Followers

Wednesday 26 September 2018

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயம்
நங்கநல்லூர்
சென்னை

மகேசன் மீது  மலர்கனை தொடுத்தார் மன்மதன் சிவன் கோபம் கொண்டு மன்மதனை நெற்றிக்கண் கொண்டு பார்க்க சாம்பல் குவியலாய் போனான் மன்மதன்.

கிடந்த சாம்பல் குவியல்களை பொம்மையாய் செய்து விளையாடினார் கணேசன்.

பிள்ளையாருக்கு விளையாட தோழனாய் இருக்கட்டுமே என நினைத்த பார்வதி பொம்மைக்கு உயிர் ஊட்ட நினைத்து சர்வேஸ்வரரை பார்க்க  சிவனாரின் கண்பட்டு பொம்மை உயிர்பெற்றது.

சாம்பலில் இருந்து வந்ததால் பண்டாசுரன் என பெயரிட்டார் ஈசன்.

இவ்வுலகத்தை ஆட்சி செய்யும் ஈசனை
நினைத்து கடும் தவம் செய்தால் வேண்டுவது அனைத்தும் கிடைக்கும் என சொன்னார் விநாயகர்.

கடும் தவம் புரிந்தார் பண்டாசுரன்.

சிவன் பண்டாசுரனை பாதாள லோகத்திற்கு மன்னன் ஆக்கினார்.

மூவுலகையும் ஆளப் பிறந்தவன்  என்று கர்வத்தீயை வளர்த்து கொண்ட பண்டாசுரன்

மூவுலகையும் வெல்ல உத்திரகுரு என்னுமிடத்தில் தேவர்களை எதிர்த்து
போர் துவங்கினான் பண்டாசுரன்.

போரை உக்கிரமாக்கி கயிலாயம் சென்று நண்பனென்றும் பாராமல் விநாயகரோடும் போர் புரிய ஆரம்பித்தான்.

வெகுண்டெழுந்த வேழமுகன் பண்டாசுரனின் படையை சிதறடித்தார்.

ராஜராஜேஸ்வரி என்று துதிக்கப்படும் திரிபுராதேவியை ஆராதிக்கும்படி ஆங்கிரஸர் கூற,
மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்றுகூடி ராஜராஜேஸ்வரியின் அருள் வேண்டி தந்திர முறைப்படி மகாயாகம் செய்தார்கள்.

தேவர்களின் யாகத்தின் பயனாய் கொழுந்து விட்டெறியும் யாகத்தீயிலிருந்து பேரொளியோடு அன்னை ராஜராஜேஸ்வரி தோன்றினாள்

பண்டாசுரன் கணேசனைத் தாக்குவதைக் கண்டு மகனுக்கு உதவ அன்னையும்  ஆவேசம் கொண்டவளாய் பண்டாசுரனை அழித்தாள் அன்னை.

நங்கநல்லூரில்
தேவர்களின் யாகத்தீயிலிருந்து எழுந்ததைப் போலவே இந்த கலியுகத்திலும் அன்னை யாகத்திலிருந்து தோன்றி ராஜராஜேஸ்வரியாக கோயில் கொண்டுள்ளாள்.

தன் பால வயதிலிருந்தே ஸ்ரீவித்யா உபாசகராக விளங்கிய ராஜகோபால சுவாமிகள் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு தனது வீட்டில் யாகசாலை அமைத்து மகாஷோடஸி மந்திரத்தால் செய்த ஹோமத்தின் நிறைவாக பூர்ணாஹுதி முடிந்தபோது, தகதகவென்று தீயிலிருந்து தோன்றினாள், அன்னை.

ராஜகோபால சுவாமிகள் அதை தாம்பாளத் தட்டில் ஏந்தியெடுத்து காஞ்சி மகா பெரியவரிடம் கொண்டு செல்ல  ‘‘இவள் சத்தியமாக ராஜராஜேஸ்வரியே! இத்துடன் உருவான மணிகள் சித்துகள்’’ என்று சொன்னார்.

தீயிலிருந்து தோன்றிய தேவிஅன்னையின் உத்தரவுப்படி ஆஸ்ரமம் அமைத்து ராஜராஜேஸ்வரிக்கு கோயில் கட்டினார்.

கோயில் அலுவலகத்தில் குங்குமமும் வழிபாட்டுக்குத் தேவையான கற்கண்டும் விற்பனைக்கு உள்ளன.

கோயிலுக்கு வெளியிலிருந்து பழம், தேங்காய், குங்குமம் என்று எந்த பொருளையும் வாங்கி வரக்கூடாது.

