சமும் கடல் அலைகளின் சத்தம் கேட்பதில்லை.
மடப்பள்ளியில் இன்று வரை விறகு அடுப்பு வைத்து, மண் பானைகளை கொண்டு தான் சமைக்கிறார்கள். இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து கீழே தீ மூட்டுகிறார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் கீழ் பானையில் உள்ள அரிசி கடைசியாகவும் மேல் பானையில் உள்ள அரிசி முதலாவதாகவும் வேகும். இது எப்படி சாத்தியம் என்றால் பதில் அந்த ஜகன்னதருக்கு தான் தெரியும்.

*ஓம் நமசிவயா சிவயா நம ஓம்....*
🤲 திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

🤲 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்...

🤲 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..

🤲 ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

🤲 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.

🤲 பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

🤲 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.

🤲 வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

🤲 செல்வம் மலை போல குவியும்.

🤲 உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்யுடன் உள்ளார்கள்.

🤲 அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

🤲 வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.

🤲 இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

🤲 கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

🤲 குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

🤲 நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

🤲 நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

🤲 சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள்,

🤲 தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.

🤲 திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

🤲 திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

🤲 அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

🤲 அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்

🤲 அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

🤲 அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .

🤲 மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

🤲 அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.?

🤲 மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

🤲 வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

🤲 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் "

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

🤲 பொதுப் பொருள்:

🤲 திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

🤲 ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்.

வாழ்க வளமுடன்,
🙏🙏🏻🙏🏻
*குளிகை என்றால் என்ன..?*

*தொட்டதைத் துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..?*

*இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.  எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான்...*

*யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம்* *கேட்டுக் கொண்ட இராவணன் அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்...*

*அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்..”என்று யோசனை கூறினார்...*

*உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன்...*

*ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர்...*

*இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர்...*

*தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர்...*

*அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள்...*

*வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை...*

*இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று இராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டனர்...*
*இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். “இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள்   ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும்...*

*அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும்.*

*நீங்களும் இராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம்’’ என்றார்..*

*சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால், தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும் படி செய்தார்..*

*சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது...*

*குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தது...*
*குழந்தை பிறந்து முதன்முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளான்* *என்பதைக் குறிக்கும் வகையில்   இடி, மின்னலுடன் அடர்மழை பெய்தது...*
*அதனால்  மேகநாதன் என்று பெயரிடப்பட்டான்...*

*அவனே இராவணனின் தவப்புதல்வனான மேகநாதன். பின்னாளில் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று, இந்திரனையே வென்று இந்திரஜித் என்று அழைக்கப்ட்டான்...*

*இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம்* *எனப்படுகிறது. தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார்...*

*குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது...*
*குளிகை நேரத்தை,     “காரிய விருத்தி நேரம்”   என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார்...*

*அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து* *நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்பட்டது...*
*குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப் பட்டான்.*..
*குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம்...*

*சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம்....*
*இராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ, அதேபோல குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்ற நம்பிக்கை வெகு காலமாக இருந்து வருகிறது.*

*இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது.குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத்* *தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை...*

*குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்...*

*ஆனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது
ஆக..தொட்டதைத் துலங்கச் செய்யுமாம் குளிகன் என்ற மாந்தனின் நேரம்

Saturday 29 September 2018

🕉🕉🕉🕉🕉**ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி**🐜🐜🐜🐜

ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு ;

சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,

 விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.

அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.

எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும். இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு அவை இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.

இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அதன் வலு இழந்துபோய்விடும்.

இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.

இதனால், சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மைத் தாக்காது .

(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி முதலிய எல்லா சனிதோஷமும் இதில் அடங்கும்...

🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜

 🕉🤚அர்த்தமுள்ள இந்துமத சடங்குகள் 🤚🕉

Wednesday 26 September 2018

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயம்
நங்கநல்லூர்
சென்னை

மகேசன் மீது  மலர்கனை தொடுத்தார் மன்மதன் சிவன் கோபம் கொண்டு மன்மதனை நெற்றிக்கண் கொண்டு பார்க்க சாம்பல் குவியலாய் போனான் மன்மதன்.

கிடந்த சாம்பல் குவியல்களை பொம்மையாய் செய்து விளையாடினார் கணேசன்.

பிள்ளையாருக்கு விளையாட தோழனாய் இருக்கட்டுமே என நினைத்த பார்வதி பொம்மைக்கு உயிர் ஊட்ட நினைத்து சர்வேஸ்வரரை பார்க்க  சிவனாரின் கண்பட்டு பொம்மை உயிர்பெற்றது.

சாம்பலில் இருந்து வந்ததால் பண்டாசுரன் என பெயரிட்டார் ஈசன்.

இவ்வுலகத்தை ஆட்சி செய்யும் ஈசனை
நினைத்து கடும் தவம் செய்தால் வேண்டுவது அனைத்தும் கிடைக்கும் என சொன்னார் விநாயகர்.

கடும் தவம் புரிந்தார் பண்டாசுரன்.

சிவன் பண்டாசுரனை பாதாள லோகத்திற்கு மன்னன் ஆக்கினார்.

மூவுலகையும் ஆளப் பிறந்தவன்  என்று கர்வத்தீயை வளர்த்து கொண்ட பண்டாசுரன்

மூவுலகையும் வெல்ல உத்திரகுரு என்னுமிடத்தில் தேவர்களை எதிர்த்து
போர் துவங்கினான் பண்டாசுரன்.

போரை உக்கிரமாக்கி கயிலாயம் சென்று நண்பனென்றும் பாராமல் விநாயகரோடும் போர் புரிய ஆரம்பித்தான்.

வெகுண்டெழுந்த வேழமுகன் பண்டாசுரனின் படையை சிதறடித்தார்.

ராஜராஜேஸ்வரி என்று துதிக்கப்படும் திரிபுராதேவியை ஆராதிக்கும்படி ஆங்கிரஸர் கூற,
மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்றுகூடி ராஜராஜேஸ்வரியின் அருள் வேண்டி தந்திர முறைப்படி மகாயாகம் செய்தார்கள்.

தேவர்களின் யாகத்தின் பயனாய் கொழுந்து விட்டெறியும் யாகத்தீயிலிருந்து பேரொளியோடு அன்னை ராஜராஜேஸ்வரி தோன்றினாள்

பண்டாசுரன் கணேசனைத் தாக்குவதைக் கண்டு மகனுக்கு உதவ அன்னையும்  ஆவேசம் கொண்டவளாய் பண்டாசுரனை அழித்தாள் அன்னை.

நங்கநல்லூரில்
தேவர்களின் யாகத்தீயிலிருந்து எழுந்ததைப் போலவே இந்த கலியுகத்திலும் அன்னை யாகத்திலிருந்து தோன்றி ராஜராஜேஸ்வரியாக கோயில் கொண்டுள்ளாள்.

தன் பால வயதிலிருந்தே ஸ்ரீவித்யா உபாசகராக விளங்கிய ராஜகோபால சுவாமிகள் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு தனது வீட்டில் யாகசாலை அமைத்து மகாஷோடஸி மந்திரத்தால் செய்த ஹோமத்தின் நிறைவாக பூர்ணாஹுதி முடிந்தபோது, தகதகவென்று தீயிலிருந்து தோன்றினாள், அன்னை.

ராஜகோபால சுவாமிகள் அதை தாம்பாளத் தட்டில் ஏந்தியெடுத்து காஞ்சி மகா பெரியவரிடம் கொண்டு செல்ல  ‘‘இவள் சத்தியமாக ராஜராஜேஸ்வரியே! இத்துடன் உருவான மணிகள் சித்துகள்’’ என்று சொன்னார்.

தீயிலிருந்து தோன்றிய தேவிஅன்னையின் உத்தரவுப்படி ஆஸ்ரமம் அமைத்து ராஜராஜேஸ்வரிக்கு கோயில் கட்டினார்.

கோயில் அலுவலகத்தில் குங்குமமும் வழிபாட்டுக்குத் தேவையான கற்கண்டும் விற்பனைக்கு உள்ளன.

கோயிலுக்கு வெளியிலிருந்து பழம், தேங்காய், குங்குமம் என்று எந்த பொருளையும் வாங்கி வரக்கூடாது.

 அம்பாளின் அர்ச்சனைக்கு கோயிலிலேயே விற்கப்படும் கற்கண்டு மட்டுமே நைவேத்யம் செய்யப்படுகிறது

மகா கணபதி, துர்க்கை. தன்வந்திரி பகவானும் அருள்பாலிக்கின்றனர்.

தன்வந்திரி பகவான் தீர்த்தம் தீராத நோய் தீர்க்கும் மாமருந்து ஆகும்.

 கொடிமரம். அடுத்து பலிபீடம், சிம்மம். பக்கத்தில் தங்கமென தகதகவென மின்னுகின்றன பதினாறு படிகள். இங்கே ஒரு பெட்டி இருக்கிறது.

இதில் அன்றைய திதி மற்றும் திதி தேவியின் பெயரைச் சொல்லி, கோயிலில் பணம் செலுத்தி வாங்கி வந்த குங்குமப் பொட்டலத்தைப் போட வேண்டும்.

அன்று நள்ளிரவு ராஜகோபால சுவாமிகள் இந்த குங்குமத்தை பயன்படுத்தி அன்றே அர்ச்சனை செய்வார்.
அதனால் பக்தர்களின் தோஷங்கள் அனைத்தும் தீரும்

இக் கோவிலில்
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே அர்ச்சனையாகச் செய்யாமல், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே செய்யவேண்டும் .

பதினாறு படிகள் 
ஒவ்வொரு படியும் ஒரு திதியைக் குறிக்கிறது.

முதல் படியில் சுக்ல பிரதமையென்றும், கிருஷ்ண பஞ்சதசியென்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அந்த திதியின் தேவதையாக கொலுவிருக்கும் காமேஸ்வரி நித்யா தேவி  பற்றி அகத்திய மாமுனிவர் எழுதிய பாட்டை கல்லில் பொறித்து சுவரில் பதித்து வைத்திருக்கிறார்கள். இந்த நித்யா தேவியின் யந்திரங்களும் திருவுருவங்களும் படிக்கு இருபுறங்களிலும் சுவரில் எழுந்தருளச் செய்ய வைக்கப்பட்டிருக்கின்றன.

தினமும் இந்த யந்திரங்களுக்கும் திருவுருவங்களுக்கும் முறைப்படியான பூஜையும் நைவேத்யமும் உண்டு.

இதேபோல இரண்டாம் படியில் சுக்ல த்விதீயைக்கும், கிருஷ்ண சதுர்த்தசிக்கும், பகமாலிநீ, நித்யா கொலுவீற்றிருக்கிறாள்.

மூன்றாம் படியில் நித்யக்லின்னாநித்யா.

நான்காம் படியில் பேருண்டா,

ஐந்தில் வஹ்னிவாசினீ

ஆறில் மஹாவஜ்ரேஸ்வரி,

ஏழில் சிவதூதீ

எட்டில்  த்வரிதா,

ஒன்பதாம் படியில் குலசுந்தரி,

பத்தாம் படியில் நித்யா,

அடுத்ததாக

நீலபதாகா, விஜயா, சர்வமங்களா, ஜ்வாலாமாலினீ, நிறைவாக சுக்ல பஞ்சதசீயிலும்,

பதினைந்தாவது படியில்
கிருஷ்ண பிரதமையிலும் சித்ரா நித்யா  கொலுவிருக்கிறாள்.

