Followers

Monday, 17 September 2018

*#திருப்பம்_தரும்*

*#திருப்பதி_ஸ்ரீவெங்கடாசலபதி*




*******************************************************************************************************


*செல்வத்தை அருளும் திருப்பதி வெங்கடாசலபதி*

*பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர்.*

*அதோடு, பிறப்பு - இறப்பு வட்டத்திலிருந்து மனிதனை விடுவித்து, அவனுக்கு முக்தி அளிக்கக்கூடிய சக்தி படைத்த ஒரே கடவுள் அவர்.*

*புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சியாக விளங்கு கின்றன.*

*திருப்பதி வேங்கடா சலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு சில புள்ளிவிபரங்கள்.*

*32,000 ஹெக்டேரில் பரவிக் கிடக்கும் மரங்கள் மற்றும் மலைக்காடுகள். இவற்றில் ஏராளமான சந்தன மரங்களும் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மலர்களை உபயோகிக்கும் கோவிலும் இதுதான். ஒரு நாளைக்கு 380 டன் பூக்கள் இக்கோவிலில் உபயோகிக்கப்படுகின்றன.*

*திருமலை திருப்பதி தேவஸ்தானம், மேல்திருப்பதி மலையில் 100 ஹெக்டேர் பரப்பில் பூந்தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகிறது.*

 *திருமலை திருப்பதி தேவஸ்தானம் 14,000 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளது. அவர்கள் 48 வெவ்வேறு துறைகளில் வேலை செய்கின்றனர். நாட்டிலேயே மிகப் பெரிய கோவில் நிர்வாக அமைப்பு இதுதான். ஒரே கோவிலில் அதிகபட்ச எண்ணிக் கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் இக்கோவிலில்தான். வருடத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி 600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுத்தம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் 3000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரே நிர்வாகத்தின்கீழ் வழங்கப்படும் தங்கும் விடுதிகளை அமைத்துள்ளதில் இது முதலிடத்தை வகிக்கிறது. இங்கு 7200 அறைகள், குடில்கள் மற்றும் சத்திரங்கள் இருக்கின்றன. இதில் நாள் ஒன்றுக்கு 60,000 பேர் தங்கலாம்.*

*தினமும்சுமார் 60,000 யாத்திரீகர்களுக்குத் தினசரி இலவச உணவு வழங்கப்படுகிறது.லட்டு தயாரிப்புக்காக மற்றும் ஆலயப் பணிகளுக்காக மிக அதிக எண்ணிக்கையில் நெய்யைப் பயன்படுத்தும் கோயில் இது. வருடத்துக்கு 1,800 டன்கள். மிக அதிக அளவில் மின்சக்தியைப் பயன்படுத்தும் கோவிலும் இதுதான். ஒரு மாதத்துக்கு 2 கோடி யூனிட்டுகள். நாட்டிலேயே பெரிய அளவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி உணவும் பிரசாதமும் தயாரிக்கும் கோவில் இது. ஒரு மணி நேரத்திற்கு 2.2டன் நீராவி இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது.*

 *30 கல்வி நிறுவனங்கள், 3 பல்கலைக்கழகங்கள், மற்றும் 10 மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை இக்கோவில் நிர்வகித்து வருகிறது.*

*கணினித் தொழில்நுட்பத்தைப் பரந்த அளவில் பயன் படுத்தும் முதல் கோயில் இதுதான். இக்கோவிலுக்கு என்று தனியாக ஒரு 'கால் சென்டரே’ இருக்கிறது. தங்கும் வசதி, தரிசன டிக்கெட், உண்டியல், போக்குவரத்து ஆகியவற்றை இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். சம்ஸ்கிருதமொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக இங்கு 1884ல் ஒரு கல்லூரி நிறுவப்பட்டது.*

*நாட்டின் முதல் இசைக் கல்லூரி இங்கு 1959ல் திறக்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக, பாரம்பரியச் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலையைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளி இங்கு துவக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரம்பரியச் சிற்பக் கட்டிடக்கலைப் பள்ளி. நாட்டிலேயே முதன்முறையாக, இலவசமாகச் செயற்கைக் கை, கால்கள் பொருத்தும் மையம் 1981ல் இங்கு துவக்கப்பட்டது.*

*#திருமலை_திருப்பதி*

 *ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் இருக்கும் எழு மலைகளை உடைய திருமலையில் அமைந்திருக்கிறது வெங்கடாசலபதி கோயில்.*

*இந்த எழுமலைகளும் வைகுண்டத்தில் விஷ்ணு அமர்ந்திருக்கும் ஆதிசேஷன் என்ற நாகத்தின் ஏழு தலைகளை குறிக்கிறது. அதேபோல இந்த ஏழு மலைகளில் வெங்கடாத்திரி மலையில் திருப்பதி கோயில் அமைந்திருக்கிறது.*

*திருப்பதியில் இருக்கும் வெங்கடாசலபதி கலியுகத்தின் கடவுளாக பார்க்கப்படுகிறார். ஒரு பழங்கதையின் படி விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்து கலி யுகத்தை அளிக்கும் வரை இந்த கோயில் இங்கு இருக்குமாம்.*

*பல்லவ மன்னர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் என திருமலையை பல மன்னர்கள் 9ஆம் நூற்றாண்டு தொட்டு வழிபட்டு வருகின்றனர். புகழ் பெற்ற விஜய நகர மன்னரான கிருஷ்ண தேவ ராயர் இக்கோயிலுக்கு பெரும் பொன்னும், பொருளும் அளித்திருக்கிறார். அவர் அளித்த கொடையின் பயனாகவே திருப்பதி கோயிலின் விமானத்தின் உட்பகுதி தங்கத்தால் வேய்யப்பட்டிருக்கிறது.*

*#ஸ்ரீவெங்கடாசலபதி*

*திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணி வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.*

*முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கி விட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்த நேரத்தில் ``கவுசல்யா சுப்ரஜா ராம...'' என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.*

*சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாச மூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலில் இருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமர வைப்பர்.*

*சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணையும் படைத்து ``நவநீத ஹாரத்தி'' எனப்படும் தீபாராதனை செய்யப்படும். ``விஸ்வரூப தரிசனம்'' என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ. 120. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.*

*திருப்பதி மலையில் உள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்து சேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். (பிரம்மோற்சவ காலத்தில் மட்டும் யானை மீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).*

*ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணி (ஸ்பூன் போனறது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள மூலவருக்கு பதிலாக அருகில் உள்ள போகசீனிவாத மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.*

*அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்து நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.*

*இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும். காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி பாலாஜியை காண கண் கோடி வேண்டும். பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. நம் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சாத்தனார் மணிமேகலை போன்ற இயேசு பிறப்பதற்கு முந்தைய கால இலக்கியங்களிலேயே திருப்பதி பற்றிய குறிப்புகள் உள்ளன.*

*அவற்றில் திருப்பதியின் அப்போதைய பெயரான `திருவேங்கடம்' என குறிப்பிடப்பட்டிருக்கும். இன்று எத்தனையோ திருக்கோயில்கள் இருக்கும் போது திருப்பதியில் மட்டும் ஏன் பக்தர்கள் கூட்டம் இப்படி அலைமோதுகிறது? காரணம் இல்லாமல் இல்லை. இந்த சேஷத்திரத்தில் மகாவிஷ்ணு நடத்திக் காட்டிய மகிமைகள் பல. ஒருநாள் இருநாளில் அல்ல. பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டு நடத்திய `நாடகம்' தான் திருப்பதியில் வெங்கடேஸ்வர பெருமாள் குடிக்கொள்ள காரணமாயிற்று.*

*#உலகிலேயே_அதிக_பக்தர்கள்_வரும்_கோயில்*

*உலகிலேயே அதிக பக்தர்கள் தரிசனத்திற்காக வரும் கோயில் என்ற பெருமையை திருப்பதி பெற்றிருக்கிறது. தினமும் இங்கு குறைந்தது 50,000 முதல் ஒரு லட்சம் பக்த்தர்கள் வரை தரிசனம் செய்ய வருகின்றனர். பிரம்மோர்த்தசம் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் ஐந்து லட்சம் பக்த்தர்கள் வரை இங்கு வருகின்றனர்.*

*#உண்டியலில்_பெரும்_கொடை*

*இங்கு வரும் பக்த்தர்கள் அனைவரும் பெரும் கொடையளிப்பது வாடிக்கை. அப்படி செய்ய காரணம் என்னவென்றால் வெங்கடாசலபதி கடவுள் தன்னுடைய திருமணத்திற்காக செல்வத்தின் அதிபதியான குபேரனிடம் 1,14,00,000 தங்க காசுகளை கடனாக பெற்றதாகவும் அதனை திருப்பி கொடுக்க வெங்கடாசலபதிக்கு உதவி செய்யும் பொருட்டே உண்டியலில் பெரும் கொடையளிக்கும் வழக்கம் வந்ததாகவும் கூறப்படுகிறது.*