 அம்பாளின் அர்ச்சனைக்கு கோயிலிலேயே விற்கப்படும் கற்கண்டு மட்டுமே நைவேத்யம் செய்யப்படுகிறது

மகா கணபதி, துர்க்கை. தன்வந்திரி பகவானும் அருள்பாலிக்கின்றனர்.

தன்வந்திரி பகவான் தீர்த்தம் தீராத நோய் தீர்க்கும் மாமருந்து ஆகும்.

 கொடிமரம். அடுத்து பலிபீடம், சிம்மம். பக்கத்தில் தங்கமென தகதகவென மின்னுகின்றன பதினாறு படிகள். இங்கே ஒரு பெட்டி இருக்கிறது.

இதில் அன்றைய திதி மற்றும் திதி தேவியின் பெயரைச் சொல்லி, கோயிலில் பணம் செலுத்தி வாங்கி வந்த குங்குமப் பொட்டலத்தைப் போட வேண்டும்.

அன்று நள்ளிரவு ராஜகோபால சுவாமிகள் இந்த குங்குமத்தை பயன்படுத்தி அன்றே அர்ச்சனை செய்வார்.
அதனால் பக்தர்களின் தோஷங்கள் அனைத்தும் தீரும்

இக் கோவிலில்
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே அர்ச்சனையாகச் செய்யாமல், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே செய்யவேண்டும் .

பதினாறு படிகள் 
ஒவ்வொரு படியும் ஒரு திதியைக் குறிக்கிறது.

முதல் படியில் சுக்ல பிரதமையென்றும், கிருஷ்ண பஞ்சதசியென்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அந்த திதியின் தேவதையாக கொலுவிருக்கும் காமேஸ்வரி நித்யா தேவி  பற்றி அகத்திய மாமுனிவர் எழுதிய பாட்டை கல்லில் பொறித்து சுவரில் பதித்து வைத்திருக்கிறார்கள். இந்த நித்யா தேவியின் யந்திரங்களும் திருவுருவங்களும் படிக்கு இருபுறங்களிலும் சுவரில் எழுந்தருளச் செய்ய வைக்கப்பட்டிருக்கின்றன.

தினமும் இந்த யந்திரங்களுக்கும் திருவுருவங்களுக்கும் முறைப்படியான பூஜையும் நைவேத்யமும் உண்டு.

இதேபோல இரண்டாம் படியில் சுக்ல த்விதீயைக்கும், கிருஷ்ண சதுர்த்தசிக்கும், பகமாலிநீ, நித்யா கொலுவீற்றிருக்கிறாள்.

மூன்றாம் படியில் நித்யக்லின்னாநித்யா.

நான்காம் படியில் பேருண்டா,

ஐந்தில் வஹ்னிவாசினீ

ஆறில் மஹாவஜ்ரேஸ்வரி,

ஏழில் சிவதூதீ

எட்டில்  த்வரிதா,

ஒன்பதாம் படியில் குலசுந்தரி,

பத்தாம் படியில் நித்யா,

அடுத்ததாக

நீலபதாகா, விஜயா, சர்வமங்களா, ஜ்வாலாமாலினீ, நிறைவாக சுக்ல பஞ்சதசீயிலும்,

பதினைந்தாவது படியில்
கிருஷ்ண பிரதமையிலும் சித்ரா நித்யா  கொலுவிருக்கிறாள்.

பதினாறாவது படியில் அன்னை ராஜராஜேஸ்வரி வீற்றிருக்கிறாள்.

அன்னை மரகத பச்சை நிறத்தில் அழகாய் அமர்ந்திருக்கிறாள்.

அன்னை அருகில் இருக்கும் உற்சவ விக்ரகம்தான், தீயில் பிறந்த தெய்வம்.

இங்கே பல மகான்களால் பூஜிக்கப்பட்ட 43 சக்தி தேவதைகளின் யந்திரங்களும் யாகத்தில் தோன்றிய சித்தி மணிகளையும் சுரைக்காய் சுவாமியின் கைத்தடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

சந்நதியின் இரு புறங்களிலும் வாராஹியும் மாதங்கியும் சந்நதி கொண்டருள்கின்றனர்.

இவ் ஆலயத்தின் அருகே சத்யநாராயணர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் இருந்து 265km.
கும்பகோணத்தில் இருந்து தாம்பரம்
பல்லாவரம் மீனம்பாக்கம்
அடுத்து ராமாபுரம் மடிப்பாக்கம் பிரிவு சாலையில் நங்கநல்லூர் உள்ளது.

No comments:

Post a Comment