Followers

Monday 30 July 2018

ஆசை ஏன் வருகிறது ?

ஆசை என்ற தூண்டுதல் குண்டலனி என்ற விந்து  பையில் இருந்து தான் தோன்கிறது..

ஆசை என்பது இரண்டு வகை.சாதாரண ஆசை .வீரியமுள்ள ஆசை எனப்படும்.

சாதாரண ஆசை கிடைத்தால் ஏற்றுக் கொள்ளும்.
கிடைக்கவில்லை என்றால் ஏங்கித் தவித்துக் கொண்டே இருக்கும்.

வீரியமுள்ள ஆசை.தான் அனுபவித்தே ஆகணும் என்ற வெரிகொண்டு அலையும்.

தான் அனுபவிக்க நினைத்தது தனக்கு கிடைக்கவில்லை என்றால் பஞ்ச மா பாதகங்களையும்  செய்வார்கள்.

ஏன் கொலையும் செய்வார்கள்..

எனவே அதிக ஆசை என்னும்  காமத்தின் இச்சையால் சீக்கிரம்.உடல் நலிந்து முதிர்ந்து இறுதியில் மரணம் வந்து விடுகின்றது.

அன்பு.ஆசை.பேராசை.காதல்.பற்று. காம்ம்.வெகுளி.மயக்கம்.வீரியம்.மரணம்  எல்லாம் வீரியமுள்ள விந்து சகதியால்  தூண்டப்படுகிறது தான் ஆசையாகும்.

வள்ளலார் சொல்லுவதை கவனியுங்கள் !

நம்மை நஷ்டஞ் செய்வன நான்கு. அவையாவன:

ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் - ஆகிய இந்நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

இந்த நான்கிலும் முக்கியமானவை
ஆகாரம், மைதுனம். ஆதலால் இவ்விரண்டிலும் அதனிலும் அதிக ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும்.

இந்த இரண்டிலும் முக்கியமானது மைதுனம்.(விந்து) ஆதலால், இந்த விஷயத்தில் எல்லாவற்றைப் பார்க்கிலுமதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அவ்வாறு இராவிடில் தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும்.

பின்பு முத்தியடைவது கூடாது. முத்தியடைவதற்கு இம்மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தாலதை யடைவது அரிதாயும் இருப்பதாதலால், எவ்விதத்தாலாயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும்.என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

ஆசையை அடக்க முடியாது.கட்டுபடுத்த முடியும்..மாற்ற முடியும்.

எப்படி கட்டுப்படுத்துவது மாற்ற வேண்டும் என்பதை வள்ளலார் மட்டுமே சொல்லி உள்ளார்.

எப்படி கட்டுப் படுத்துவது மாற்றுவது ?

நம் உடம்பில்.உற்பத்தியாகும் விந்து சக்தியால்... கரணங்களில் உள்ள மனத்தின் வழியாகத்தான் வெளிப்படுகின்றன்.
செயல் படுகின்றன.

மனத்தை அடக்க முடியாது .மாற்ற முடியும் என்கிறார் வள்ளலார்.

எனவே மனத்தை சிற்சபையின் கண் இடைவிடாது செலுத்துங்கள் என்கிறார் வள்ளலார்...

வள்ளலார் சொல்லுவதை பாருங்கள்...!

கரண ஒழுக்கத்தில் மனம் முதலாவது இடத்தில் உள்ளது..

எனவே மனதை சிற்சபையின் கண் செலுத்துவது தவிர மற்றெந்த வகை ஆபாசத்திலும் செலுத்தாமல்.இழுத்துமேற்குறித்த இடத்தில் நிற்க செய்ய வேண்டும் என்கிறார்.

அதாவது நமது தலையின் உச்சியின் கீழே.உள் நாக்கின் மேலே மத்தியில் ஆன்மா இருந்து இயங்கும் இடம்தான் சிற்சபை என்பதாகும்.அதுதான் அருட்பெருஞ்ஜோதி யின். ஏகதேசம் என்னும் ஆன்ம ஒளியாகும்..அந்த இடத்தில் மனதை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்.
அப்போதுதான் மனம் வெளியே செல்லாமல் ஆன்மாவைப் பற்றிக் கொள்ளும்.அப்படி பற்றிக் கொண்டால் மட்டுமே.உலக ஆசையை துறக்க முடியும்..

விந்து சக்தி குறைந்து அருள் சக்தி வெளிப்படும்.அருள் சக்தி பூரணமாக கிடைத்தால் மட்டுமே உலக ஆசையை துறக்க முடியும்.

எனவே பொருள் ஆசை மறந்து அருள் ஆசை வெளிப்படும்...

பொருள் ஆசை நம்மை அழித்துவிடும்..
அருள் ஆசை நம்மை அழிக்காமல் பாதுகாக்கும்.

அருள் ஆசை வேணுமா ? பொருள் ஆசை வேணுமா ? நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

மனத்தை வள்ளலார் அடக்கிய பாடல் !

மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்

இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலை
ஆனாலோ

தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே

நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.!

என்னும் பாடல் வாயிலாக தன் மனதை அடக்கியதைப் பற்றி விளக்கமாக பதிவு செய்துள்ளார்...

எனவே விகாரத்தனமான ஆசையை அடக்க மனத்தை மாற்ற வேண்டும்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓக்குக !

No comments:

Post a Comment