*#ஸ்தல_புராணம்*

*கங்கை நதிக்கரையில் காஸ்யப முனிவரின் தலைமையில் முனிவர்கள் சிலர் யாகம் செய்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நாரதர் இந்த யாகம் யாருடைய நன்மைக்காக நடத்தப்படுகிறது என கேட்டார். ஆனால் அங்கிருந்த முனிவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. அதனால் பிருகு முனிவரிடம் உதவி கேட்டு சென்றனர்.*

*பிருகு முனிவரின் உள்ளங்காலில் ஒரு கண் இருந்ததால் அவருக்கு மற்ற முனிவர்களை விட ஞானம் சற்று அதிகம் இருந்தது. அவர் இதற்கு ஒரு தீர்வு காண நினைத்து பிரம்மனை தரிசிக்க சத்யலோகத்திற்கு சென்றார். அங்கே பிரம்மதேவர் சரஸ்வதி தேவியின் துணையுடன் தனது நான்கு முகங்களாலும் ஸ்ரீமன் நாராயணைப் போற்றி நான்கு வேதங்கள் ஓதிக் கொண்டிருந்தார்.*

*அவர் பிருகு முனிவர் வந்ததை கவனிக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முனிவர் இவர் வழிபாட்டிற்கு உகந்தவர் இல்லை என முடிவு செய்து சிவப்பெருமானை தரிசிக்க கைலாசம் சென்றார். ஆனால் சிவன் பார்வதிதேவியுடன் ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததால் அவரும் முனிவரை கண்டுக் கொள்ளவில்லை.*

*முனிவரைக் கண்ட பார்வதிதேவி சிவனிடம் கூற அவரோ தனது முக்கிய ஆலோசனையின் போது முனிவர் குறுக்கிட்டதைக் விரும்பாததால் அவரை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். அதனால் ஆத்திரமுற்ற பிருகு முனிவர் சிவப்பெருமானுக்கு சாபமிட்டு அங்கிருந்து நகர்ந்தார். பின்னர் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்தார்.*

*ஆனால் ஆதிசேஷன் குடை விரிக்க, மகாலட்சுமி காலடியில் அமர்ந்து பணிவிடை செய்ய ஆனந்த சயனத்தில் இருந்ததால் அவரும் முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் ஆத்திரத்தில் மதியிழந்த பிருகு முனிவர் மகாலட்சுமியின் உறைவிடமான மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எட்டி உதைத்தார்.*

*முனிவரின் கோபத்தை தணிக்க நினைத்த பெருமாள் எட்டி உதைத்த காலை சட்டென பிடித்து பாதங்களை மென்மையாக அழுத்திவிட்டார். அந்த இதத்தில் முனிவரின் கோபம் தணிந்தது. அதே சமயம் மகாவிஷ்ணு பிருகு முனிவரின் காலில் இருந்த கண்ணை பறித்துவிட்டார். பாதத்தில் இருந்த கண் தான் அவருக்கு இத்தனை அகங்காரத்தை தந்தது.*

*தனது தவற்றை உணர்ந்த முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்புக் கோரிவிட்டு மும்மூர்த்திகளில் சிறந்தவர் இவரே என முடிவு செய்தார். இருப்பினும், தனது மணவாளன் தன்னை எட்டி உதைத்த முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்டதை விரும்பாத ஸ்ரீதேவி அவரிடம் கோபித்துக் கொண்டு சென்று இன்று மகாராஷ்டிராவில் உள்ள கோலாபூர் எனும் இடத்திற்கு சென்றுவிட்டார்.*

*அவரைத் தேடிப் பிடித்து வருவதற்காக பூலோகம் வந்த மகாவிஷ்ணு வேங்கடமலையில் உள்ள புஷ்கரணியின் தெற்கு கரையில் ஒரு புளிய மரத்தடியில் எறும்பு புற்றின் மேல் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார். இதில் மனமுருகிய பிரம்மரும், ஈசனும் பெருமாளுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக் குட்டியின் வடிவெடுத்து அவர்களும் பூலோகம் வந்தனர்.*

*இத்தனை சங்கதிகளையும் சூர்ய பகவான் மூலம் அறிந்த மகாலட்சுமி அவரது அறிவுரைப்படி மாடு மேய்க்கும் பெண்ணாக உருக்கொண்டு வந்து பசுவையும் கன்றையும் சோழ மன்னனுக்கு விற்றார். அவற்றை வாங்கிய சோழ மன்னனின் பணியாட்கள் அவற்றை வேங்கடமலைக்கு மேய அனுப்புவார்கள்.*

*அங்கே ஒரு எறும்பு புற்றில் மகாவிஷ்ணுவை கண்ட பசு தாமாகவே அங்கே பால்சுரக்க ஆரம்பித்தது. அதை ஏற்று மகாவிஷ்ணுவும் பசியாறி வந்தார். இதற்கிடையே அரண்மனையில் பசுக்கள் பால் தருவது இல்லை என்பதை கவனித்த மன்னனின் வேலையாள் பசுவை பின் தொடர்ந்து வந்தான்.*

*அது ஒரு இடத்தில் தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த அவன் பசுவின் மீது தன் கோடாலியை வீசியெறிய அது பசு மீது பட்டுவிடக் கூடாது என மகாவிஷ்ணு குறுக்கேத் தோன்றி அடியை தான் வாங்கினார். தான் வீசிய ஆயுதம் மகாவிஷ்ணுவை தாக்கி அதனால் ரத்தம் வருவதைக் கண்ட வேலையாள் அதிர்ச்சியில் உயிரிழந்தான். ரத்தக் கறையுடன் பசு மாடு வருவதைக் கண்ட சோழ ராஜா என்ன நடந்தது என அறிய அதை பின் தொடர்ந்தான்.*

*அங்கே எறும்பு புற்று ஒன்றின் அருகே தனது வேலையாள் இறந்து கிடப்பதைக் கண்டு எதுமறியாமல் விழித்தான். அப்பொழுது அவனுக்கு காட்சியளித்த  விஷ்ணு அவனது வேலைக்காரன் செய்த குற்றத்திற்கு மன்னனுக்கு சாபமிட்டார். ஆனால் மன்னன் மீது தவறேதுமில்லாக் காரணத்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் ஆகாய ராஜாவாக பிறப்பானென்றும் தனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடக்கும் சமயம் அவனது சாபம் தீரும் எனவும் ஆசி வழங்கினார்.*

*#ஸ்ரீவராகசுவாமி_ஆலயம்*

*இந்த சம்பவங்கள் நடந்த காலக்கட்டத்தில் திருப்பதி மலை வராகசுவாமியின் இருப்பிடமாக ஆதி வராக ஷேத்திரமாக இருந்தது. சோழ ராஜாவிற்கு ஆசி வழங்கி அனுப்பிய மகாவிஷ்ணு ஸ்ரீனிவாசன் என்ற பெயருடன் தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டி வராக சுவாமியை சந்தித்தார்.*

*அவரும் மகிழ்ந்து இடமளித்தார். அதற்கு நன்றிக் கூறும் விதமாகத் தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புஷ்கரணியில் குளித்து வராக சுவாமியை தரிசித்து பூஜை, நைவேத்தியங்களை முதலில் அவருக்கு செய்துவிட்டு பிறகு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது.*

*#பத்மாவதி_தாயார்*

*இது அனைத்தும் ஒரு ஜென்மத்து கதை. இக்கதை சோழ மன்னனின் அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அடுத்த பிறவியில் அச்சோழ மன்னன் ஆகாச ராஜாவாக பிறந்தான். பிறந்து வளர்ந்து அனைத்து வளங்களும் பெற்று திகழ்ந்த அவனுக்கு பிள்ளைப் பேறு இல்லை அதனால் யாகம் செய்ய எண்ணிய அவன் நிலத்தை உழுதப் பொழுது அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது.*

*அதை அருகில் சென்று பார்த்தப்போது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிந்தது. அப்போது அதை எடுத்து வளர்த்தால் சகல சவுபாக்கியம் உண்டாகும் என அசரீரிக் கேட்டது. தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி எனப் பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தான். இதனிடையே சீனிவாசன் என்ற பெயரோடு வாழ்ந்து வந்த மகாவிஷ்ணு பத்மாவதியைக் கண்டார்.*

*உடனே பெற்ற தாய் போல தன்னை கவனித்து வந்த வகுலாதேவியிடம்  சென்று பூர்வஜென்ம கதைகளைக் கூறி பத்மாவதியை தான் மணக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார். அதே சமயம் ஆகாச ராஜாவும் அவனது மனைவியும் கூட தங்களது மகள் வேங்கட மலையில் வசித்து வரும் சீனிவாசனை மணக்க விரும்புவதை அறிகிறார்கள்.*

*செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் இத்திருமணச் செலவுகளுக்காக சீனிவாசனுக்கு கடன் தருகிறார். இரு வீட்டார் சம்மதத்துடன் தேவர்களும், சிவன், பிரம்மா புடைசூழ சீனிவாசன், பத்மாவதி திருமணம் நடைபெறுகிறது. இக்கதையும், இத்திருமணமும் நடைபெற்ற இடம் தான் திருவேங்கடமலை (திருப்பதி திருமலை).*

*அதனால் இன்றும் திருமலையில் தினமும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி இப்போதும் பிரம்மோற்சவம் நடக்கும் 9 நாட்களும், மஞ்சள், குங்குமம் மற்றும் சேலை திருப்பதியில் இருந்து திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாருக்கு எடுத்து செல்லப்படுகிறது.*

*#கோவில்_அமைப்பு*

*திருப்பதி திருமலையின் மலை கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் இருக்கிறது திருமலை ஏழுமலைகளைக் கொண்டது. ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் வீற்றிருப்பது ஏழாவது மலையான வெங்கடாத்ரியின் உச்சியில், மற்ற மலைகளின் பெயர்கள், சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, ஆகும். ஏழாவது மலை தான் வெங்கடாத்திரி. இந்த மலைகளின் மொத்த பரப்பளவு 10.33 சதுர மைல்கள்.*

*#திருப்பதியில்_மொட்டையடிப்பது_ஏன்*

*மகாவிஷ்ணு மாடு மேய்பபவனால் தாக்கப்பட்ட போது அவரது தலையில் இருந்த கேசம் உதிர்ந்து வழுக்கை விழுந்தது. பின்னர் அங்கே முடி வளரவேயில்லை. அதை ஒருமுறை கவனித்த கர்ந்தர்வ இளவசரசி நீலா தேவி இத்தனை அழகான முகத்தில் வழுக்கை ஒரு குறையாக இருக்கிறதே' என வருந்தி தனது கூந்தலை வெட்டி விஷ்ணுவின் வழுக்கையில் ஒட்டி முடி வளர செய்தாள். கண் விழித்து பார்த்த மகா விஷ்ணு அவளது பக்தியையும் தியாகத்தையும் கண்டு மெச்சி இனி தன்னை காண வரும் பக்தர்கள் தரும் முடி காணிக்கைகள் அனைத்து நீலா தேவியையே சேரும் என வரமளித்தார். அவளது பெயரில் இருக்கும் மலைதான் நீலாத்திரி.*

*#சேவைகள்_மற்றும்_பூஜைகள்*

*நாம் ஒரு பேச்சு வழக்கிற்கு நித்ய கல்யாணம் பூரணத் தோரணம் என்போம். அது எங்கு சரியாகப் பொருந்துகிறதோ இல்லையோ திருப்பதிக்கு மிகச் சரியாகப் பொருந்தும். சினிவாசப் பெருமாளுக்கும்,பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த ஸ்தலம் என்பதால் இங்கு தினமும் கல்யாண உற்சவம் நடைப்பெறுகிறது. மேலும் டோலோற்சவம், வசந்தோற்சவம்,அர்ச்சித பிரமோற்சவம் என பல உற்சவங்கள் தினசரி நடைபெறுகிறது.*

*சேவைகளில் சுப்பாத தரிசனம் அதிகாலை 2 மணிக்கு தினந்தோறும் நடைபெறுகிறது. தோமால சேவை மற்றும் அர்ச்சனைகள் செவ்வாய், புதன், வியாழன்களில் மட்டும் நடக்கிறது. உற்சவங்கள்:திருப்பதியில் தினமுமே உற்சவம்தான் என்றாலும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், தமிழில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிக முக்கியமானது.*


*9-நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம் முதன் முதலில் படைப்பு கடவுள் பிரம்மாவால் கொண்டாடப்பட்டது. தான் படைக்கும் உயிர்களை வெங்கடேசப்பெருமாள் சிறப்பாகப்பாதுகாப்பதற்கு நன்றி கூறும் விதமாக பிரம்மர் உற்சவம் நடத்தினார். அது தான் இன்று அவரது பெயராலேயே பிரமோற்சவம் என அழைக்கப்படுகிறது.*

*#திருப்பதி_லட்டு*

*திருப்பதி லட்டை பிடிக்காதவர்கள் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது, இந்த விசேஷமான சுவை வேறெங்கும் நமக்கு கிடைக்காததாகும்.*

*#சுவாமியை_தரிசிக்க_மூன்று_வழிகள்*

*சுவாமியை தரிசனம் செய்வதற்கு சர்வ தரிசனம், சுதர்ஸன தரிசனம், சீக்கிர தரிசனம் (எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லா மல் 300 ரூபாய் டிக்கெட் எடுத்துச் சென்று தரிசனம் செய்வது) என மூன்று வழிமுறைகள் உள்ளன.*

*சர்வ தரிசனத்தில், சாதாரண நாட்களில் 8 மணிநேரமும், சுதர்ஸன தரிசனத்தில் மூன்று மணிநேரமும் ஆகிறது. இதற்கென முறையான திட்டமிடல் இல்லாமல், லீவு கிடைத்துவிட்டது என்பதற்காகப் புறப்பட்டுச் சென்று, வெங்கடேசப் பெருமாளைப் பார்க்கப் போய் நெரிசலில் சிக்கி, கால் கடுக்க காத்துக் கிடந்து அவஸ்தைப்பட்டு, சிலர் சுவாமியைப் பார்க்காமலே திரும்பி வந்த கசப்பு உணர்வுதான் காரணம். அப்படிப்பட்ட நிலை பக்தர்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தவிர்க்க, தரிசனத்தை எளிதாக்க இதோ சில குறிப்புக்கள்*

 *உங்கள் திருமலை யாத்திரையை விடுமுறை அல்லாத நாட்களில் தொடருங்கள்.*

 *திருமலைக்கு செல்லும் முன்பே இரயில் மற்றும் பேருந்து டிக்கட்டுகள், தங்கும்*

 *வசதிகள் மற்றும் சேவை டிக்கட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.*

*திருப்பதிக்கு வந்து சேர்ந்த உடனே சுதர்ஸன் டோக்கன்களை பெறுங்கள்.*

*திருமலை அதிகாரி பக்தர்களுக்காக தெரிவித்த தகவல்*

*திருவேங்கடமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் பயணத்தை எளிதாக்குவற்கான குறிப்புகளைத் தந்தார். அவற்றை அப்படியே தொகுத்திருக்கிறோம்..*

*தங்கும் வசதிக்காக உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சி.ஆர்.ஓ. அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மட்டும் க்யூவில் காத்திருக்கலாம். மற்றவர்கள் சி.ஆர்.ஓ. அலுவலத்திற்கு பக்கத்தில் உள்ள யாத்திரிகர்கள் வசதிக்கூடத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம். அங்கு அனைத்து வசதிகளும் உள்ளன.*

*தகவல் அறிவதற்கு, இரயில் நிலையம், விமான நிலையம், ஆர்.டி.சி. பேருந்து நிலையம், அலிபிரி பேருந்து நிலையம், சத்திரங்கள், அலிபிரி டோல்கேட், மற்றும் ரேணிகுண்ட்டா இரயில் நிலையத்தில் தகவல் மையங்களை அணுகுங்கள்.*

*சுற்றுலா ஸ்தலமாக இருக்குற இடங்கள் யாத்திரை ஸ்தலங்களாக இருக்காது. யாத்திரை ஸ்தலங்களாக இருக்குற இடங்கள் சுற்றுலாதலமா இருக்காது.  திருமலை திருப்பதி தேவஸ்தானம் காலத்துக்கேற்ப செஞ்சுக்கிட்டு வர்ற சீர்திருத்தங்கள் மற்றும் வசதி வாய்ப்புகளுக்குப் பிறகு பக்தர்களுடைய வருகை ரொம்பவே அதிகரிச்சிடுச்சுக்கிட்டு வருது.*

*வார நாள்ல 50 ஆயிரம் பேர் திருமலைக்கு சாமி கும்பிட வருவாங்க. சனி ஞாயிறு கவர்மெண்ட் ஹாலிடேன்னா, 1 லட்சம் பேருக்கு  மேல வர்றாங்க. ஒரு சாதாரண வி.ஐ.பியைப் பார்க்கவே நாம அப்பாயின்மென்ட் வாங்கிக்கிட்டு, புறப்படும் போது போன்ல உறுதிபடுத்திக்கிட்டு கிளம்புறோம். வெங்கடாஜலப்தியைப் பாக்கணும்னா அது எவ்வளவு பெரிய விஷயம். அதுக்கு சின்னதா ஒரு திட்டமிடக்கூடாதா?'' என்றவர்,*