பதினாறாவது படியில் அன்னை ராஜராஜேஸ்வரி வீற்றிருக்கிறாள்.

அன்னை மரகத பச்சை நிறத்தில் அழகாய் அமர்ந்திருக்கிறாள்.

அன்னை அருகில் இருக்கும் உற்சவ விக்ரகம்தான், தீயில் பிறந்த தெய்வம்.

இங்கே பல மகான்களால் பூஜிக்கப்பட்ட 43 சக்தி தேவதைகளின் யந்திரங்களும் யாகத்தில் தோன்றிய சித்தி மணிகளையும் சுரைக்காய் சுவாமியின் கைத்தடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

சந்நதியின் இரு புறங்களிலும் வாராஹியும் மாதங்கியும் சந்நதி கொண்டருள்கின்றனர்.

இவ் ஆலயத்தின் அருகே சத்யநாராயணர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் இருந்து 265km.
கும்பகோணத்தில் இருந்து தாம்பரம்
பல்லாவரம் மீனம்பாக்கம்
அடுத்து ராமாபுரம் மடிப்பாக்கம் பிரிவு சாலையில் நங்கநல்லூர் உள்ளது.

Saturday 22 September 2018

#பிரதோஷம் உருவான #வரலாறு பற்றி ஓரு சிறு #தொகுப்பு உரை வடிவில் (மறுபதிவு - மஹா பிரதோஷ சிறப்பு பதிவு)
-
🍀ஒரு காலத்தில் சாதாரண மானுடர்களைப் போலவே தேவர்களும், அசுரர்களும் - பிணி, மூப்பு, சாக்காடு - இவற்றால் நொந்து நூலாகிப் போனார்கள். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு இடையில் அடிக்கடி ஏற்படும் அடிதடி, சண்டை சச்சரவுகளில் பெருத்த சேதாரம் வேறு. எனவே இவை நீங்குவதற்கு ஒரு வழியைத் தேடி, நேராக நான்முகனிடம் சென்றனர்.
-
🍀அவர் சொல்லி விட்டார், ''இதையெல்லாம் சேர்த்து வைத்துத்தான் உங்களை படைத்திருக்கின்றேன்!.. தனியாகப் பிரிப்பது சாத்தியமே இல்லை!....''. தலை குனிந்தபடி திரும்பினால் அன்னை சரஸ்வதியின் வீணையிலிருந்து ''இசையிருந்தால் மரணமில்லை...!'' என்று அமுதம் வழிந்து கொண்டிருந்தது. தேவேந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
-
🍀இதற்கிடையில் துர்வாச முனிவர் ஆகாய வழியில் வந்து கொண்டிருந்தார். இன்றைக்கு இதுவரை ஒன்றும் நடைபெறவில்லையே!... என்று. ஏனென்றால் துர்வாச முனிவர் யாருக்காவது சாபம் கொடுக்காவிட்டால் அவருடைய தவ வலிமை குன்றிவிடும். அவருக்கு அப்படி ஒரு சாபம்! அப்போது, எதிரில் தேவகன்னி ஒருத்தி வந்து வணங்கி நின்றாள்.
-
🍀கனிவுடன் நோக்கிய முனிவர் - ''மங்களம் உண்டாகட்டும்'' என்றார். அந்த தேவகன்னி சொன்னாள் ''ஸ்வாமி... நான் இந்திர சபையின் ஆடல் மங்கை. அன்னை ஆதிபராசக்தியின் கொலு மண்டபத்தில் அன்னையை சேவித்து விட்டு வருகின்றேன். அன்னை மனமுவந்து எனக்களித்த பரிசு இந்தப் பூமாலை. இது என்னிடம் இருப்பதை விட சர்வலோக சஞ்சாரியாகிய தங்களிடம் இருப்பதே பெருமை. எனவே இதனைத் தாங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்".
-
🍀துர்வாசருக்கு மிக்க மகிழ்ச்சி. ''ஏதடா.. இன்று பொழுது நல்லபடியாக விடிந்திருக்கின்றதே!..'' என்று. அந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் மாலையும் கையுமாக தேவலோகம் நோக்கிச்சென்றார். ஆனால் - விதி வகுத்த வழியாக வெள்ளை யானையின் மேல் இந்திரனே எதிரில் வந்து கொண்டிருந்தான். அவனை நிறுத்தி விவரம் கூறி, கையில் இருந்த மாலையைக் கொடுத்தார்.
-
www.facebook.com/Thiruneriya.Thamizhosa
-
🍀அவனுக்கோ அன்று போதாத காலம்!.. ஆணவத்துடன் வெள்ளை யானையின் மேலிருந்தபடியே அங்குசத்தை நீட்டி துர்வாசர் கொடுத்த மாலையை வாங்கி யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். அவ்வளவுதான்... யானைக்கு வந்ததே எரிச்சல்.. காரணம்.... அன்னை ஆதிபராசக்தி சூடியிருந்த மாலை தேன் ததும்பும் மலர்களால் ஆனது. அதனால்... மாலையினுள் சின்னச் சின்ன தேனீக்கள் மயங்கிக் கிடந்தன.
-
🍀முனிவர் மாலையை அலுங்காமல் ஏந்தி வந்து இவனிடம் கொடுத்ததை, இந்திரன் வாங்கி ''தளுக்'' என்று யானையின் தலையில் வைத்தானே - அதனால் தேனீக்கள் திடுக்கிட்டு விழித்தெழுந்து மாலையைச் சுற்றி ரீங்கரிக்க - ஐராவதம் மண்டை காய்ந்து போய் - பெரிதாகப் பிளிறிக் கொண்டே தலை மேலிருந்த மாலையை இழுத்துக் கீழே போட்டு காலால் மிதித்தது.
-
🍀அப்பாடா!.... துர்வாசரின் தவம் குறையாதிருக்க வழி பிறந்து விட்டது. கோபம் கொதித்துத் தலைக்கேற - சாபமிட்டார். ''நான் கொடுத்த மாலையின் அருமை தெரியாமல் அதை அலட்சியப்படுத்தி அழித்த உன் கர்வம் அழிந்து ஐஸ்வர்யம் தொலையக் கடவது. அடாததைச் செய்த ஐராவதம் காட்டு யானையாய் அலையக் கடவது!''
-
🍀துர்வாசர் போய் விட்டார். வெள்ளி மலை மாதிரி இருந்த ஐராவதம் - கன்னங்கரேலென்று ஆகி - கதறிக் கண்ணீர் வடித்தபடியே காட்டுக்குள் ஓட, பட்டத்துக் குதிரை உச்சைசிரவஸ் - ஊரை விட்டே ஓடி விட்டது. பொங்கும் இளமை பொலிந்து ததும்பும் தேவலோகம் புகை மண்டலமாகிப் போனது. சோகத்திலும் பெரிய சோகம் அரம்பையரும் மற்ற தேவகன்னியரும் கடுங் கிழவிகளாகிப் போனது தான்!...
-
🍀தாங்க முடியாத துயரத்துடன் பிரசன்னம், மாந்திரீகம், ஜோதிடம், கைரேகை, எண்கணிதம், உன்கணிதம் - என எல்லாவற்றிலும் தோண்டிப் பார்த்தாகி விட்டது. வெற்றிலையில் மை தடவி, உடுக்கை அடித்து ராத்திரி முழுவதும் முழித்திருந்து குட்டிச்சாத்தான் குறியும் கேட்டாகி விட்டது. தேவேந்திரனின் துக்கமும் துயரமும் எப்போது தீரும் என்று!.... துர்வாசர் விட்ட சாபத்தைத் தொலைப்பதற்கு துணை ஒன்றும் கிடைத்தபாடில்லை!....
-
🍀''பிள்ளையாரைப் பிடியுங்கள்..'' என்று யாரோ சொன்னதைக் கேட்டு, அங்கே ஓடினால் அவர் வியாசருடன் இருந்து ஒற்றைக் கொம்பை ஒடித்து ஊருக்காக கதை எழுதிக் கொண்டிருக்கின்றார். அவரைப் பார்க்க இப்போது யாருக்கும் அனுமதி இல்லை - என்று கூறி விரட்டியடித்து விட்டார்கள். விக்கித்துப் போனான் தேவேந்திரன்.
-
www.facebook.com/Thiruneriya.Thamizhosa
-
🍀''எல்லாம் இந்த யானையால் வந்தது...'' என்று நினைத்து - ஒரு சாத்து சாத்தலாம் என்று பக்கத்தில் பார்த்தால் - யானை ஓடிப்போய் எத்தனையோ நாளாகியிருந்தது. இந்த நேரத்தில் தான் - போகிற போக்கில் நாரதர், ''பாற்கடலைக் கடைந்து எடுக்கும் அமுதம் ஒன்றே உன் துயர் தீர்வதற்கு மருந்து'' - என்று தன் ஆராய்ச்சியின் முடிவைச் சொல்லி விட்டுப் போக, உடனடியாக தேவர்கள் அசுரர்களைத் தேடிச் சென்றனர். உட்கார்ந்து பேசினர்.
-
🍀எல்லாவற்றுக்கும் முட்டு கொடுக்கும் சுக்ராச்சார்யார் கூட சும்மா இருந்தார். இருதரப்பிலும் உள்ள பெரியவர்கள், அமுதத்துக்காக சமரசமாகி கூடிப் பேசி கூட்டணியாக - ஒரு கொள்கை உடன்பாட்டுக்கு வந்தார்கள். அதன்படி - மந்தர மலையைக் கைப்பற்றி மத்தாக பயன்படுத்திக்கொள்ள முடிவாயிற்று. இழுத்துக் கட்டிக் கடையக் கயிறு வேண்டுமே!... நல்ல காலம்!... நாகங்களுள் ஒன்றான வாசுகி அந்தப் பக்கம் ஒரு ஓரமாகப் போகவும், அதை விரட்டி மடக்கிப் பிடித்தாகி விட்டது.
-
🍀வாசுகிக்கு கெட்ட காலம்!... விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அதற்கு அப்பொழுதே வயிறு கலங்க ஆரம்பித்து விட்டது. ''ஆளுக்கு ஒரு பக்கமாக பிடித்து இழுத்தால் அறுந்து போவேனே!..'' என்று பரிதாபமாக முனகியது. இருந்தாலும் நம்மவர்கள் விடவில்லை. உனக்கும் ஒரு பங்கு என்று சொல்லி ஓரமாக ஓலைப் பெட்டிக்குள் அடைத்து - சுற்றி வைத்து விட்டார்கள்.
-
🍀ஒரு சுபயோக சுபதினத்தில் மந்தர மலையைத் தூக்கிக் கடலில் போட்டாகி விட்டது. கொஞ்சம் யோசனையாகவே இருந்தது வாசுகிக்கு... ஓரக்கண்ணால் பார்த்தால் - தேவேந்திரன் வஜ்ராயுதத்தை வைத்துக் கொண்டு நிற்கின்றான். வாயடைத்துப் போன வாசுகி தானாகவே சென்று மந்தர மலையைச் சுற்றிக் கொண்டது. இப்போதும் அதற்கு பெருங்குழப்பம் தான்!....
-
🍀தேவேந்திரன் தன்னுடைய சகாக்களை எல்லாம் அழைத்து மெல்லிய குரலில் எதையோ பேசினான். அந்தப் பக்கம் குதுகலத்துடன் அசுரர்கள்!... அமுதம் அப்போதே கிடைத்து விட்ட மாதிரி.. அசுரர்களும் கூட்டங்கூடிப் பேசினார்கள்... அமுதம் கிடைத்ததும் முதல் கை அமுதத்தில ... அடுத்த கை தேவேந்திரன் தலையில்.... என்று!... ஒரே ஆரவாரக் கூச்சல்!... கைதட்டல்கள்!...
-
🍀கயிலாயம் வரை போயிற்று சத்தம்!... தவத்திலிருந்த சிவம் விழித்தது. ''...நந்தி...'' ''...ஸ்வாமி!... இந்த இரண்டு பேருக்கும்.... வேற வேலை எதுவும் இல்லையா!... அதனால சும்மா இருக்க முடியாம கடலை வறுக்க.. இல்ல... இல்ல... கடலைக் கடையப் போறாங்களாம்!...'' பணிவிலும் பணிவாக பதில் சொன்னார் - நந்தி.. சிவம் மீண்டும் தவத்தில் ஆழ்ந்தது.
-
www.facebook.com/Thiruneriya.Thamizhosai
-
🍀''..அப்பா..'' - குறு குறு எனத் தவழ்ந்து ஓடிய சின்னக்குழந்தையை இழுத்து அணைத்துக் கொண்டாள் - அன்னை சிவகாமசுந்தரி. ''அவர் தவம் கலைந்து விட்டால்... மறுபடியும் நான் மயிலாகப் பிறக்கவேண்டுமே!.. '' என்று.... மகத்தான தவமிருந்து சித்தி அடைந்த மகாமுனிவர்களும் யோகியர்களும் சிறுபிள்ளைகளைப் போல ஆவலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
-
🍀''...சரி!... நாங்கள் எல்லோரும் வால் பக்கம்!...''. - தேவர்கள். ''...இல்லை... இல்லை... எங்களுக்குத் தான் வால்!...'' - அசுரர்கள். தேவேந்திரன் அசுரர்களிடம் வந்தான். ''..தலை என்றும் சிறப்புடையது. நீங்கள் இந்த நல்ல காரியத்துக்கு தலைமை அல்லவா!...'' என்றான். அசுரர்களுக்கு ஆனந்தம்... இந்திரன் தலையே கைக்கு வந்துவிட்ட மாதிரி... ஆனால்,
-
🍀தேவேந்திரனின் திட்டம் என்ன?. - '' வாசுகி ஏகக் கடுப்பில் இருக்கிறது. விழுந்து கடித்தால் அவர்களையே கடிக்கட்டும்...'' என்பது தான்!... ஆயிற்று. தலைவிதியை நொந்து கொண்டிருந்த வாசுகியின் தலையை அசுரர்களும், வாலை தேவர்களும் பிடித்து - இப்படியும் அப்படியுமாக இரண்டு இழுப்பு இழுத்தார்கள்.. மந்தர மலை சுழன்றது. கடல் நுரைத்துக் கலங்கி - பொங்கியது. அவ்வளவு தான்!..
-
