Followers

Monday 30 July 2018

மந்திரங்களை எப்படி ஜபித்தால் முழுமையான பலன் கிடைக்கும் தெரியுமா  ?
நம்மை மீறிய ஒரு பேராற்றல் இந்த பிரபஞ்சத்தை கட்டுபடுத்துகிறது என்று நாம் உணர்ந்திருக்கிறோம். அந்த சக்தியை ஒவ்வொருவரும் அவருக்கு பிடித்த வகையில் பாவித்து இறைவனாக வணங்குகின்றனர். அப்படி அந்த இறைவனை வணங்கும் போது சில குறிப்பிட்ட சக்தி வாய்ந்த ஒலி அதிர்வுகள் கொண்ட வார்த்தைகளை, நாம் உச்சாடனம் செய்வதை “மந்திரம்” என்கிறோம். அந்த மந்திரங்கள் முழுமையான பலனை நமக்கு தர, நாம் செய்ய வேண்டிய சில விடயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
குரு உபதேசம்

குரு முகமாக மந்திரங்களை உபதேசம் பெற்றவர்கள், எக்காரணத்தை கொண்டும் அம்மந்திரத்தை பிறருக்கு சொல்லக்கூடாது. மேலும் முதன் முதலில் மந்திர உச்சாடனம் செய்யத் தொடங்கும் போது தங்களின் .           குலதெய்வம், உங்களின் இஷ்ட தெய்வம் மற்றும் உங்களின் குருவை மனதில் வணங்கி பின்பு மந்திர உச்சாடனங்களை தொடங்கலாம்.
மந்திர உச்சாடனம் செய்பவர்கள் அதை செய்யும் நேரத்தில் உடல், மனம், ஆன்ம சுத்தியுடன் செய்ய வேண்டும். புலால் உணவை அறவே நீக்கியவர்களுக்கு, குருவின் மூலமாக உபதேசம் பெற்ற மந்திரங்களின் மந்திர சித்தி எளிதில் கிட்டும். ஏனெனில் புலால் உணவை உண்பவர்களின் உடலில், இறந்த விலங்குகளின் மாமிசத்தை உண்ட தோஷம் ஏற்பட்டிருப்பதால், அது அந்த நபருக்கு மந்திர சித்தி கிடைப்பதை தடுக்கிறது. மாமிசம் உண்பவர்களுக்கு மந்திர சித்தி ஏற்பட குறைந்தது 6 மாத காலம் ஊண் உணவை நீக்கினால் மந்திர சித்தி உண்டாகும். அறவே புலால் உணவை நீக்கி விட்டால் மிகவும் சிறப்பானதாகும்.

பொதுவாக கடவுளை எந்த ஒரு நேரத்திலும் வணங்கலாம் என்றாலும் கூட, அதிகாலை 4 மணியிலிருந்து 5 மணிகுள்ளாக குளித்து முடித்து விட்டு மந்திர ஜெபத்தை மேற்கொள்வது சிறந்த பலன்களை அளிக்கும்.

எந்த திசையில் மந்திரம் ஜபிக்கலாம்

நமது வீட்டில் மந்திரங்களைக் கொண்டு இறைவனை வணங்கும் போது, காலை நேரத்தில் கிழக்கு திசையை பார்த்த படி இறைவனை மனதிற்குள் தியானித்து மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். மாலை அல்லது முன்னிரவு நேரத்தில் வழிபடுவதாக இருந்தால் மேற்கு திசையை நோக்கி நின்றவாறு மந்திரங்களை ஜெபித்து வணங்க வேண்டும்.

மந்திரங்களை நின்ரு கொண்டு ஜெபிப்பதை விட, ஒரு ஜமுக்காளம் அல்லது பாயில் அமர்ந்து கொண்டு மந்திர உச்சாடனம் செய்வது சிறப்பானது. தர்பை புல் ஆசனத்தில் அமர்ந்து மந்திர ஜெபம் செய்தால் நீங்கள் விரும்பும் அனைத்தையும் சித்திக்க செய்யும்.

மந்திரம் ஜெபிக்கும் இடம்

தினமும் மந்திரங்களை ஜெபிப்பவர்கள் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து மந்திரம் ஜெபித்தலை வாடிக்கையாக கொள்ள வேண்டும். அடிக்கடி மந்திரம் ஜெபம் செய்யும் இடத்தை மாற்றக்கூடாது. மேலும் மந்திர ஜெபங்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஜெபம் செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். காலை, மாலை, இரவு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் மந்திர உச்சாடனம் செய்வது கூடாது.

மந்திர உச்சாடனம் செய்யும் போது துளசி ருத்திராட்சம் மற்றும் சந்தன மணி மாலைகளில் ஏதேனும் ஒன்றை விரல்களில் உருட்டி 108 அல்லது 1008 எண்ணிக்கையை எண்ணியவாறே உச்சாடனம் செய்வது மந்திர சித்தியை ஏற்படுத்தும்.

நீங்கள் மந்திர ஜெபம் செய்யும் போது உங்களுக்கு நெருக்கமான உறவுகளாக இருந்தாலும் கூட, அவர்கள் பார்க்கும் வகையில் மந்திர உச்சாடனங்களை செய்வது கூடாது. முடிந்தால் நீங்கள் தியானம் செய்யும் அறையின் கதவை தாளிட்டு, உங்களை அந்த நேரத்தில் யாரும் தொந்தரவு செய்யாதவாறு மந்திர உச்சாடனங்கள் செய்து வருவது நல்ல பலன்களை அளிக்கும்.

No comments:

Post a Comment