*திருமலை யாத்திரையை பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்கலில் இல்லாமல், வார நாட்களில் பயணம் இருப்பது போல் திட்டமிட்டுக் கொண்டால், எளிதாக சுவாமி தரிசனம் செய்து, பயணத்தை இனிதானதாக ஆக்கலாம்.*

*திருப்பதிக்குச் செல்ல ரெயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள், திருமலையில் தங்கும் அறை வசதிகள் மற்றும் தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்வது நல்லது. ஆன்லைனில் 90 நாட்களுக்கு முன்பாகவும், தேவஸ்தான அலுவலகங்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.*

*தமிழகத்தில் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.திருமலையில் தங்கும் வசதியைப் பெற கணவன் மனைவி இருவரும் செல்ல வேண்டும் தனிநபராக செல்பவருக்கு அறைகள் தரப்படுவதில்லை.*

*சுதர்ஸன டோக்கன்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருக்கும்  நேரத்தை வெகுவாக குறைக்க உதவும்.சுதர்ஸன் டோக்கன் வசதியைப் பெற திருமலைக்குச் செல்ல திட்டமுட்டுள்ள அனைவரும் ஒன்றாகச் சென்று தரிசன நாள், நேரம் ஆகியவற்றை கைரேகை மற்றும் புகைப்படப் பதிவைச் செய்தாக வேண்டும்.*

*திருமலையில் அறைவசதி கிடைக்காவிட்டாலும்  நாம் கொண்டு செல்லும் பொருட்களை வக்க ஆயிரக்கணக்கான லாக்கர் வசதிகள் உள்ளன. அதில் தங்கள் பொருட்களை வைத்து விட்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.*

*திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக ரேணிகுண்டா, திருப்பதி பஸ்-ஸ்டாண்டு எதிர்புறம் சீனிவாசன் காம்ப்ளக்ஸ், திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணுநிவாஸ்., அலிப்பிரி டோல்கேட் ஆகிய இடங்களில் அதிகாலை 5 மணிக்கு  தொடங்கி, சுதர்சன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் 5 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதால், ஃபஸ்ட் கம் சர்வீஸ் அடிப்படையில் வழங்கப்படும் என்பதால் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது நல்லது.*

*திருமலை திருப்பதி தேவஸ்தானம், மலைப்பாதையில் செல்லும்போது பழுதடையும் வாகனங்களை சரிபார்ப்பதற்கு ரோந்து பழுதுபார்ப்பு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளது.*

*திருமலைக்கு நடந்து செல்பவர்களுக்கு வசதியாக திருப்பதி ரெயில் நிலையத்திலிருந்து அலிப்பிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.நடந்துச் செல்லும் யாத்திரிகர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி அடிவாரத்தில் உள்ள கௌண்டரில் செலுத்திவிட்டு மலை ஏறிச்சென்று திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக  திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.*

*திருமலை புனிதம் மற்றும் பரிசுத்தத்தை பாதுகாத்திட தேவஸ்தானத்துடன் ஒத்துழையுங்கள்.*

*கீழ்த்திருப்பதி வந்தவுடன் அங்குள்ள லாக்கர்களில் பொருட்களை வைத்து விட்டு, அலர்மேலு மங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்து விட்டு, மேல் திருப்பதியில், சுவாமி வெங்கடாசலபதியை வழிபடுவதற்கு முன், சுவாமி புஷ்கரிணி தீர்த்தத்தில் புனித நீராடி வராகப் பெருமாளைத் தரிசனம் செய்ய வேண்டும். கோவிலின் விதிமுறைகளைப் பின்பற்றி, கடவுளைத் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டும்..*

*கோவில் வளாகத்தில் எச்சில் துப்பவோ அல்லது எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவோ கூடாது. கோவிலின் விதிமுறைகளுக்கும் வழக்கங்களுக்கும் எதிரான எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது. கோவில் வளாகங்களில் புகைபிடிக்கக் கூடாது. கோவில் வளாகங்களில் காலணிகள் அணியக்கூடாது.*

*தங்களது அறையிலோ, வாகனங்களிலோ காலனிகளை விட்டுவிட்டு வெறுங்காலுடன் செல்ல வேண்டும். அல்லது அருகாமையிலிருக்கும் காலனிகள் பாதுகாப்பு மையத்தில் விட்டுச் செல்லலாம். சுவாமி தரிசனம் செய்யச் செல்லும்போது உங்களது செல்போன்களை அறையிலேயே விட்டுச் செல்வது நல்லது. இல்லாவிட்டால், தரிசனம் முடித்துவிட்டு லட்டு கௌண்டருக்குச் சென்று முடித்துவிட்டு, பிறகு செல்போன் பாதுகாப்பு மையத்துக்குசெல்ல வேண்டியிருக்கும்.*

*திருமலை யாத்திரையின் போது அளவுக்கதிகமான நகைகளையோ, பணத்தையோ உடன் எடுத்துச்செல்லக் கூடாது. முன்பின் அறியாதவர்களிடம் தங்குவதற்கு அறைகள் கேட்கக் கூடாஅது.. முன்பின் அறியாதவர்களை உங்கள் அறையிலும் தங்க வைக்கக்கூடாது என்று தெரிவித்தார்.*

*மேலும் கோவில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்ரைத் தொடர்பு கொள்வது அல்லது இனையதளத்தில் அறியலாம்.*

*திருப்பதி மலைவாழும் வெங்கடேசா!*
*திருமகள் மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா !*
*அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்*
*அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்*
*என் மனம் உருகிடவே பாடி வந்தேன்*
*உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்*
*நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா*
*மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா*
*உரைத்தது கீதை என்ற தத்துவமே*
*அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே*

*திருப்பதி மலைவாழும்* *வெங்கடேசா -திருமகள்*
*மனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா எம் இல்லம் வருக வருகவே !!*
*அருள் தருக தருகவே !!*



*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!* 

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!* 

                        *#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_நட்பே*

 *#வாழ்க_வளமுடன்*

Sunday, 9 September 2018

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது ஏன் தெரியுமா?

ஒரு சமயம் பகவான் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார்.

பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளைக் கண்டு நகைத்தன.

“பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே;
எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும்,

“எங்களைப் போல் நீங்கள் அரியாசனத்தில் அமரமுடியாது.” என்றும் எள்ளி நகையாடின.

(ஆபரணங்கள் பேசுமா என்று நினைக்கவேண்டாம். பகவானின் ஆயுதங்கள், மற்றும் அணிகலன்கள் ஒவ்வொன்றுக்கும் ஜீவன் உண்டு.

திருமாலின் கதாயுதமே பன்னிரு ஆழ்வார்களில் பூதத்தாழ்வாராக பிறந்தது.

சங்கு எனப்படும் பாஞ்ச சன்னியமே பொய்கையாழ்வாராக அவதரித்தது.

திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சமே பேயாழ்வாராக அவதரித்தது.

சக்கராயுதமே திருமழிசை ஆழ்வாராக அவதரித்தது.

பெரியாழ்வார் கருடனின் அம்சமாக அவதரித்தார்.

பரந்தாமனின் வில்லின் அம்சமாக பிறந்தவர் திருமங்கையாழ்வார்.

திருமாலின் ஸ்ரீவத்சத்தின் (மரு) அம்சமாக பிறந்தவர் திருப்பாணாழ்வார்.

கௌஸ்துவ மணியின் அம்சமாக பிறந்தவரே குலசேகராழ்வார்.)

கதைக்கு வருவோம்….

பகவான் திரும்பியதும் பாதரக்ஷைகள் அவரிடம் முறையிட்டன.

அவர், “கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும்போது உங்கள் துயர் தீர்ப்பேன்.

உங்களைக் கண்டு நகைத்தவர்களே உங்களுக்குச் சேவை செய்ய, தலைமேல் சுமக்கச் செய்வேன்!” என்றார் கருணையுடன்.

சொன்னதை போல, இராமனாக பரம்பொருள் திரு அவதாரம் செய்த பின்பு, பரதன் முடி சூட வேண்டி கைகேயி செய்த சதியால் வனவாசம் சென்றுவிட, விஷயம் தெரிந்த பரதன், இராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடுகிறான்.

தன் தாய் செய்த தவறுக்கு வருந்தும் பரதன் இராமரை காட்டுக்கு போய் சந்தித்து மன்னிப்பு கோருகிறான்.

மீண்டும் அயோத்தி திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, இராமர் மறுத்துவிடுகிறார்.

“உங்கள் பாதுகைகளையாவது கொடுங்கள் அண்ணா. அதை சிம்மாசனத்தில் நிறுத்தி, அதன் பிரதிநிதியாக நான் ஆட்சி புரிகிறேன்.” என்று வேண்ட, மனமிறங்கிய அண்ணல், அதற்கு ஒப்புக்கொண்டார்.