🍀மத்தாக நின்ற மந்தர மலை ஒருபுறமாகச் சாய்ந்து விழுந்து கடலுக்குள் போய் விட்டது. வாசுகிக்கு ஏகப்பட்ட சந்தோஷம்!... கடைவதைக் கைவிட்டு விடுவார்கள் என்று!.... "என்ன ஆச்சு... என்ன ஆச்சு..'' அங்குமிங்கும் கூக்குரல்கள்.. யாருக்கும் ஒன்றும் புரிய வில்லை. தேவேந்திரன் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான்.. நாரதர் வருகிறாரா!...என்று.
-
🍀அப்போது, இளம் முனிவர் ஒருவர் சொன்னார்...''அடே!... மூடர்களே... மத்து நின்று சுழல ஒரு அச்சு வேண்டாமா?...'' என்று. பழுத்த முனிவர்கள் எல்லாம் பல் தெரியச் சிரித்தார்கள். தேவேந்திரனுக்கு வெட்கமாகிவிட்டது. இந்த முனிவர்களிடமும் போய் ''இளமையாய் இருப்பது எப்படி?..'' என்று யோசனை கேட்டவன் தான் இந்திரன்.
-
🍀முனிவர்கள் சொன்னார்கள் ''அதெல்லாம் பெருந்தவமிருந்து பெற்ற யோக சித்தியினால் விளைந்தது...'' என்று. அத்தோடு அந்தப் பக்கமே போகவில்லை - போகியான தேவேந்திரன். யோசித்த தேவேந்திரன் வாசுகியைக் கையில் பிடித்துக் கொண்டு - விட்டால் தான் ஓடிப் போகுமே - வைகுந்தம் நோக்கிப் போனான். அவன் பின்னாலேயே எல்லாரும் கூட்டமாக ஓடினார்கள்.
-
www.facebook.com/Thiruneriya.Thamizhosa
-
🍀''...நாராயணா!... கோவிந்தா!.... கோவிந்தா!....'' வைகுந்தத்தின் வைரமணிக் கதவுகள் திறந்தன... ''வாருங்கள்... வாருங்கள்...'' - வரவேற்றனர் வாசுதேவன் தம்பதியினர். ''...கோவிந்தா!.. கோவிந்தா!..'' - மறுபடியும் - தேவாசுரர்களின் கோஷ்டி கானம். ''...அதுதான் தெரியுமே!... அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?...'' - என்றார் கள்ளழகர், திருமகளை நோக்கியபடி.. அன்னையும் புன்னகைத்தாள்.
-
🍀தேவேந்திரனுக்கு சொல்ல வார்த்தை வரவில்லை. தொண்டைக்குள் நிற்கிறது அழுகை. ''அஞ்சேல்... யாம் மந்தர மலைக்கு அச்சாக இருப்போம்'' என அபயம் அளித்த அச்சுதன் - தன் மனதில் நினைத்துக் கொண்டார் - ''அப்போதே வந்திருந்தால் தொல்லையே இருந்திருக்காது'' - என்று. ஏனெனில் அபயம் என அடைந்தோர்க்கு எல்லாம் அமுதன் ஆராஅமுதன் - அல்லவா!...
-
🍀கிடைத்த ஒரு கணத்தில், கண்ணீருடன் வாசுகி தலையை உயர்த்தி ஆயிரந் தலை ஆதிசேஷனைப் பார்த்து - '' செளக்கியமா!...'' என்றது. அந்த வார்த்தைக்கு - ''.. என் கதியைப் பார்த்தாயா!... '' என்று அர்த்தம்! எம்பெருமான் திருவுளங்கொண்டபடி - பொன்னொளி மின்னும் ஆமையாகி பாற்கடலுள் விரைந்தார். கடலுள் வீழ்ந்து கிடந்த மந்தர மலை மெல்ல மெல்ல நிமிர்ந்து - நேராக நின்றது. எங்கும் ஜயகோஷம். உற்சாகம். தேவேந்திரனுக்கு அமிர்தம் கிடைத்து விட்டதாகவே சந்தோஷம்.
-
🍀அவனுக்குத் தெரியாது நாடகத்தில் நடைபெறவேண்டிய காட்சிகள் இன்னும் இருப்பது!..... மறுபடியும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்தனர். நேரம் ஆக ஆக - தேவர்களும் அசுரர்களும் விறுவிறுப்பாக - இப்படியும் அப்படியுமாக பாவப்பட்ட வாசுகியை சுற்றிப் பிடித்து இழுக்க, மலையின் கீழ் அச்சாக - அச்சுதன் பொருந்திய சூட்சுமத்தில் மந்தரமலை படுவேகமாகச் சுழன்றது. அதுவரைக்கும் கடலின் அடியில் படிந்து கிடந்த தொல்பொருட்கள் எல்லாம் மேலே வருவதும் கீழே போவதுமாக - பாற்கடல், தயிர்க் கடலாகிக் கொண்டிக்க - வாசுகியோ நொந்து நூலாகிக் கொண்டிருந்தது...
-
🍀என்னதான் நாகம் என்றாலும் பெண்ணல்லவா!... ''என்ன இது... கொஞ்சங்கூட இரக்கம் இல்லாமல் இரண்டு பக்கமும் இப்படிப் பிடித்து இழுக்கின்றீர்களே!... சிறிது நேரம் ஓய்வு கொடுங்கப்பா!...'' - என்று தனக்குத்தானே இரக்கப்பட்டுக் கொண்டது. மூளை கலங்கிய - தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரே நோக்கம் தான் - ஒன்று அமுதம் கிடைக்கவேண்டும்!... இல்லையேல் மந்தரமலை தூளாக வேண்டும்... அதுவும் இல்லையென்றால் வந்த வரைக்கும் லாபம் என்று வாசுகி ஆளுக்கு ஒருபாதியாக வேண்டும். என்ன கொடுமை... இது!...
-
🍀இவர்கள் விருப்பத்திற்கு எதையாவது செய்வார்களாம்! அதற்கு அடுத்தவர்கள் அல்லற்படவேண்டுமாம்!.... திருப்பாற்கடலில் - உறங்காமல் உறங்கிக் கிடக்கும் அழகனிடம் அமுதம் வேண்டும் என்று கேட்டிருக்கலாம்!... அல்லது, ''தானே தவமாய் வீற்றிருக்கும் தவமே!. எங்கள் சிவமே!.'' என்று திருக்கயிலை அடிவாரத்தில் நின்று நினைத்திருந்தாலும் - மலை மேலிருந்து ஆனந்தம் மழையாய்ப் பொழிந்து - அமுத வெள்ளமாய், அமுதக் கடலாய் - இந்நேரம் நிறைந்திருக்குமே!..
-
www.facebook.com/Thiruneriya.Thamizhosa
-
🍀பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் அல்லவா!... எம்பெருமான்!... என்ன செய்வது!... விதி ஓடியாடி விளையாடும் போது அதன் குறுக்கே யார் தான் போகமுடியும்!.... கவனிங்க!.. கவனிங்க!.. ''..தளுக்..முளுக்..'' என்று ஏதோ சத்தம்... கேட்கிறதா!... கடலைக் கடைகின்ற பேரிரைச்சலிலும், நன்றாகத் தெளிவாகக் கேட்கிறது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கூட கேட்டது. அவ்வளவுதான் ... பெருத்த உற்சாகத்துடன் இன்னும் வேகமாக இழுத்தனர்... இன்னும் நாலே நாலு இழுப்பு...
-
🍀''...மாப்ளே!... அமுதம் பொங்கிடுச்சுடா....'' - யார் இப்படிச் சத்தம் போட்டது?... பெருங்கூட்டத்தில் யாரென்று தெரியவில்லை!... வாசுகிக்கு தாங்க முடியாத நரகவேதனை. பற்களைக் கடித்துக் கொண்டது.. சூரியன் பணி முடிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பாற்கடலிலிருந்து ஏதோ கருப்பாகத் திரண்டு மேலே வருவதை எல்லோரும் கண்டனர். அது... திடப்பொருளா.. திரவப்பொருளா.. சரியாகத் தெரியவில்லை.
-
🍀திரண்டு வருவது விஷம் என்று புரியாமல் - ''...ஆஹா...'' என்று ஆனந்தக் கூச்சல். யாருக்குச் சந்தோஷமோ... இல்லையோ - வாசுகிக்கு மிக்க மகிழ்ச்சி...'' நமக்கு விட்டது... ஏழரை!...' என்று... தலையை நிமிர்த்திப் பார்த்து, ''இதுதான் அமுதமா!.. ஆ..'' என்றதுதான் தாமதம்.. அதுவரையிலும் வாசுகியின் வாயினுள் பல்லிடுக்கினுள் அடங்கிக் கிடந்த விஷம் - பீறிட்டு வழிந்தது.
-
🍀''தலைக்கு மேல் என்ன... அமுத மழையா...'' என்று அசுரர்கள் மேலே பார்க்க - அனற்திரளாக - விஷத்துளிகள்!... ''ஐயோ!... ஓடுங்கடா!.. ஓடுங்க!...'' அசுரர்கள் வாசுகியை கை விட்டார்கள். தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார்கள்!. அந்தப் பக்கம் - தேவர்கள் - '' திரண்டு வருவது அமுதமில்லை...'' என்று உணர்ந்து கொண்டு, அந்தக் கணமே, அசுரர்கள் செய்த அதே வேலையை செய்தார்கள்.... இவர்களும் வாசுகியை கை விட்டார்கள்..
-
🍀''...என்ன நடக்கின்றது மேலே ...'' என்றபடி கடலினுள்ளிருந்து கருணைக்கடல் வெளிப்பட்டது. அந்த நொடியே - நெடியவனின் பொன் போன்ற திருமேனி விஷத்தின் வேகத்தினால் கரிய திருமேனியானது. மின்னல் வேகம் - மாலவனையும் அங்கே காணவில்லை. இருதரப்பினராலும் கைவிடப்பட்டு கடலினுள் ஆழ்ந்த வாசுகி - இற்றுப்போன உடம்புடன் மெல்ல ஊர்ந்து வெளியே வந்தது. சுற்றிலும் பார்த்தது. யாரையும் காணவில்லை. இதுதான்... காரியம் ஆனதும் கழற்றி விடுவான் என்பது!....
-
🍀ஆறடி உயரத்தில் - பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட கரிய நிற ''ஆலம்'' எனும் விஷமும், வாசுகியின் பல்லிடுக்கிலிருந்து பீறிட்ட நீலநிற ''காலம்'' எனும் விஷமும் - தங்களுக்குள் ராசியாகி ஒன்று கலந்து - திரண்டெழுந்து ''ஆலகால'' விஷமாக உருக்கொண்டு, தேவர்களும், அசுரர்களும் - பாற்கடலைக் கலக்கியடித்துக் கடைந்த கடமைக்குப் பரிசாக - எங்கும் பரவி எல்லோரையும் கதி கலங்கடித்துக் கொண்டிருந்தது.
-
www.facebook.com/Thiruneriya.Thamizhosa
-
🍀அங்கும் இங்குமாக தேவர்களும் அசுரர்களும் பரிதவித்து ஓட , ஆலகாலமும் அவர்கள் பின்னாலேயே வந்து நிற்க விடாமல் துரத்தியடித்தது. ஓட ஓட - விரட்டியது. ''ஆலகாலம்'' எங்கே துரத்தும்?... எங்கே விரட்டும்?....புரியவில்லையா!... மந்தையில் பசுக்களை மேய்ப்பவன் மாலையானதும் அவற்றை எங்கே துரத்துவான்?.. எதை நோக்கி விரட்டுவான்!... பட்டியை - தொழுவத்தை நோக்கி அல்லவா!... அது தாங்க... விஷயம்!....
-
🍀சிந்தனை அற்றுப் போனதால் - அந்த நேரத்தில் என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை. தேவகுரு - பிரகஸ்பதி. அசுரகுரு சுக்ராச்சார்யார். இருந்தும் யாரும் நல்ல வழி நடத்தவில்லை. வழி நடத்தினாலும் - இவர்கள் நடப்பதாக இல்லை. திரண்டு எழுந்த கொடிய ஆலகாலம் விரிந்து பரந்து தேவ - அசுரர்களை விரட்டிக் கொண்டு வந்தது.
-
🍀ஒன்றும் புரியாமல் ஓட்டம் பிடித்த அனைவரும் ஓடிச் சென்று நின்ற இடம் - திருக்கயிலை. திருக்கயிலை மாமலையின் அடிவாரம்.... அதிகார நந்தி திருக்கரத்தில் பிரம்புடன் நின்று கொண்டிருந்தார். தூரத்தில் பெரும் புழுதி மண்டலம்!.. அவருக்கு ஆச்சர்யம்!.. என்ன நடக்கின்றது?.... அவருக்கு அவரே கேள்வி கேட்டு முடிப்பதற்குள், கண்ணீர் விட்டுக் கதறியபடி தேவர்களும் அசுரர்களும்.. ''என்ன ஆயிற்று?.. ஏன் இப்படி ஓடி வருகின்றீர்கள்?...''
-
🍀''ஸ்வாமி....அபயம்... அபயம்... எம்பெருமானை உடனே தரிசிக்க வேண்டும்!...'' ''...அதெல்லாம் முடியாது!... இது சந்தியாநேரம்....கொஞ்ச நேரம்...ஆகும்!..'' ''பேச நேரமில்லை ஐயா!... அது எங்களை துரத்திக் கொண்டு வருகிறது!..'' ''வழக்கமா... நீங்க #தானே_எல்லாரையும்_துரத்துவீங்க!...'' ''ஸ்வாமி!... நாங்கள் செய்த வினைப்பயன் விஷமாகி எங்களைத் துரத்திக் கொண்டு வருகின்றது!.. கயிலாயநாதனைத் தவிர எங்களைக் காத்தருள யாரும் இல்லை.. தாமதிக்காமல் எம்பெருமானைத் தரிசிக்க அனுமதியுங்கள்!.''
-
🍀கண்ணீருடன் கதறினார்கள் - தேவர்களும் அசுரர்களும்.. ''..ம்... எல்லாரையும் போல உங்களுக்கும் கடைசியில் தான் கயிலாயம்!...'' மனதில் சிவபெருமானைத் தியானித்துக் கொண்டு அவர்களை அனுமதித்தார். திடு...திடு... என எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு ஓட... வாசுகி - உடல் வேதனையுடன் மெதுவாக ஊர்ந்து வந்தது.
-