ஸ்ரீ இராமரின் பாதரக்ஷைகளை சங்கு-சக்கரங்களின் அம்சமாகப் பிறந்த பரதனும் சத்ருக்னனும் தங்கள் தலைமேல் தாங்கி எடுத்துச் சென்று அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தனர்.

இராம ராஜ்ஜியத்தைவிட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக்கொள்ளுங்கள்.

இதன் நினைவாகவே இன்றும் பெருமாள் கோவில்களில் கிரீடத்தின் மேல் பாதுகைகள் உள்ள ‘சடாரி’

ஸ்ரீவைஷ்ணவர்களின் தோள்களில் முத்திரையாகப் பதித்திருக்கும் சங்கு-சக்கரங்களுக்கும், தலை மீதும் சாத்தப்படுகிறது.

மேலும் பகவானின் கால் பட்டல்ல, அவன் பாதுகை பட்டதாலேயே கல்லாக இருந்த அகலிகையும் சாபவிமோசனம் பெற்று எழுந்தாள்.

இறைவனின் பாதுகைகள் அத்தனை மகத்துவம் மிக்கது. கோவிலுக்கு சென்றால் பகவானின் திருவடிகளையே முதலில் பார்க்கவேண்டும்.

காலம் எப்போது யாரை எந்த உயரத்தில் வைக்கும் என்று கணிக்க முடியாது. யாரையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இன்று நாம் அலட்சியமாக கருதுபவர்களை நாளை நாம் அண்ணாந்து பார்க்கும் நிலை வரலாம்.

அதை உணர்ந்து எப்போதும் அடக்கத்துடன் வாழ்ந்து, இந்த வாழ்க்கை அவன் போட்ட பிச்சை என்கிற எண்ணத்துடன் வாழ்ந்து வரவேண்டும்.
வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்?

வீட்டில் பூஜை செய்யும் முறைகள் ..!!


🙏 நம் வீட்டு பூஜையறைகளில் சாமி படங்களை வைத்து வணங்குகிறோம். ஆனால், பூஜையறைகளில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

🙏 நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறு தொழுதலை விட அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

🙏 யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.

🙏 பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக்கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

🙏 விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

🙏 ஈர உடையுடனும், தலைமுடியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துண்டு போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக்கூடாது.

🙏 சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை.

🙏 பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும், இரவு தூங்கும் முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

🙏 கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான். தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

🙏 தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

🙏 விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

🙏 விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெயிலுள்ள தூசியை எடுப்பதோ, திரியை தூண்டுவதோ கூடாது.

🙏 எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக்கூடாது.

🙏 பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக்கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

🙏 வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.

🙏 வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும்.
படித்து பாருங்கள் கரைந்து போவீர்கள்

கடவுளைக் காணத்
தேவைப்படும் கண்ணாடிகள்!!!
ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான்.
ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்'' என்றான்.
தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.''
ஓ! கடவுள் என்று ஒன்றுஉண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''
தம்பீ, காண முயலுகின்றேன்.''
கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?''
இல்லை.'' "கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?'' "இல்லை.''
ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை;
இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன்.
உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?''
அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?'' "தேன் பாட்டில்.'' "தேன் இனிக்குமா, கசக்குமா?'
என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.''
தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.'' மாணவன் திகைத்தான்.
தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.
ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.''
பெரியவர் புன்முறுவல் பூத்தார். "அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.
"தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''
என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.
மாணவன் வாய் சிறிது அடங்கியது. "பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.''
தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?'' "இல்லை.''
என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது?
பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய்.
பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள்.
அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.'' மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.
என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?'' "
உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?'' "என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''
"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''
ஆம். நன்றாகத் தெரிகின்றது.'' "அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'' "என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?'' "அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?''
ஆம்! தெரிகின்றன.'' "முழுவதும் தெரிகின்றதா?'' அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.
தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'' மாணவன் விழித்தான்.
ஐயா! பின்புறம் தெரியவில்லை.'' "என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''
முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'' "அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு....''
எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''
ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?
மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.
தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.
குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்.
அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.''
ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''
தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.'' "
ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?''
அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும்.
ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.
தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.'' என்று முடித்தா
குருவே சரணம்,,,🙏🏻👑🙏🏻
*பிறப்பும் இறப்பும் ஏன் ?*

பிறப்பு எனும் பேரதியத்தை இன்னும் மானிடர் எவரும் புரிந்து கொண்டபாடில்லை எனும் போதிலும் பிறப்பு ஒரு புதிராகவேதான் உள்ளது.

எவ்வளவோ புதிர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், பிறப்பின் பேருண்மையை இயற்கை (இறைவன்) இன்னும் தனது ஆதிக்கத்திலேயே வைத்துள்ளதை உணர்கின்றோம். ..

*எதனால் இந்த பிறப்புகள் ?*

*பிறப்பினால் யாருக்கு நன்மை ?*

ஒரு நொடியும் தவறாமல் நடைபெறும், இந்த பிறப்பெனும் நிகழ்வினால் விளையும் நன்மை யாது?

பிறப்புக்கும் இறப்புக்கும் யார் அல்லது எது காரணம் ?

இதனால் அவர்களுக்கு அல்லது அதற்கு என்ன ஆதாயம் ?

விதிப்படி பிறப்பதும், விதிப்படி மரணிப்பதும் தொடர்கதையானால் இதன் முடிவு எப்போது ?

இப்படியே போனால் பிறப்பின் மீதும், இறப்பின் மீதும் வெறுப்பு ஏற்படாதா ?

ஒருவித அலுப்பும் சலிப்பும் ஏற்படுமானால் பிறப்பினாலும், பின் வரும் இறப்பினாலும் என்ன பயன் ?

எந்தவித காரணமுமில்லாமல் பிறப்பும் இறப்பும் இருக்குமா ?

*அப்படியானால் . . . . . .*

*இந்த பிரபஞ்ச தோற்றத்தின் காரணமென்ன ? அதற்கும் ஜீவன்களின் பிறப்பிற்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா ?*

பிறப்பு என்பது என்ன என்பதை முழுமையாக அறியாத வரையில் பிறப்பின் இரகசியத்தினை அறிந்து கொள்ள முடியாது.

பிறப்பினை அரிதிலும் அரிது என்றனள் ஔவை. பிறப்பினை எதற்கும் உவமை சொல்லமுடியாதென்றார் மேலோர். பிறப்பினை இறப்பாக மாற்றக்கூடாது என்பதில் சமர்த்தர்கள் சித்தர்கள்...

இப்படி பல வகையிலும் சிறந்ததான பிறப்பு ஏன் இறப்பாகவும் மாறுகின்றது?

பிறப்பு சிறந்ததென்றால் இறப்பு வேண்டாமே ? உத்தமர்களும் மரணிக்கின்றனர், உன்மத்தர்களும் மரணிக்கின்றனர்.  ஏன் இந்த நேர்தல் ?  உத்தமரும் இறப்பர் என்றால் நான் உன்மத்தனாக இருக்கின்றேன் எனும் மனோபாபம் மனிதர்களுக்கு ஏற்படாதா ?

*பிறப்பினை அரிதென்ற ஔவை பிறிதோரிடத்தில் பிறவாமை வேண்டுகின்றார்.*

ஏன் இந்த முரண்பாடு ? கேள்விகள் , கேள்விகள் ?!?!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பள்ளிவரை நாங்கள் , படைக்கிறவன் இறைவன் என்கிறார். அதாவது பள்ளியறையில் ஒன்று கலப்பதோடு மனிதனின் முயற்சி முடிந்தது. அதன்பின் பிறப்பினை அருள்வது இறைவனின் பேரருள் என்கிறார். அது உண்மைதான், பள்ளியறையில் ஒன்று கலந்தவர்கள் அனைவரும் புத்திரபாக்கியம் பெறுவதில்லை. அப்படியென்றால் பிறப்பினை தந்தருள்வது இறைவன்தான் (இயற்கைதான்) என்பதில் வேறு கருத்தில்லை...

அவரவர் வம்சம் தழைக்கவும் , வம்சம் தடைபட்டு போகவும் இறைவனே (இயற்கையே) முன் நின்று வழி நடத்துகின்றார். இந்த தோன்றலையும் , தோன்றா நிலையையும் இறைவன் (இயற்கை) அவரவர் விதிப்படி மிகச் சரியாக அமைத்து தருகின்றது. இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

*ஆனால் இந்த பிறப்பினாலும் அதன்பின் வரும் இறப்பினாலும் என்னபயன் ?* ஒரு வம்சம் தழைப்பதனாலும் , வம்சம் அழிந்து போனாலும் யாருக்கு என்ன பயன் ?