🍀''வாசுகி.. என்ன ஆயிற்று?...'' நந்தியம்பெருமானின் திருப்பாதங்களைப் பணிந்து வணங்கிய வாசுகி, ''...எல்லாம் அறிந்த தாங்கள் இப்படிக் கேட்கலாமா...ஸ்வாமி!...'' என்றது. ''வருத்தப்படாதே வாசுகி... கயிலை நாதன் காப்பாற்றுவார்!....'' அதற்குள் - விரிந்து பரந்து - தேவர்களை விரட்டிக் கொண்டு வந்த ஆலகால விஷத்தினை நோக்கி - பொற்பிரம்பினை ஊன்றியவாறு ஹுங்காரமிட்டார் - நந்தியம்பெருமான்.
-
www.facebook.com/Thiruneriya.Thamizhosa
-
🍀தன் வேலை முடிந்தது என்பதைப் போல அடங்கி ஒடுங்கியது. அங்கே - பொற்சபையில் - எம்பெருமானின் முன்னிலையில் - அடிக்கமலங்களில் விழுந்து வணங்கிய - அசுரர்கள், தேவர்கள், நான்முகன், திருமால் என எல்லோரையும் மெலிதாக நோக்கினார் எம்பெருமான். ஐயனும் அம்பிகையும் - ''அஞ்சேல்...'' என அபயமளித்தனர்.
-
🍀கண்களைத் துடைத்துக் கொண்டு - நடந்ததை தேவேந்திரன் விவரிக்கும் முன், எம்பெருமான் - ''சுந்தரா!..'' என்றார். பெருமானின் சாயலாக அழகு நிறைந்த இளைஞன், திருக்கரத்தில் திருநீற்று மடலுடன் வந்து - இறைவனின் திருக்குறிப்பினை உணர்ந்து எல்லோருக்கும் திருநீறு வழங்கி சாந்தப்படுத்தினார். அப்போது தான் உண்மை அனைவருக்கும் புரிந்தது.
-
🍀''ஒருவேளை அமுதம் கிடைத்து, அதை ஒருவேளை உண்டாலும் அடுத்து நாம் ஆகப்போவது இப்படித்தானே!.. மந்திரமாவதும் சுந்தரமாவதும் நீறல்லவா!.. வேதத்தில் உள்ளதும் வெந்துயர் தீர்ப்பதும் நீறல்லவா!.. முத்தி தருவதும் முனிவர் அணிவதும் நீறல்லவா!... மாணந்தகைவதும் மதியைத் தருவதும் நீறல்லவா!.. ஆசையைக் கெடுப்பதும், அந்தமாக முடிவதும் நீறல்லவா!.. உடம்பின் இடர் தீர்த்து இன்பந்தருவது நீறல்லவா!.. கையில் வெண்ணெய் இருந்தும் நெய் தேடி அலைந்த அறிவிலி என ஆயினோமே!...''
-
🍀கடலைக் கடைந்தவர்கள் கண்களில் கண்ணீர் திரண்டது. கருணாசாகரனாகிய ஈசன் திருவாய் மலர்ந்தார். ''.. சுந்தரா... அவ்விடத்தை இவ்விடத்தே கொண்டு வருக!...." ''...உத்தரவு!...'' - விரைந்து சென்ற சுந்தரர், ஒரு நொடிக்குள் - கடு விஷத்தைக் கருநாவற்பழம் போல கையில் ஏந்தியவாறு வந்தார். பின்னாலேயே நந்தியும் வந்தார். இதை என்ன செய்யலாம் - என்பது போல ஐயன் அனைவரையும் கூர்ந்து நோக்கினார்.
-
🍀பாகம் பிரியாத பராபரை, பர்வதராஜனின் புத்ரி - ஐயனை விட்டு அகலாத அம்பிகை, அன்பெனும் அமுதூட்டும் அங்கயற்கண்ணி , கருணை மழை பொழியும் கருந்தடங்கண்ணி - நிகழ்வனவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய தேவர்களும் அசுரர்களும் கைகூப்பி வணங்கினர்.
-
🍀''ஆலகாலம் அணுகாதபடி, எங்களைக் காத்து அருள வேண்டும் பெருமானே!..'' சுந்தரர் கரத்தினில் இருந்த ஆலகாலம், ஐயனின் திருக்கரத்திற்கு மாறியது. யாரும் நினைக்காத வகையில் ஆலகாலத்தை சிவபெருமான் உட்கொண்டார். நடந்ததைக் கண்டு அதிர்ந்தாள் அம்பிகை. அச்சத்துடன் ஓடிவந்து ஈசனின் கண்டத்தில் திருக்கரத்தினை வைத்தாள்.
-
www.facebook.com/Thiruneriya.Thamizhosa
-
🍀அண்ட பகிரண்டங்களும் அதிர்ந்தன. பார்த்துக் கொண்டிருந்த வாசுகி மயங்கி விழுந்தது. ''...என்னங்க... இப்படி செய்து விட்டீர்களே!....'' உமையம்மை பரிதவித்தாள்.. மெல்லிய புன்முறுவலுடன் பெருமான் அம்பிகையின் முகத்தை நோக்கினார். '' நம் பிள்ளைகளைக் காக்க இதை விட்டால் வேறுவழி இல்லை..காமாட்சி!..'' ஐயன் புன்னகைத்தார். பெருமிதம் பொங்கி வழிந்தது அம்பிகைக்கு.
-
🍀பெருமானின் திருமுகத்தைத் - தோள் மீது சாய்த்துக் கொண்டாள். திருக்கரத்தினால் ஐயனின் கண்டத்தினை வாஞ்சையுடன் மெல்ல வருடினாள். ஈசன் களைப்பாக இருப்பதைப் போல உணர்ந்த அம்பிகை - ''மடியில் சாய்ந்து கொள்கின்றீர்களா!...'' என்றாள்.. ஈசன் தானும், '' வெகு நாளாயிற்று '' என்று அம்பிகையின் மடியில் நிம்மதியாக பள்ளிகொண்டார்.
-
🍀''என்ன இப்படி ஆகி விட்டதே'' - என தேவர்களும் அசுரர்களும் பதைபதைத்து - ''...எல்லாம் உன்னால் தான்...'' என்கிற மாதிரி ஒருவரை ஒருவர் உக்ரத்துடன் பார்த்துக் கொண்டனர். மயங்கிக் கிடந்த வாசுகியின் மயக்கத்தினை தெளிவித்தான் திருமுருகன். மனம் நெகிழ்ந்த வாசுகி - ''முருகா!.. நான் என்றும் உனக்கு அடிமை..'' என்றது.
-
🍀நான்முகனும் பெருமாளும் ஓடிவந்து ஆதரவாக அருகில் நின்று கொண்டனர். மற்றவர்கள் ஈசனின் திருமுகத்தைக் காண்பதற்கு முயற்சித்தனர். நந்தியம்பெருமான் - முன்வந்து - '' எல்லோரும் விலகி நில்லுங்கள்!....'' என்று சொல்லி விட்டு , ஈசனைக் கை கூப்பி வணங்கினார். விஷயம் அறிந்து விநாயகர் விரைந்து வந்தார்.
-
🍀''..அப்பா.. ஏதோ திருவிளையாடல் நடத்துகின்றார்....'' எனப் புரிந்து கொண்ட விநாயகர் தம்பியுடன் ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டார். அப்போது கூட தேவேந்திரன் - அவரைக் கண்டு கொண்டு ஏதும் விசாரிக்கவில்லை. யோகியரும் மகரிஷிகளும் திரண்டனர். கின்னரரும் கிம்புருடரும் ஐயனைத் துதி செய்து யாழ் மீட்டினர்.
-
🍀ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையிலேயே இருந்தார். பொழுது விடிந்தது. அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியின் மங்கல முகத்தில் பிரகாசம்... பெருமான் திருவிழி மலர்ந்தார் என்று எங்கெங்கும் சந்தோஷம்.. ஈசனின் கழுத்திலேயே விஷம் தோய்ந்து நின்று நீலமணியாகப் பொலிந்தது. அம்பிகை ''..திருநீலகண்டனே.. நலமா!..'' என விளித்தாள். துதித்தாள்.
-
www.facebook.com/Thiruneriya.Thamizhosa
-
🍀நந்திதேவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.. ''...தாயே!... வார் சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகையே!... நின் பாதம் என் சென்னியதே!... என்று அன்னையின் பாதங்களில் விழுந்து வணங்கினார். காலடியில் காத்துக் கிடந்த அனைவரையும் கருணையுடன் நோக்கிய பரம்பொருள் - தேவேந்திரனை நோக்கி, ''..மீண்டும் முயற்சி செய்...'' என்றார்.
-
🍀''... பிழை பொறுத்து அருள வேண்டும்...'' - என்று தொழுது வணங்கினான். அனைவரும் ஐயனை பணிந்து வணங்கினர். வாசுகியும் வந்தது கண்ணீருடன். ''அஞ்சவேண்டாம்... உனக்கு அடைக்கலம் தந்தோம்..'' என்றனர் - அம்மையும் அப்பனும். ஆயிற்று. மறுபடியும் ஆரம்பித்தனர் வேலையை.... திரயோதசி மாலையில் பாற்கடலில் இருந்து மங்கலப் பொருட்கள் ஒவ்வொன்றாகத் தோன்றின.
-
🍀அமுத கலைகளுடன் சந்திரன் தோன்றினான். ஐஸ்வர்ய நாயகியாக அன்னை மஹாலக்ஷ்மியும் சகல மருந்துகளுடன் தன்வந்திரியும் தோன்றினர். காணாமற் போன பட்டத்து குதிரையும் உள்ளிருந்து ஓடி வந்தது. யானையைக் காணோமே என்று திகைத்தான் இந்திரன்.. திருவெண்காட்டில் சிவபூஜை செய்து சாப விமோசனம் பெற்ற ஐராவதம் பெரும் பிளிறலுடன் உற்சாகமாக வந்து சேர்ந்தது.
-
🍀நிறைவாக அமுதம் நிறைந்த பொற்கலசம் பேரொளியுடன் தோன்றியது. தேவர்களும் அசுரர்களும் ஆனந்தக் கூத்தாடினர்.. தேவகன்னியர் திரும்பவும் பேரெழில் பெற்றதில் தேவேந்திரனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ''எனக்கு.. எனக்கு..'' என ஒரே கூச்சல்.. பெருஞ்சத்தம். நான்முகன் அனைவரையும் கடிந்து கொண்டார். ''துயரப்பட்டு அழுதபோது கண்ணீரைத் துடைத்து, அருள் புரிந்த ஈஸ்வரனை மறந்தீர்களே?... மீண்டும் மீண்டும் பிழை செய்யாதீர்கள்...'' என்றார்.
-
🍀பிழை உணர்ந்த அனைவரும் ஒன்று கூடி ஆரவாரத்துடன் திருக்கயிலை மலைக்குச் சென்று - ஈசனையும் அம்பிகையையும் நன்றியுடன் பணிந்தனர். ''வலம்புரத்தில் எமை வணங்கி வளம் பெறுவாயாக!...'' என்று வாசுகிக்கு அருளினர் - ஐயனும் அம்பிகையும். மனங்கனிந்த பெருமான் டமருகத்தை ஒலித்தார். அம்பிகை அகமகிழ்ந்தாள்.
-
www.facebook.com/Thiruneriya.Thamizhosa
-
🍀தலை தாழ்ந்து பணிந்து வணங்கிய நந்தியம்பெருமானின் சிரசில் இரு கொம்புகளுக்கு இடையில் திருநடனம் புரிந்தருளினார். உமையவளை ஒருபுறம் கொண்டு ''சந்தியா நிருத்தம்'' எனும் நடனம் ஆடினார். மலைமகளும் பெருமானுடன் ஆடி மகிழ்ந்தாள். கணபதியும், கந்தனும், திருமாலும் அலைமகளும், நான்முகனும் கலைமகளும், வியாக்ரபாதரும் பதஞ்சலியும், கணங்களும் தேவ கன்னியரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் அசுரர்களும், யோகியரும் மகரிஷிகளும், நாரதாதி முனிவர்களும், கின்னரர்களும் கிம்புருடர்களும், நாகர்களும் யட்சர்களும், விச்சாதரர்களும் வேதியர்களும் கண்டு களித்து அம்மை அப்பனை வணங்கி இன்புற்றனர்.
-
🍀ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் என - இருமுறை பிரதோஷம் நிகழும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை நேரம் மட்டும் தான். திரயோதசி நாளில் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும் பிரதோஷ காலமாகும்.
-
🍀அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு - தேவர்களும் அசுரர்களும் செய்த பிழையினால் விளைந்த - ஆலகால நஞ்சினை உண்டார் சிவபெருமான். ஈசன் நஞ்சினை உண்ட பொழுது, மேலிட்ட அன்பினால் அம்பிகை தன் வளைக்கரத்தினால் வருடி விட, நஞ்சு கண்டத்திலேயே பொலிந்து நின்றது. பிரதோஷ காலத்தில் தான் நந்திதேவரின் கொம்புகளுக்கு இடையில் நர்த்தனமாடி அருள் புரிந்தார்.
-
🍀இப்படியாக, எம்பெருமான் நஞ்சுண்டு அண்டங்களைக் காத்தருளி - ''சந்தியா நிருத்தம்''- நிகழ்த்திய புண்ணிய வரலாற்றினைக் கேட்டவர்களும் படித்தவர்களும் சகலவிதமான ஐஸ்வர்யங்களும் நிறையப்பெற்று நோயும் பிணியும் நீங்கி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
-
''நம பார்வதீ பதயே!... ஹரஹர மகாதேவ!...''
-
#நன்றி திரு துரை #செல்வராஜூ அவர்களுக்கு
-
www.fb.com/Thiruneriya.Thamizhosai
-
🍀தென்னாடுடைய சிவனே போற்றி!🍀
🍀எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🍀🍀
-
|| ----------- 🍀திருச்சிற்றம்பலம்🍀 ----------- ||

Friday 21 September 2018

*சிவாய நம*🙏

*பரிகாரம்_என்றால்*
*என்ன?????*

*எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை*

*எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” – பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது.*

அவர்களுக்கு மட்டுமல்ல பரிகாரம் என்றால் உண்மையில் என்ன என்று புரியாதவர்களுக்காகவும் தான் இந்தக் கதை!

படிப்பதோடு நின்றுவிடாமல் இது உணர்த்தும் நீதியை மறக்காமல் பின்பற்றி பலனடைவோமாக.

ஒரு பரிகாரத் தலத்தில் பரிகாரம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்…
அறியாமல் செய்த தவறுக்கு சகல வல்லமை படைத்த மன்னன் செய்த பிராயச்சித்தம் என்ன?

ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது.

அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்
அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து “ஐயோ… அம்மா” என்ற குரல் கேட்டது.

ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே… யாரையோ தவறுதலாக கொன்றுவிட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான்.

அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.

“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே” என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்கவேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.

வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.

கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.

இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்.

மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, என்னை மன்னித்துவிடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு இது. போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணிவிட்டேன்….”

தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாகவில்லை என்று யூகித்துக்கொண்டான்.

அடுத்தநொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அருகே நின்றுகொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.

தட்டுக்கள் வைக்கப்பட்டபிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான். பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.

மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகிவிட்டேன். நான் தண்டிக்கப்படவேண்டியவன். பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டுவிடுகிறேன். நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் (பரிகாரம்) இது தான். இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.

அவற்றை எடுத்துக்கொண்டு என்னை மன்னியுங்கள். அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக்கொள்ளுங்கள்..” என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.

உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.

அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது… செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகுவெட்டி பேச ஆரம்பித்தான்…. “ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?

நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரி தானே? நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்..?”

ஐயோ அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப்போகிறான் போலிருக்கிறதே…” எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.

விறகுவெட்டி தொடர்ந்தான்… “நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை. அவர் அளிக்கும் பொன்பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம்வருந்தவேண்டும் என்று விரும்பினேன்.

அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார். அது ஒன்றே எனக்கு போதும்.

மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும். நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.

அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக்கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும். மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது… எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.

ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந்தன்மையா, இப்படி ஒரு ஞானமா என்று வியந்துபோனார்கள் அனைவரும்.

*அந்த மன்னன் தான் நாம்.*

*நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை.*

*அந்த விறகுவெட்டி தான் இறைவன்.*

*இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று. இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.*

*ஒரு பரிகாரத்தை எதற்கு செய்கிறோம் என்றே தெரியாமல் அதை இன்று பலர் செய்வது தான் வேடிக்கை. பரிகாரம் என்பது ஒரு உபாயம் அவ்வளவே. அதுவே இறுதியானது அல்ல.*

*நாம் செய்யும் பரிகாரங்களை எல்லாம் இறைவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் அவனுக்கில்லை. ஆனால், நாம் என்ன நினைத்து பாவமன்னிப்பு கேட்கிறோம், அதற்கு ஈடாக என்ன பிராயச்சித்தம் செய்கிறோம் என்பது இங்கே மிகவும் முக்கியம்.*

*நீங்கள் எந்திரத்தனமாக செய்யும் எந்த பரிகாரமும் பலன் தரவே தராது.நீங்கள்* *எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் சரி… எத்தனை லட்சங்களுக்கு திருப்பணிகள் செய்தாலும் சரி*
*செய்த பாவத்திற்கு மனம்திருந்தி கண்ணீர்விட்டு மன்னிப்பு கேட்டாலொழிய உங்களுக்கு பரிகாரம், செய்த பாவங்களுக்கு மன்னிப்பு இறை நீதிமன்றத்தில்  கிடைக்காது.*

அடுத்த முறை என்ன பரிகாரம் செய்தாலும், நாம் செய்த குற்றத்திற்கு (பாவத்திற்கு) பிராயச்சித்தமாகத் தான் இதை செய்கிறோம் என்று உணர வேண்டும்.