பகவான் கிருஷ்ணனாக இருந்தாலும், சுவாமி விவேகானந்தராக இருந்தாலும் ,பேரரசன் ராஜ ராஜ சோழனாக இருந்தாலும் பூமியிலேயே தங்கிவிட முடியாது . இங்கேயே தங்கிவிட முடியாது என்றால் . . பிறப்பு எதற்கு ? இறப்பு எதற்கு ? இறந்துதான் போகும் என்றால் பிறப்பே இல்லாமல் இருக்கலாமே !!!!!!!

*பிறந்து அதன்பின் ஏன் இறப்பு நேரவேண்டும் ?*

1. பிறப்பின் பின் அடையும் நாவின் சுவை, தேக சுகம், பதவி, புகழ் தரும் மயக்கம். மது, மாது என வருகின்ற போக சுகங்களும் . . . . . பின் மரணம்.

2. பிறப்பின் பின் மனிதன் , யோகி , ஞானி , தீர்க்கதரிசி , மகரிஷி பின் மரணம்.

என்ன இது ? ஏதோ ஒன்று இடிக்கின்றதே ? என்ன அது ?  பிறப்பின் காரணம் புரியாத ஒன்றுதான். ஆனால் அதில் ஏதோ ஒன்று மறைந்திருக்கின்றது. அது என்ன ?

பிறப்பு என்பதனை சற்று ஆழ்ந்து ஆய்ந்தால் ஒன்று விளங்குகின்றது, அதாவது ஜீவராசிகளின் பாப, புண்ணிய பலனாகவே பிறப்பு ஏற்படுகின்றது. 

முற்பிறப்பிலும், இப்பிறப்பிலும் செய்த பாப, புண்ணியங்களின் பலனாகவே இறப்பு நேர்கின்றது. 

மீண்டும் பாப , புண்ணிய பலனாக பிறப்பு , மீண்டும் முற்பிறப்பின் , இப்பிறப்பின் பலனாக இறப்பு .

இதுவே தொடர்கதையாகி இன்றுவரை மட்டுமல்ல , இனி வரும் காலமும் தொடரும் கதை.


*இதன் பொருளென்ன ? இதற்கு விடைதான் என்ன ?*

இதோ ஒரு சிற்றறிவிற்க்கு தோன்றிய விடை ..... ஒரு காரியத்தின் நிமித்தமாக நாம் வெளியூருக்கு சென்றால் , அந்த காரியம் நடைபெறவில்லையென்றால் என்ன செய்வோம் ?

மீண்டும் அந்த ஊருக்கு சென்று அந்த காரியத்தினை செய்து முடிப்போம். 

அப்போதும் முடியாது போனால் மீண்டும் ஒருநாள் சென்று அந்த காரியத்தினை செய்வோம். 

இப்படி அந்த குறிப்பிட்ட காரியம் முடியும் வரை அந்த ஊருக்கு மீண்டும் மீண்டும் செல்வோம் அல்லவா ?

அது போலவே நாம் நமது ஒவ்வொரு பிறப்பின்போதும் அறிந்தும் , அறியாமலும் நாம் செய்த பாப , புண்ணிய காரியங்களின் தொகுப்பை கரைப்பதற்காக மீண்டும் புவியில் பிறப்பிக்கப்படுகின்றோம் ,

ஆனால் . . . .  பிறப்பினை, அதன் சிறப்பினை உணராமல் மீண்டும் மீண்டும் பாபங்களையும் , புண்ணியங்களையும் செய்து மரணித்து மீண்டும் இறைவனின்(இயற்கையின்)பேரருள் கருணையால் பிறப்பிக்கப்படுகின்றோம்.

நாம் எதற்காக பிறப்பிக்கப்பட்டோமோ அதனை முற்றிலுமாக மறந்து , வெறும் கேளிக்கை , பதவி , புகழ் , பணபலம் , பெண் சுகம் அல்லது ஆண் சுகம் என புறச் சுக ஆவலிலேயே வாழ்நாளை கழிக்கின்றோம், மரணிக்கின்றோம்.

நாம் வந்த காரியத்தினை முடிக்காததினால் மீண்டும் ஒரு பிறவி தரப்பட்டு இப்பிறவியிலாவது நாம் மாறுவோம் என எதிர்பார்க்கப்படுகின்றது .

ஆனால் மனிதன் அதைப்பற்றி கொஞ்சமும் கவலையின்றி மீண்டும் சிற்றின்ப வேட்கையில் சிக்கி சீரழிகின்றான் , மரணிக்கின்றான். இப்படியே பிறந்து இறந்து , பிறந்து இறந்து தொடர்கதையாகி போகின்றான்.

ஆக
*பிறப்பு என்பது மீண்டும் ஒரு சந்தர்ப்பம்.*
*பிறப்பு என்பது மீண்டும் ஒரு வாய்ப்பு*
*பிறப்பு என்பது மீண்டும் ஒரு வரம்*
*பிறப்பு என்பது மீண்டும் ஒரு அருள்கொடை*
*பிறப்பு என்பது மீண்டும் தரப்படும் இறைவனின் (இயற்கையின்) பேரருள்.*

பிறப்பின் வாய்ப்பினை பயன்படுத்தி பிறப்பற்ற நிலையை ஜீவன்கள் பெற கொடுக்கப்படும் இறைவனின் பெருந்தயை... (ஓம் குமர குருதாச குருப்யோ நம:)

*இதனை ஸ்ரீ நாரத மகரிஷி கண்ட ஒரு சம்பவம் விளக்குகிறது.*

நாரத மகரிஷி ஒருமுறை ஒரு பன்றி குட்டி போடுவதை காண்கின்றார். இவரைக் கண்டதும் பன்றியின் குட்டி மரணிக்கின்றது. பதறிப்போன மகரிஷி வேறுபக்கம் போகின்றார், அங்கே ஒரு ஆடு குட்டி போடுகின்றது அதனைக் காணுகின்றார் மகரிஷி , பிறந்த அந்த ஆட்டுக்குட்டி இவரைக் கண்டதும் இறந்து போகின்றது, மேலும் பதறிப்போன நாரதர் வேறொரு இடத்தில் காராம்பசு கன்று போடுவதை பார்க்கின்றார், அந்த கன்றும் பார்க்கின்றது , பார்த்தவுடன் கன்று மரணம் அடைகின்றது .

மிகவும் கவலை அடைந்த நாரத மகரிஷி  மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகின்றார் , அவரை சமாதானப்படுத்தும் மகாவிஷ்ணு, நாரதா, “ நீ சென்று அதோ அந்த நாட்டு மன்னனுக்கு ஒரு மகன் பிறக்கப் போகின்றான் அவனை சென்று கண்டுவா” என்கின்றார்.  ஸ்வாமீ , ஏதும் விபரீதம் நடைபெறாதே என வினவுகின்றார் , நாரதர். கவலைப்படாதே சென்று பார் என்கின்றார் மகாவிஷ்ணு.

நாரத மகரிஷி சென்றார் அந்த குழந்தையை கண்டார், கண்டவுடன் சட்டென்று திரும்பினார், அப்போது அந்த குழந்தை பேசியது “ மகரிஷி அவர்களே , கொஞ்சம் நில்லுங்கள்.

நான் பன்றியின் குட்டியாக பிறந்தேன் தங்களின் திருப்பார்வை என்மீது பட ஆட்டின் குட்டியாக மறுபிறப்பெடுத்தேன், மீண்டும் தங்களின் பார்வையை என்மீது செலுத்தி என்னை காராம்பசுவின் கன்றாக பிறக்கச் செய்தீர்கள் , மறுபடியும் தங்களின் திவ்ய திருஷ்டியைப் பெரும் பாக்கியம் பெற்ற நான் இன்று மன்னனின் வாரிசாக பிறக்கும் வாய்ப்பினை பெற்றேன் தங்களின் நற்கருணைப் பார்வையைப் பெற்ற நான் புவியில் நல்லவனாக வாழும் பேற்றினை அருள்வீர்களாக என வேண்டிக் கொண்டது.

இதிலிருந்து புரிவது என்னவென்றால் ஒவ்வொரு ஜீவனின் பிறப்பும் மேன்மையை நோக்கிய பயணமாக அமையவேண்டியது , ஆனால் மன மாயையினால் கீழ்மையை நோக்கிய பயணமாக மாற்றம் கண்டு இன்று பல்லாயிரம் கோடி உயிரினங்களாக பல்கி பெருகி நிற்கின்றது.

பிறப்பின் அவசியமும், பெருமையும் ஜீவராசிகளை மேல்நிலையை அடையச் செய்வதற்காக இறைவன்(இயற்கை) தரும் சந்தர்ப்பம்.

பிறப்பு ஜீவன்களுக்குத்தான் ஆதாயம்.