கடந்தகால / முன்ஜென்ம தவறுக்கு வருந்தி – கண்ணீர் விட்டு இறைவனிடம் மன்னிப்பு கேட்கும் ஒருவர் எந்த மனநிலையில் இருப்பாரோ அதே மனநிலையில்தான் – ஒருவர் பரிகாரம் செய்யவேண்டும்.

செயல் விளைவு தத்துவம் புரிதல் வேண்டும்.

மேற்கூறிய மன்னன் அந்த விறகுவெட்டி முன்பு தன்னை ஒப்படைத்த மனநிலையில் இருந்து பரிகாரம் செய்து பாருங்கள்… இறைவன்அருளால் உடனடி பலன் நிச்சயம்.

சிவாய நம 🙏

இறையருளால் வாழ்க வளமுடன் 

Monday 17 September 2018

🤲 திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

🤲 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்...

🤲 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..

🤲 ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

🤲 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.

🤲 பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

🤲 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.

🤲 வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

🤲 செல்வம் மலை போல குவியும்.

🤲 உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்யுடன் உள்ளார்கள்.

🤲 அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

🤲 வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.

🤲 இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

🤲 கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

🤲 குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

🤲 நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

🤲 நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

🤲 சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள்,

🤲 தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.

🤲 திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

🤲 திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

🤲 அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

🤲 அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்

🤲 அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

🤲 அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .

🤲 மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

🤲 அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.?

🤲 மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

🤲 வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

🤲 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் "

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

🤲 பொதுப் பொருள்:

🤲 திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

🤲 ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்...

👉 அனைவருக்கும் பகிருங்கள். இது போல பயனுள்ள பதிவுகளுக்கு இந்த பக்கத்தை லைக் செய்யவும்.
*#திருப்பம்_தரும்*

*#திருப்பதி_ஸ்ரீவெங்கடாசலபதி*




*******************************************************************************************************


*செல்வத்தை அருளும் திருப்பதி வெங்கடாசலபதி*

*பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர்.*

*அதோடு, பிறப்பு - இறப்பு வட்டத்திலிருந்து மனிதனை விடுவித்து, அவனுக்கு முக்தி அளிக்கக்கூடிய சக்தி படைத்த ஒரே கடவுள் அவர்.*

*புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சியாக விளங்கு கின்றன.*

*திருப்பதி வேங்கடா சலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு சில புள்ளிவிபரங்கள்.*

*32,000 ஹெக்டேரில் பரவிக் கிடக்கும் மரங்கள் மற்றும் மலைக்காடுகள். இவற்றில் ஏராளமான சந்தன மரங்களும் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மலர்களை உபயோகிக்கும் கோவிலும் இதுதான். ஒரு நாளைக்கு 380 டன் பூக்கள் இக்கோவிலில் உபயோகிக்கப்படுகின்றன.*

*திருமலை திருப்பதி தேவஸ்தானம், மேல்திருப்பதி மலையில் 100 ஹெக்டேர் பரப்பில் பூந்தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகிறது.*

 *திருமலை திருப்பதி தேவஸ்தானம் 14,000 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளது. அவர்கள் 48 வெவ்வேறு துறைகளில் வேலை செய்கின்றனர். நாட்டிலேயே மிகப் பெரிய கோவில் நிர்வாக அமைப்பு இதுதான். ஒரே கோவிலில் அதிகபட்ச எண்ணிக் கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் இக்கோவிலில்தான். வருடத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி 600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுத்தம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் 3000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரே நிர்வாகத்தின்கீழ் வழங்கப்படும் தங்கும் விடுதிகளை அமைத்துள்ளதில் இது முதலிடத்தை வகிக்கிறது. இங்கு 7200 அறைகள், குடில்கள் மற்றும் சத்திரங்கள் இருக்கின்றன. இதில் நாள் ஒன்றுக்கு 60,000 பேர் தங்கலாம்.*

*தினமும்சுமார் 60,000 யாத்திரீகர்களுக்குத் தினசரி இலவச உணவு வழங்கப்படுகிறது.லட்டு தயாரிப்புக்காக மற்றும் ஆலயப் பணிகளுக்காக மிக அதிக எண்ணிக்கையில் நெய்யைப் பயன்படுத்தும் கோயில் இது. வருடத்துக்கு 1,800 டன்கள். மிக அதிக அளவில் மின்சக்தியைப் பயன்படுத்தும் கோவிலும் இதுதான். ஒரு மாதத்துக்கு 2 கோடி யூனிட்டுகள். நாட்டிலேயே பெரிய அளவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி உணவும் பிரசாதமும் தயாரிக்கும் கோவில் இது. ஒரு மணி நேரத்திற்கு 2.2டன் நீராவி இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது.*

 *30 கல்வி நிறுவனங்கள், 3 பல்கலைக்கழகங்கள், மற்றும் 10 மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை இக்கோவில் நிர்வகித்து வருகிறது.*

*கணினித் தொழில்நுட்பத்தைப் பரந்த அளவில் பயன் படுத்தும் முதல் கோயில் இதுதான். இக்கோவிலுக்கு என்று தனியாக ஒரு 'கால் சென்டரே’ இருக்கிறது. தங்கும் வசதி, தரிசன டிக்கெட், உண்டியல், போக்குவரத்து ஆகியவற்றை இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். சம்ஸ்கிருதமொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக இங்கு 1884ல் ஒரு கல்லூரி நிறுவப்பட்டது.*

*நாட்டின் முதல் இசைக் கல்லூரி இங்கு 1959ல் திறக்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக, பாரம்பரியச் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலையைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளி இங்கு துவக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரம்பரியச் சிற்பக் கட்டிடக்கலைப் பள்ளி. நாட்டிலேயே முதன்முறையாக, இலவசமாகச் செயற்கைக் கை, கால்கள் பொருத்தும் மையம் 1981ல் இங்கு துவக்கப்பட்டது.*

*#திருமலை_திருப்பதி*

 *ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் இருக்கும் எழு மலைகளை உடைய திருமலையில் அமைந்திருக்கிறது வெங்கடாசலபதி கோயில்.*

*இந்த எழுமலைகளும் வைகுண்டத்தில் விஷ்ணு அமர்ந்திருக்கும் ஆதிசேஷன் என்ற நாகத்தின் ஏழு தலைகளை குறிக்கிறது. அதேபோல இந்த ஏழு மலைகளில் வெங்கடாத்திரி மலையில் திருப்பதி கோயில் அமைந்திருக்கிறது.*

*திருப்பதியில் இருக்கும் வெங்கடாசலபதி கலியுகத்தின் கடவுளாக பார்க்கப்படுகிறார். ஒரு பழங்கதையின் படி விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்து கலி யுகத்தை அளிக்கும் வரை இந்த கோயில் இங்கு இருக்குமாம்.*

*பல்லவ மன்னர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் என திருமலையை பல மன்னர்கள் 9ஆம் நூற்றாண்டு தொட்டு வழிபட்டு வருகின்றனர். புகழ் பெற்ற விஜய நகர மன்னரான கிருஷ்ண தேவ ராயர் இக்கோயிலுக்கு பெரும் பொன்னும், பொருளும் அளித்திருக்கிறார். அவர் அளித்த கொடையின் பயனாகவே திருப்பதி கோயிலின் விமானத்தின் உட்பகுதி தங்கத்தால் வேய்யப்பட்டிருக்கிறது.*

*#ஸ்ரீவெங்கடாசலபதி*

*திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணி வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.*

*முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கி விட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்த நேரத்தில் ``கவுசல்யா சுப்ரஜா ராம...'' என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.*

*சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாச மூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலில் இருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமர வைப்பர்.*

*சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணையும் படைத்து ``நவநீத ஹாரத்தி'' எனப்படும் தீபாராதனை செய்யப்படும். ``விஸ்வரூப தரிசனம்'' என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ. 120. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.*

*திருப்பதி மலையில் உள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்து சேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். (பிரம்மோற்சவ காலத்தில் மட்டும் யானை மீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).*

*ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணி (ஸ்பூன் போனறது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள மூலவருக்கு பதிலாக அருகில் உள்ள போகசீனிவாத மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.*

*அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்து நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.*

*இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும். காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி பாலாஜியை காண கண் கோடி வேண்டும். பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. நம் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சாத்தனார் மணிமேகலை போன்ற இயேசு பிறப்பதற்கு முந்தைய கால இலக்கியங்களிலேயே திருப்பதி பற்றிய குறிப்புகள் உள்ளன.*

*அவற்றில் திருப்பதியின் அப்போதைய பெயரான `திருவேங்கடம்' என குறிப்பிடப்பட்டிருக்கும். இன்று எத்தனையோ திருக்கோயில்கள் இருக்கும் போது திருப்பதியில் மட்டும் ஏன் பக்தர்கள் கூட்டம் இப்படி அலைமோதுகிறது? காரணம் இல்லாமல் இல்லை. இந்த சேஷத்திரத்தில் மகாவிஷ்ணு நடத்திக் காட்டிய மகிமைகள் பல. ஒருநாள் இருநாளில் அல்ல. பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டு நடத்திய `நாடகம்' தான் திருப்பதியில் வெங்கடேஸ்வர பெருமாள் குடிக்கொள்ள காரணமாயிற்று.*

*#உலகிலேயே_அதிக_பக்தர்கள்_வரும்_கோயில்*

*உலகிலேயே அதிக பக்தர்கள் தரிசனத்திற்காக வரும் கோயில் என்ற பெருமையை திருப்பதி பெற்றிருக்கிறது. தினமும் இங்கு குறைந்தது 50,000 முதல் ஒரு லட்சம் பக்த்தர்கள் வரை தரிசனம் செய்ய வருகின்றனர். பிரம்மோர்த்தசம் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் ஐந்து லட்சம் பக்த்தர்கள் வரை இங்கு வருகின்றனர்.*

*#உண்டியலில்_பெரும்_கொடை*

*இங்கு வரும் பக்த்தர்கள் அனைவரும் பெரும் கொடையளிப்பது வாடிக்கை. அப்படி செய்ய காரணம் என்னவென்றால் வெங்கடாசலபதி கடவுள் தன்னுடைய திருமணத்திற்காக செல்வத்தின் அதிபதியான குபேரனிடம் 1,14,00,000 தங்க காசுகளை கடனாக பெற்றதாகவும் அதனை திருப்பி கொடுக்க வெங்கடாசலபதிக்கு உதவி செய்யும் பொருட்டே உண்டியலில் பெரும் கொடையளிக்கும் வழக்கம் வந்ததாகவும் கூறப்படுகிறது.*