ஆகவே பிறப்பினை கேவலப்படுத்தி வாழ்ந்து மரிக்காமல், பிறப்பினை உணர்ந்து மேன்மையான வாழ்நிலையை அடைந்திட பயன்படுத்தினால், நிச்சயம், மீண்டும் பிறக்கும் நிலை அற்றுபோகும் வாய்ப்பினை பெறலாம் என்பது சர்வ நிச்சயம். இல்லையானால் மீண்டும் மகாபாரதம் போல ஒரு பேரழிவினை காண்பது திண்ணம்.

கொத்துகொத்தாக ஜீவன்கள் கொல்லப்படும், சுனாமி, பெருந்தீ போன்ற அதனை இறைவனே (இயற்கையே) முன் நின்று நடத்தும் என்பதும் நிச்சயம்.

பிறந்த பிறப்பினை உயர்த்துவோம்..
#கேள்வி : -

ஓஷோ , நீங்கள் அடிக்கடி , உங்கள் மையநிலையை நோக்கிச் செல்லுங்கள் என்று கூறுகிறீர்கள் .

 இந்த மையநிலை என்றால் என்ன ? இதைநோக்கி எப்படிச் செல்லுவது ?

 கண்களை மூடிக்கொண்டு நம் உள்ளே பார்க்கும்பொழுது , இருட்டைத்தவிர வேறு ஒன்றும் தெரியவில்லையே ?

இது அலுப்பாக இல்லையா ? எண்ணங்களும் , உணர்வுகளும் மாறிமாறி வந்தபடியே இருக்கின்றன . இதை எப்படி வெறுமனே பார்ப்பது ?

#ஓஷோபதில்‬‬ : -

 " ஆமாம் , உண்மைதான் .

நீங்கள் வேகமாகச் செயல்படப் பழக்கப்பட்டிருக்கிறீர்கள் .

இப்பொழுது நான் ' மெல்லமெல்ல அடிமேல் அடிவைத்து , உங்கள் கவனத்தை காலடியில் மாத்திரம் வைத்து ஒருமணி நேரத்தில் சுமார் 20 - லிருந்து 25 அடி தூரம் மாத்திரம் நடங்கள் ' என்று சொன்னால் உங்களால் கடைப்பிடிக்க முடியுமா ?

இதுவும் ஒரு தியானம்தான் ! ஆனால் , நீங்கள் என்ன சொல்லுவீர்கள் ?

' இது என்ன சோம்பேறித்தனமான வேலை ? எவ்வளவு குறுகியதூரம் அலுப்பான வேலை ? " என்றுதான் கூறுவீர்கள் .

' பழக்கத்தை மாற்றிக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லைதான் .

ஆனால் , விடாமுயற்சியுடன் மாற்றித்தான் ஆகவேண்டும் –
 நீங்கள் தியானத்தில் முன்னேறவேண்டுமானால் ! '

அடுத்து , உங்கள் மையநிலை என்பது எண்ணமற்ற உயிர்த்தன்மைதான்   வேறுஒன்றும்இல்லை ! நீங்கள் எந்த அளவுக்கு உங்களுடைய எண்ண ஓட்டங்களை ஒரு சாட்சியாக நின்று பார்க்கிறீர்களோ , அப்பொழுது எண்ண ஓட்டம் குறையக் குறைய உங்கள் சாட்சித்தன்மை அதிகமாகும் . அப்பொழுது நீங்கள் தானாகவே அந்த மையநிலையை நோக்கிச் செல்லுவீர்கள் . அவ்வளவுதான் ! அந்த மையநிலையை நோக்கிச் செல்லுவது என்றால் உங்கள் எண்ணங்களிலிருந்து மெல்ல மெல்ல விடுதலையாவது என்றுதான் அர்த்தம் .
கண்களை மூடிக்கொண்டு நம் உள்ளே பார்க்கும்பொழுது , இருட்டைத்தவிர வேறு எதுவும் தெரியவில்லையே என்று கேட்கிறீர்கள் .  உண்மைதான் .
ஒருநிகழ்ச்சி ..... டேவிட்ஹும் ( David Hume ) என்ற ஒரு சிறந்த ஆங்கிலேயத் தத்துவவாதி , கீழைநாட்டு உபநிஷத்தைப் படித்துவிட்டு , தியானம் செய்ய முயற்சித்தார் . ஆனால் அவரால் அதில் ஆழமாகச் செல்ல முடியவில்லை . சிறிது செய்துவிட்டு , ' இது என்ன அலுப்பான வேலை ? எண்ணங்களும் உணர்வுகளும் எப்படி மாறி மாறி வருகின்றன.  இவற்றை வெறுமனே பார்ப்பதால் என்ன பிரயோஜனம் ? என்று வெறுப்படைந்தார் . இவரைப்போலத்தான் 100 - க்கு 90 சதவிகிதம் மக்கள் இருக்கிறார்கள் ! அதில் நீங்களும் அடக்கம் .
தியானத்திற்கு முதல் தகுதி பொறுமை ! பொறுமை இல்லாதவர்கள் இந்த வேலையற்ற வேலைக்கு வராமல் இருப்பதே நல்லது ! ஹும் , இன்னும் சற்று பொறுமையாக தியானத்தைக் கடைப்பிடித்திருக்கவேண்டும் . அதாவது குறைந்தது சுமார் 2 - லிருந்து 3 மாதம் !  அப்பொழுது எண்ணங்களும் , உணர்வுகளும் மெல்ல மெல்லஅடங்கி வருவதைக் கண்டு அவரே ( டேவிட்ஹும் ) ஆச்சரியப்பட்டிருப்பார் .
வெறுமனே சாட்சியாக நின்று பார்ப்பதுகூட அவ்வளவு சுலபமல்ல . ஏனெனில் நீங்கள் ( மனம் ) அப்படி குறுக்கே பாய்ந்து பாய்ந்து பழக்கப்பட்டிருக்கிறீர்கள் . வெறுமனே பார்க்கும்பொழுது உங்களை அறியாமலே உங்களுடைய இன்னொரு மனம் குறுக்கே கண்டிப்பாகப் பாயும் . இது பழக்கதோஷம் . இதை நீங்கள் ஒரேநாளில் இல்லைஒரே வருடத்தில் சாதிக்கமுடியாது ! தேவை பொறுமை ! பொறுமை !! பொறுமை !!! விடாமுயற்சி ! விடாமுயற்சி !! விடாமுயற்சி !!!
அப்படி மனம் குறுக்கே பாயும்பொழுது அதையும் சாட்சியாக நின்று பார்த்து மெல்ல அதை அகற்றவும் . இது பல முறை நடக்கும் . சலித்துக்கொள்ளாதீர்கள் ! பிறகு மெல்ல மெல்ல எண்ண ஓட்டம் குறைந்து , அதன் இடையில் இடைவெளி ஏற்படும் . இந்த இடைவெளி ஏற்பட்டாலே , நீங்கள் தியானத்தில் முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம் . நீங்கள் மேலும் மேலும் தியானத்தில் ஆழ்ந்து செல்லச் செல்ல இந்த இடைவெளி அதிகமாகி ஒரு கட்டத்தில் ஒன்றுமே அற்றநிலை ( Empty ) ஏற்படும் ! இதற்குப் பல வருடங்கள் ஆகலாம் . அல்லது பல பிறவிகள்ஆகலாம் ! இதைக் கண்டு நீங்கள் மிகவும் பயப்படுவீர்கள் . இது இறப்பு உணர்வையும் , பேரின்ப உணர்வையும் ஒருங்கேகொடுக்கும்.
நீங்கள் மேலும் மேலும் தியானத்தில் ஆழ்ந்து செல்லச் செல்ல இந்த இடைவெளி அதிகமாகி ஒருகட்டத்தில் ஒன்றுமேஅற்றநிலை ( Empty ) ஏற்படும் ! இதற்கு பல வருடங்கள் ஆகலாம் . அல்லது பல பிறவிகள் ஆகலாம் ! ஆனால் , இதைக் கண்டு நீங்கள் மிகவும் பயப்படுவீர்கள் . இது இறப்பு உணர்வையும் , பேரின்ப உணர்வையும் ஒருங்கேகொடுக்கும் ! ........
அப்பொழுது‬‬ அவர் ' தான் , ' தன்னை , இழக்கிறார் . அப்பொழுது உங்கள் உள்ளே காரிருளை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் . பிறகு மெல்ல மெல்ல மெல்லிய வெளிச்சத்தை உணர்வீர்கள் ! அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது , ஜுவாலையும்இருக்காது . அதிகாலை ஒளியைப் போல குளிர்ச்சியாக இருக்கும் . இதைத்தான் ஹிந்துக்கள் ' சந்தியா ' (Santhiya ) என்று அழைப்பார்கள் . இதன் அர்த்தம் ' இருட்டும் ஒளியும் கலந்த மங்கலானநிலை '  என்று பொருள் . அப்பொழுதுதான் உங்களுக்கு ' நீங்கள்யார் ? '  என்பது விளங்கும் ! அந்த ஒளிதான் நீங்கள் !
அப்பொழுது பார்ப்பவனும் பார்க்கப்படும் பொருளும் ( Sub - ject , Object ) மறைகின்றன . செயல்மாத்திரம் ( Predicate ) – அந்த ஒளி – தன் அறிவாய் தன் உணர்வாய் , மிகுந்த விழிப்பாக மிகுந்த உணர்வாக இயங்குகிறது . அப்பொழுது அது தன்னைத்தானே பார்த்துக்கொள்கிறது ! ( Observer is Observed by itself ) இந்தநிலைக்குப் பெயர்தான் ஞானமடைதல் என்பது !
ஆக இப்படி வெறுமனே பார்ப்பது , சாட்சியாக நின்று பார்ப்பது எல்லாம் ஆரம்பத்தில் அலுப்பையே கொடுக்கும் . ஏனெனில் ஆரம்பத்தில் இருட்டையும் , குழப்பத்தையுமே சந்திப்பீர்கள் . மெல்ல மெல்ல இதுவே பழக்கமாகிவிடும் ! இதை நீங்கள் மட்டும் , நீங்களேதான் தனியே அணுகவேண்டும் . வேறுவழியில்லை . உங்களுக்காக , உங்கள் அன்புக்குரிய குருகூட செய்யமுடியாது ! அவர் உங்களது சந்தேகங்களைத் தீர்க்கலாம் . உங்களை ஊக்குவிக்கலாம் . தைரியம் ஊட்டலாம் .  அவ்வளவுதான் .
ஒருவரது பிறப்பு ,  இறப்பு , ஞானமடைதல் என்பது தனிப்பட்ட சமாச்சாரம் ! ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு மாஸ்டரின் உதவி இல்லாமல் , உங்களால் ஞானமடையமுடியாது .
அடுத்து இன்னொரு விஷயம் . நீங்கள் உங்களுக்குள்ளே ஆழமாகச் செல்லும்பொழுது உங்களால் அடக்கி வைக்கப்பட்டுள்ள ஆசைகள் , துன்பங்கள் எல்லாம் மேலே வர ஆரம்பிக்கும் . இதுதான் உங்கள் குழப்பத்திற்கு மூலகாரணம் . ஒரு கட்டத்தில் பயந்துபோய் வெளியே ஓடிவர முயற்சி செய்வீர்கள் ! இப்பொழுது உங்களுக்கு ஒருகுரு மிகவும் அவசியம் . இந்த நரகத்தைக் கடந்த அவர் உங்களுக்கு தைரியம் ஊட்டுவார் . நீங்கள் இப்படிப் பல நரகங்களைக் கடந்துதான் சொர்க்கத்தை அடையவேண்டும் ! அப்பொழுது உங்கள் மனமே நரகமாக இருக்கிறது ! அது உங்களைப் பயமுறுத்தும் , பலஆசைகளைக்காட்டும் , வெளியே வா என்று உங்கள் கைகளைப்பிடித்து இழுக்கும் ! அது லேசில் உங்களை தியானம் செய்ய அனுமதிக்காது . ஏனென்றால் , தியானம் என்பது அதற்குச் சாவுமணி ! அப்படி இருக்கும்பொழுது தெரிந்தே அது எப்படி தியானத்தை அனுமதிக்கும் ?
அடுத்து நீங்கள் தியானத்தில் முன்னேற , இந்த உலக அவலட்சணங்களை - பதவி , படிப்பு , பணம் , பெண்இன்பம் , கௌரவம் – நீங்கள் மெல்ல மெல்ல அகற்றவேண்டும் . நீங்கள் ஆகாயத்தில் பறக்க , பூமியை விட்டுவிடத்தான் வேண்டும் . ஆனால் , கவலை வேண்டாம் நீங்கள் தியானத்தில் முன்னேற முன்னேற இந்த உலக அவலட்சணங்கள் புரிய ஆரம்பிக்கும் ! அப்பொழுது அவைதானே விலகும் . இந்த அவலட்சணங்களுக்கு இன்னொரு பெயர்தான் அகங்காரம் ( Ego ) . உங்களுடைய சகல துன்பங்களுக்கும் இதுதான்காரணம் .
இது உங்கள் பிறப்போடு வந்தது அல்ல . இடையில் நீங்களாகச் சம்பாதித்துக் கொண்டது . இந்த அவலட்சணங்களை அடைய நீங்கள் எவ்வளவு சக்தியைச் செலவழித்திருப்பீர்கள் !
நீங்கள் எல்லோரும் விதையாக ( Seed ) இருக்கிறீர்கள் . நீங்கள் இப்படியே எவ்வளவு காலம் வேண்டுமானுலும் இருக்கலாம் . 10 , 000 வருடங்களுக்கு முன்பு உள்ள விதைகளை மொகன்ஜதோராவில் ( Mohen Joo Daro ) கண்டுபிடித்திருக்கிறார்கள் . சீனாவில் பத்துலட்சம் வருடங்களுக்கு முன்பு உள்ள விதைகளை ஒரு குகையில் கண்டுபிடித்திருக்கிறார்கள் . இவை எல்லாமே இன்னும் முளைக்கும் தன்மையிலேயே இருக்கின்றன !  என்ன ஆச்சரியம் !
இப்படி விதையாக நீங்கள் பலநாட்டில் பலபிறவியாகப் பிறந்து பிறந்து வந்திருக்கிறீர்கள் . ஆனால் , உங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை ! அதே பணஆசை , கௌரவம் , பெண் இன்பம் .........அப்படித்தான் ! நீங்கள் தைரியமாக உங்கள் உள்ளே சென்று ஒரு செடியாக மாற முயற்சிக்கவில்லை . ஆனால் இது துன்பமாகத்தான் இருக்கும் . ஏனெனில் , நீங்கள்  உங்கள் ( விதை ) மேல்தோலைக் கிழித்துக்கொண்டு வரவேண்டும் . அந்த மேல்தோல் என்பது உங்கள்அகங்காரம்தான் . அதாவது இந்த உலக அவலட்சணங்கள்தான் ! ஆக , முதலில் நீங்கள் துன்பத்தைத்தான் சந்திக்க வேண்டிவரும் . ஆனால் , இது நிரந்தரமல்ல . நான் சத்தியம் செய்கிறேன் ! இது முற்றிலும் உண்மை . இது என் அனுபவம் .  ஆகவே பயப்பட வேண்டாம் . நீங்கள் அந்தத் துன்பத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் . உங்கள் உயிரைத் துச்சமாக மதிக்க வேண்டும் .
*இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!*

 *இராமேஸ்வரம் தல வரலாறு*
*ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனைக் கொன்ற பாவத்தினை நீக்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.*

*22தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்*

*1. மகாலெட்சுமிதீர்த்தம்*
*இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸ்னானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.*

*2. சாவித்திரி தீர்த்தம்,*
*3. காயத்ரி தீர்த்தம்,*
*4. சரஸ்வதி தீர்த்தம்*
*இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்தங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.*

*5. சேது மாதவ தீர்த்தம்*
*இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராமபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.*

*6. நள தீர்த்தம்*
*மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சூரிய தேஜசை அடைந்து சொர்க்கலோகப் பதவி அடைவர்.*

*7. நீல தீர்த்தம்*
*மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.*

*8. கவாய தீர்த்தம்*
*இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.*

*9. கவாட்ச தீர்த்தம்*
*இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்குஅருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்குச் செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.*

*10. கந்நமாதன தீர்த்தம்*
*சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.*

*11. சங்கு தீர்த்தம்*
*இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.*

*12. சக்கர தீர்த்தம்*
*இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.*

*13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்*
*இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதுடன், பில்லி சூனியமும் நீங்கும்.*

*14. சூர்ய தீர்த்தம்*
*இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானம் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.*

*15. சந்திர தீர்த்தம்*
*இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி ஆகும்.*

*16. கங்கா தீர்த்தம்*
*17. யமுனா தீர்த்தம்*
*18. காயத்ரிதீர்த்தம்*
*இம்மூன்று தீர்த்தங்களும்திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்குஎதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.*

*19. சாத்யாம்ருத தீர்த்தம்*
*திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.*

*20. சிவ தீர்த்தம்*
*இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்னானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.*

*21. சர்வ தீர்த்தம்*
*இந்ததீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னதி முன் உள்ளது. இதில் நீராடினால் பிறவிக்குருடு, நோயும் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.*

*22. கோடி தீர்த்தம்*
*இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமரானவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்த்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு கட்டணம் உண்டு. பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.கோடி தீர்த்தத்தில் நீராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.*