*#ஸ்தல_புராணம்*

*கங்கை நதிக்கரையில் காஸ்யப முனிவரின் தலைமையில் முனிவர்கள் சிலர் யாகம் செய்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நாரதர் இந்த யாகம் யாருடைய நன்மைக்காக நடத்தப்படுகிறது என கேட்டார். ஆனால் அங்கிருந்த முனிவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. அதனால் பிருகு முனிவரிடம் உதவி கேட்டு சென்றனர்.*

*பிருகு முனிவரின் உள்ளங்காலில் ஒரு கண் இருந்ததால் அவருக்கு மற்ற முனிவர்களை விட ஞானம் சற்று அதிகம் இருந்தது. அவர் இதற்கு ஒரு தீர்வு காண நினைத்து பிரம்மனை தரிசிக்க சத்யலோகத்திற்கு சென்றார். அங்கே பிரம்மதேவர் சரஸ்வதி தேவியின் துணையுடன் தனது நான்கு முகங்களாலும் ஸ்ரீமன் நாராயணைப் போற்றி நான்கு வேதங்கள் ஓதிக் கொண்டிருந்தார்.*

*அவர் பிருகு முனிவர் வந்ததை கவனிக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முனிவர் இவர் வழிபாட்டிற்கு உகந்தவர் இல்லை என முடிவு செய்து சிவப்பெருமானை தரிசிக்க கைலாசம் சென்றார். ஆனால் சிவன் பார்வதிதேவியுடன் ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததால் அவரும் முனிவரை கண்டுக் கொள்ளவில்லை.*

*முனிவரைக் கண்ட பார்வதிதேவி சிவனிடம் கூற அவரோ தனது முக்கிய ஆலோசனையின் போது முனிவர் குறுக்கிட்டதைக் விரும்பாததால் அவரை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். அதனால் ஆத்திரமுற்ற பிருகு முனிவர் சிவப்பெருமானுக்கு சாபமிட்டு அங்கிருந்து நகர்ந்தார். பின்னர் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்தார்.*

*ஆனால் ஆதிசேஷன் குடை விரிக்க, மகாலட்சுமி காலடியில் அமர்ந்து பணிவிடை செய்ய ஆனந்த சயனத்தில் இருந்ததால் அவரும் முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் ஆத்திரத்தில் மதியிழந்த பிருகு முனிவர் மகாலட்சுமியின் உறைவிடமான மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எட்டி உதைத்தார்.*

*முனிவரின் கோபத்தை தணிக்க நினைத்த பெருமாள் எட்டி உதைத்த காலை சட்டென பிடித்து பாதங்களை மென்மையாக அழுத்திவிட்டார். அந்த இதத்தில் முனிவரின் கோபம் தணிந்தது. அதே சமயம் மகாவிஷ்ணு பிருகு முனிவரின் காலில் இருந்த கண்ணை பறித்துவிட்டார். பாதத்தில் இருந்த கண் தான் அவருக்கு இத்தனை அகங்காரத்தை தந்தது.*

*தனது தவற்றை உணர்ந்த முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்புக் கோரிவிட்டு மும்மூர்த்திகளில் சிறந்தவர் இவரே என முடிவு செய்தார். இருப்பினும், தனது மணவாளன் தன்னை எட்டி உதைத்த முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்டதை விரும்பாத ஸ்ரீதேவி அவரிடம் கோபித்துக் கொண்டு சென்று இன்று மகாராஷ்டிராவில் உள்ள கோலாபூர் எனும் இடத்திற்கு சென்றுவிட்டார்.*

*அவரைத் தேடிப் பிடித்து வருவதற்காக பூலோகம் வந்த மகாவிஷ்ணு வேங்கடமலையில் உள்ள புஷ்கரணியின் தெற்கு கரையில் ஒரு புளிய மரத்தடியில் எறும்பு புற்றின் மேல் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார். இதில் மனமுருகிய பிரம்மரும், ஈசனும் பெருமாளுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக் குட்டியின் வடிவெடுத்து அவர்களும் பூலோகம் வந்தனர்.*

*இத்தனை சங்கதிகளையும் சூர்ய பகவான் மூலம் அறிந்த மகாலட்சுமி அவரது அறிவுரைப்படி மாடு மேய்க்கும் பெண்ணாக உருக்கொண்டு வந்து பசுவையும் கன்றையும் சோழ மன்னனுக்கு விற்றார். அவற்றை வாங்கிய சோழ மன்னனின் பணியாட்கள் அவற்றை வேங்கடமலைக்கு மேய அனுப்புவார்கள்.*

*அங்கே ஒரு எறும்பு புற்றில் மகாவிஷ்ணுவை கண்ட பசு தாமாகவே அங்கே பால்சுரக்க ஆரம்பித்தது. அதை ஏற்று மகாவிஷ்ணுவும் பசியாறி வந்தார். இதற்கிடையே அரண்மனையில் பசுக்கள் பால் தருவது இல்லை என்பதை கவனித்த மன்னனின் வேலையாள் பசுவை பின் தொடர்ந்து வந்தான்.*

*அது ஒரு இடத்தில் தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த அவன் பசுவின் மீது தன் கோடாலியை வீசியெறிய அது பசு மீது பட்டுவிடக் கூடாது என மகாவிஷ்ணு குறுக்கேத் தோன்றி அடியை தான் வாங்கினார். தான் வீசிய ஆயுதம் மகாவிஷ்ணுவை தாக்கி அதனால் ரத்தம் வருவதைக் கண்ட வேலையாள் அதிர்ச்சியில் உயிரிழந்தான். ரத்தக் கறையுடன் பசு மாடு வருவதைக் கண்ட சோழ ராஜா என்ன நடந்தது என அறிய அதை பின் தொடர்ந்தான்.*

*அங்கே எறும்பு புற்று ஒன்றின் அருகே தனது வேலையாள் இறந்து கிடப்பதைக் கண்டு எதுமறியாமல் விழித்தான். அப்பொழுது அவனுக்கு காட்சியளித்த  விஷ்ணு அவனது வேலைக்காரன் செய்த குற்றத்திற்கு மன்னனுக்கு சாபமிட்டார். ஆனால் மன்னன் மீது தவறேதுமில்லாக் காரணத்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் ஆகாய ராஜாவாக பிறப்பானென்றும் தனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடக்கும் சமயம் அவனது சாபம் தீரும் எனவும் ஆசி வழங்கினார்.*

*#ஸ்ரீவராகசுவாமி_ஆலயம்*

*இந்த சம்பவங்கள் நடந்த காலக்கட்டத்தில் திருப்பதி மலை வராகசுவாமியின் இருப்பிடமாக ஆதி வராக ஷேத்திரமாக இருந்தது. சோழ ராஜாவிற்கு ஆசி வழங்கி அனுப்பிய மகாவிஷ்ணு ஸ்ரீனிவாசன் என்ற பெயருடன் தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டி வராக சுவாமியை சந்தித்தார்.*

*அவரும் மகிழ்ந்து இடமளித்தார். அதற்கு நன்றிக் கூறும் விதமாகத் தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புஷ்கரணியில் குளித்து வராக சுவாமியை தரிசித்து பூஜை, நைவேத்தியங்களை முதலில் அவருக்கு செய்துவிட்டு பிறகு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது.*

*#பத்மாவதி_தாயார்*

*இது அனைத்தும் ஒரு ஜென்மத்து கதை. இக்கதை சோழ மன்னனின் அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அடுத்த பிறவியில் அச்சோழ மன்னன் ஆகாச ராஜாவாக பிறந்தான். பிறந்து வளர்ந்து அனைத்து வளங்களும் பெற்று திகழ்ந்த அவனுக்கு பிள்ளைப் பேறு இல்லை அதனால் யாகம் செய்ய எண்ணிய அவன் நிலத்தை உழுதப் பொழுது அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது.*

*அதை அருகில் சென்று பார்த்தப்போது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிந்தது. அப்போது அதை எடுத்து வளர்த்தால் சகல சவுபாக்கியம் உண்டாகும் என அசரீரிக் கேட்டது. தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி எனப் பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தான். இதனிடையே சீனிவாசன் என்ற பெயரோடு வாழ்ந்து வந்த மகாவிஷ்ணு பத்மாவதியைக் கண்டார்.*

*உடனே பெற்ற தாய் போல தன்னை கவனித்து வந்த வகுலாதேவியிடம்  சென்று பூர்வஜென்ம கதைகளைக் கூறி பத்மாவதியை தான் மணக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார். அதே சமயம் ஆகாச ராஜாவும் அவனது மனைவியும் கூட தங்களது மகள் வேங்கட மலையில் வசித்து வரும் சீனிவாசனை மணக்க விரும்புவதை அறிகிறார்கள்.*

*செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் இத்திருமணச் செலவுகளுக்காக சீனிவாசனுக்கு கடன் தருகிறார். இரு வீட்டார் சம்மதத்துடன் தேவர்களும், சிவன், பிரம்மா புடைசூழ சீனிவாசன், பத்மாவதி திருமணம் நடைபெறுகிறது. இக்கதையும், இத்திருமணமும் நடைபெற்ற இடம் தான் திருவேங்கடமலை (திருப்பதி திருமலை).*

*அதனால் இன்றும் திருமலையில் தினமும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி இப்போதும் பிரம்மோற்சவம் நடக்கும் 9 நாட்களும், மஞ்சள், குங்குமம் மற்றும் சேலை திருப்பதியில் இருந்து திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாருக்கு எடுத்து செல்லப்படுகிறது.*

*#கோவில்_அமைப்பு*

*திருப்பதி திருமலையின் மலை கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் இருக்கிறது திருமலை ஏழுமலைகளைக் கொண்டது. ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் வீற்றிருப்பது ஏழாவது மலையான வெங்கடாத்ரியின் உச்சியில், மற்ற மலைகளின் பெயர்கள், சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, ஆகும். ஏழாவது மலை தான் வெங்கடாத்திரி. இந்த மலைகளின் மொத்த பரப்பளவு 10.33 சதுர மைல்கள்.*

*#திருப்பதியில்_மொட்டையடிப்பது_ஏன்*

*மகாவிஷ்ணு மாடு மேய்பபவனால் தாக்கப்பட்ட போது அவரது தலையில் இருந்த கேசம் உதிர்ந்து வழுக்கை விழுந்தது. பின்னர் அங்கே முடி வளரவேயில்லை. அதை ஒருமுறை கவனித்த கர்ந்தர்வ இளவசரசி நீலா தேவி இத்தனை அழகான முகத்தில் வழுக்கை ஒரு குறையாக இருக்கிறதே' என வருந்தி தனது கூந்தலை வெட்டி விஷ்ணுவின் வழுக்கையில் ஒட்டி முடி வளர செய்தாள். கண் விழித்து பார்த்த மகா விஷ்ணு அவளது பக்தியையும் தியாகத்தையும் கண்டு மெச்சி இனி தன்னை காண வரும் பக்தர்கள் தரும் முடி காணிக்கைகள் அனைத்து நீலா தேவியையே சேரும் என வரமளித்தார். அவளது பெயரில் இருக்கும் மலைதான் நீலாத்திரி.*

*#சேவைகள்_மற்றும்_பூஜைகள்*

*நாம் ஒரு பேச்சு வழக்கிற்கு நித்ய கல்யாணம் பூரணத் தோரணம் என்போம். அது எங்கு சரியாகப் பொருந்துகிறதோ இல்லையோ திருப்பதிக்கு மிகச் சரியாகப் பொருந்தும். சினிவாசப் பெருமாளுக்கும்,பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த ஸ்தலம் என்பதால் இங்கு தினமும் கல்யாண உற்சவம் நடைப்பெறுகிறது. மேலும் டோலோற்சவம், வசந்தோற்சவம்,அர்ச்சித பிரமோற்சவம் என பல உற்சவங்கள் தினசரி நடைபெறுகிறது.*

*சேவைகளில் சுப்பாத தரிசனம் அதிகாலை 2 மணிக்கு தினந்தோறும் நடைபெறுகிறது. தோமால சேவை மற்றும் அர்ச்சனைகள் செவ்வாய், புதன், வியாழன்களில் மட்டும் நடக்கிறது. உற்சவங்கள்:திருப்பதியில் தினமுமே உற்சவம்தான் என்றாலும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், தமிழில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிக முக்கியமானது.*


*9-நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம் முதன் முதலில் படைப்பு கடவுள் பிரம்மாவால் கொண்டாடப்பட்டது. தான் படைக்கும் உயிர்களை வெங்கடேசப்பெருமாள் சிறப்பாகப்பாதுகாப்பதற்கு நன்றி கூறும் விதமாக பிரம்மர் உற்சவம் நடத்தினார். அது தான் இன்று அவரது பெயராலேயே பிரமோற்சவம் என அழைக்கப்படுகிறது.*

*#திருப்பதி_லட்டு*

*திருப்பதி லட்டை பிடிக்காதவர்கள் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது, இந்த விசேஷமான சுவை வேறெங்கும் நமக்கு கிடைக்காததாகும்.*

*#சுவாமியை_தரிசிக்க_மூன்று_வழிகள்*

*சுவாமியை தரிசனம் செய்வதற்கு சர்வ தரிசனம், சுதர்ஸன தரிசனம், சீக்கிர தரிசனம் (எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லா மல் 300 ரூபாய் டிக்கெட் எடுத்துச் சென்று தரிசனம் செய்வது) என மூன்று வழிமுறைகள் உள்ளன.*

*சர்வ தரிசனத்தில், சாதாரண நாட்களில் 8 மணிநேரமும், சுதர்ஸன தரிசனத்தில் மூன்று மணிநேரமும் ஆகிறது. இதற்கென முறையான திட்டமிடல் இல்லாமல், லீவு கிடைத்துவிட்டது என்பதற்காகப் புறப்பட்டுச் சென்று, வெங்கடேசப் பெருமாளைப் பார்க்கப் போய் நெரிசலில் சிக்கி, கால் கடுக்க காத்துக் கிடந்து அவஸ்தைப்பட்டு, சிலர் சுவாமியைப் பார்க்காமலே திரும்பி வந்த கசப்பு உணர்வுதான் காரணம். அப்படிப்பட்ட நிலை பக்தர்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தவிர்க்க, தரிசனத்தை எளிதாக்க இதோ சில குறிப்புக்கள்*

 *உங்கள் திருமலை யாத்திரையை விடுமுறை அல்லாத நாட்களில் தொடருங்கள்.*

 *திருமலைக்கு செல்லும் முன்பே இரயில் மற்றும் பேருந்து டிக்கட்டுகள், தங்கும்*

 *வசதிகள் மற்றும் சேவை டிக்கட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.*

*திருப்பதிக்கு வந்து சேர்ந்த உடனே சுதர்ஸன் டோக்கன்களை பெறுங்கள்.*

*திருமலை அதிகாரி பக்தர்களுக்காக தெரிவித்த தகவல்*

*திருவேங்கடமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் பயணத்தை எளிதாக்குவற்கான குறிப்புகளைத் தந்தார். அவற்றை அப்படியே தொகுத்திருக்கிறோம்..*

*தங்கும் வசதிக்காக உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சி.ஆர்.ஓ. அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மட்டும் க்யூவில் காத்திருக்கலாம். மற்றவர்கள் சி.ஆர்.ஓ. அலுவலத்திற்கு பக்கத்தில் உள்ள யாத்திரிகர்கள் வசதிக்கூடத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம். அங்கு அனைத்து வசதிகளும் உள்ளன.*

*தகவல் அறிவதற்கு, இரயில் நிலையம், விமான நிலையம், ஆர்.டி.சி. பேருந்து நிலையம், அலிபிரி பேருந்து நிலையம், சத்திரங்கள், அலிபிரி டோல்கேட், மற்றும் ரேணிகுண்ட்டா இரயில் நிலையத்தில் தகவல் மையங்களை அணுகுங்கள்.*

*சுற்றுலா ஸ்தலமாக இருக்குற இடங்கள் யாத்திரை ஸ்தலங்களாக இருக்காது. யாத்திரை ஸ்தலங்களாக இருக்குற இடங்கள் சுற்றுலாதலமா இருக்காது.  திருமலை திருப்பதி தேவஸ்தானம் காலத்துக்கேற்ப செஞ்சுக்கிட்டு வர்ற சீர்திருத்தங்கள் மற்றும் வசதி வாய்ப்புகளுக்குப் பிறகு பக்தர்களுடைய வருகை ரொம்பவே அதிகரிச்சிடுச்சுக்கிட்டு வருது.*

*வார நாள்ல 50 ஆயிரம் பேர் திருமலைக்கு சாமி கும்பிட வருவாங்க. சனி ஞாயிறு கவர்மெண்ட் ஹாலிடேன்னா, 1 லட்சம் பேருக்கு  மேல வர்றாங்க. ஒரு சாதாரண வி.ஐ.பியைப் பார்க்கவே நாம அப்பாயின்மென்ட் வாங்கிக்கிட்டு, புறப்படும் போது போன்ல உறுதிபடுத்திக்கிட்டு கிளம்புறோம். வெங்கடாஜலப்தியைப் பாக்கணும்னா அது எவ்வளவு பெரிய விஷயம். அதுக்கு சின்னதா ஒரு திட்டமிடக்கூடாதா?'' என்றவர்,*

*திருமலை யாத்திரையை பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்கலில் இல்லாமல், வார நாட்களில் பயணம் இருப்பது போல் திட்டமிட்டுக் கொண்டால், எளிதாக சுவாமி தரிசனம் செய்து, பயணத்தை இனிதானதாக ஆக்கலாம்.*

*திருப்பதிக்குச் செல்ல ரெயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள், திருமலையில் தங்கும் அறை வசதிகள் மற்றும் தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்வது நல்லது. ஆன்லைனில் 90 நாட்களுக்கு முன்பாகவும், தேவஸ்தான அலுவலகங்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.*

*தமிழகத்தில் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.திருமலையில் தங்கும் வசதியைப் பெற கணவன் மனைவி இருவரும் செல்ல வேண்டும் தனிநபராக செல்பவருக்கு அறைகள் தரப்படுவதில்லை.*

*சுதர்ஸன டோக்கன்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருக்கும்  நேரத்தை வெகுவாக குறைக்க உதவும்.சுதர்ஸன் டோக்கன் வசதியைப் பெற திருமலைக்குச் செல்ல திட்டமுட்டுள்ள அனைவரும் ஒன்றாகச் சென்று தரிசன நாள், நேரம் ஆகியவற்றை கைரேகை மற்றும் புகைப்படப் பதிவைச் செய்தாக வேண்டும்.*

*திருமலையில் அறைவசதி கிடைக்காவிட்டாலும்  நாம் கொண்டு செல்லும் பொருட்களை வக்க ஆயிரக்கணக்கான லாக்கர் வசதிகள் உள்ளன. அதில் தங்கள் பொருட்களை வைத்து விட்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.*

*திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக ரேணிகுண்டா, திருப்பதி பஸ்-ஸ்டாண்டு எதிர்புறம் சீனிவாசன் காம்ப்ளக்ஸ், திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணுநிவாஸ்., அலிப்பிரி டோல்கேட் ஆகிய இடங்களில் அதிகாலை 5 மணிக்கு  தொடங்கி, சுதர்சன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் 5 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதால், ஃபஸ்ட் கம் சர்வீஸ் அடிப்படையில் வழங்கப்படும் என்பதால் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது நல்லது.*

*திருமலை திருப்பதி தேவஸ்தானம், மலைப்பாதையில் செல்லும்போது பழுதடையும் வாகனங்களை சரிபார்ப்பதற்கு ரோந்து பழுதுபார்ப்பு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளது.*

*திருமலைக்கு நடந்து செல்பவர்களுக்கு வசதியாக திருப்பதி ரெயில் நிலையத்திலிருந்து அலிப்பிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.நடந்துச் செல்லும் யாத்திரிகர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி அடிவாரத்தில் உள்ள கௌண்டரில் செலுத்திவிட்டு மலை ஏறிச்சென்று திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக  திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.*

*திருமலை புனிதம் மற்றும் பரிசுத்தத்தை பாதுகாத்திட தேவஸ்தானத்துடன் ஒத்துழையுங்கள்.*

*கீழ்த்திருப்பதி வந்தவுடன் அங்குள்ள லாக்கர்களில் பொருட்களை வைத்து விட்டு, அலர்மேலு மங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்து விட்டு, மேல் திருப்பதியில், சுவாமி வெங்கடாசலபதியை வழிபடுவதற்கு முன், சுவாமி புஷ்கரிணி தீர்த்தத்தில் புனித நீராடி வராகப் பெருமாளைத் தரிசனம் செய்ய வேண்டும். கோவிலின் விதிமுறைகளைப் பின்பற்றி, கடவுளைத் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டும்..*

*கோவில் வளாகத்தில் எச்சில் துப்பவோ அல்லது எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவோ கூடாது. கோவிலின் விதிமுறைகளுக்கும் வழக்கங்களுக்கும் எதிரான எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது. கோவில் வளாகங்களில் புகைபிடிக்கக் கூடாது. கோவில் வளாகங்களில் காலணிகள் அணியக்கூடாது.*

*தங்களது அறையிலோ, வாகனங்களிலோ காலனிகளை விட்டுவிட்டு வெறுங்காலுடன் செல்ல வேண்டும். அல்லது அருகாமையிலிருக்கும் காலனிகள் பாதுகாப்பு மையத்தில் விட்டுச் செல்லலாம். சுவாமி தரிசனம் செய்யச் செல்லும்போது உங்களது செல்போன்களை அறையிலேயே விட்டுச் செல்வது நல்லது. இல்லாவிட்டால், தரிசனம் முடித்துவிட்டு லட்டு கௌண்டருக்குச் சென்று முடித்துவிட்டு, பிறகு செல்போன் பாதுகாப்பு மையத்துக்குசெல்ல வேண்டியிருக்கும்.*

*திருமலை யாத்திரையின் போது அளவுக்கதிகமான நகைகளையோ, பணத்தையோ உடன் எடுத்துச்செல்லக் கூடாது. முன்பின் அறியாதவர்களிடம் தங்குவதற்கு அறைகள் கேட்கக் கூடாஅது.. முன்பின் அறியாதவர்களை உங்கள் அறையிலும் தங்க வைக்கக்கூடாது என்று தெரிவித்தார்.*

*மேலும் கோவில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்ரைத் தொடர்பு கொள்வது அல்லது இனையதளத்தில் அறியலாம்.*

*திருப்பதி மலைவாழும் வெங்கடேசா!*
*திருமகள் மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா !*
*அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்*
*அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்*
*என் மனம் உருகிடவே பாடி வந்தேன்*
*உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்*
*நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா*
*மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா*
*உரைத்தது கீதை என்ற தத்துவமே*
*அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே*

*திருப்பதி மலைவாழும்* *வெங்கடேசா -திருமகள்*
*மனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா எம் இல்லம் வருக வருகவே !!*
*அருள் தருக தருகவே !!*



*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!* 

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!* 
 *#வாழ்க_வளமுடன்*