Followers

Thursday, 30 August 2018

🌸ஸ்ரீ ராகவேந்திரர்
-
தமிழகத்தில் சிதம்பரம் அருகே இருக்கும் புவனகிரி என்னும் சிற்றூரில், மிருகசீரிஷ நக்ஷத்திர, சுக்ல ஸப்தமி கூடிய பங்குனி மாத வியாழக்கிழமை நன்னாளில் 1595-ம் ஆண்டில், திம்மண்ண தத்தா, கோபிகாம்பா என்னும் பெற்றோருக்குப் புதல்வனாக வெங்கண்ண பட்டர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்தார்.
-
வேங்கடநாதர் கல்வியில் சிறந்து விளங்கினார். சிறுவனாக இருந்தபோதே இவரது பெருமை வெளிப்பட்டது. மிகச் சிறிய சொல்லான 'ஓம்' என்பது எவ்விதம் ஒரு அளவிட இயலாக் கடவுளின் பெருமையை உள்ளடக்கியதாகும் எனத் தன் தந்தையிடம் கேட்டாராம். ஆனால் இவரது பெருமையை அறிந்துகொள்ள இயலாது, இவரது சிறுவயதிலேயே வேங்கடநாதரின் தந்தை இறந்து விட்டார். வேங்கடநாதரின் மூத்த சகோதரனே மற்ற குழந்தைகளைக் கவனித்துக் கொண்டார். மதுரையில் வசித்த தனது சகோதரியின் கணவர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹாச்சார்யா என்பவரின் இல்லத்தில் இவரது கல்வி தொடர்ந்தது.
-
மதுரையிலிருந்து திரும்பியதுமே, ஸரஸ்வதி என்னும் நற்குலப் பெண்மணியுடன் இவரது திருமணம் நிகழ்ந்தது. புலன்களை அடக்கிய ஒருவரது கல்வி, திருமண வாழ்க்கையால் தடைப்படுவதில்லை என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஸரஸ்வதி தேவியின் அருளால், வேங்கடநதரின் கல்வி திருமணத்திற்குப் பின்னும் மேலும் சிறந்தது. கல்வியில் சிறந்து விளங்கிய கும்பகோணத்துக்குச் சென்றார். வேதாந்தம், இலக்கணம், சாஸ்திரங்கள் முதலானவற்றை ஸுதீந்திர தீர்த்தர் என்பவரிடம் கற்றார். தான் கற்றவற்றிற்கான விளக்கங்களை இரவு முழுவதும் கண் விழித்து எழுதினார். கற்றறிந்த பலருடனும் தர்க்கம் செய்து அவர்களைத் தோற்கடித்தார். தஞ்சை அரசவையின் மிகச் சிறந்த விற்பன்னரான வெங்கடேச்வர தீக்ஷிதர் என்பவர் அவர்களில் ஒருவர். இவரது இலக்கண அறிவு, வாதிடும் திறன் முதலானவற்றைக் கண்டு வியந்த ஸுதீந்திர தீர்த்தர், வேங்கடநாதருக்கு 'மஹாபாஷ்ய வேங்கடநாதாச்சார்யா' எனும் பட்டத்தை வழங்கினார். 'தப்தமுத்ர தாரணா' என்பதன் சிறப்பைப் பல ஸ்ம்ருதிகளின் மூலம் உதாரணம் காட்டி, எவராலும் எதிர்க்க முடியாத அளவில் வாதம் புரிந்து தம்மை எதிர்த்தவர்களை வென்றார்.
-
கும்பகோணம் வழியே யாத்திரை செல்லும்போது, ஸ்ரீ வேங்கடநாதரையும், அவரது மனைவியையும் ஒருவர் தன் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு அழைத்தார். இவரது பெருமையை அறியாத அந்த வீட்டுக்காரர்கள், ஏதாவது வேலை வாங்கியெ இவர்களுக்கு உணவளிக்க வேண்டுமென நினைத்து, வந்தவர்களுக்கு சந்தனம் அரைத்துத் தருமாறு பணித்தனர். தமது வழக்கப்படி, வேங்கடநாதர் மந்திரங்களைச் சொல்லியவாறே சந்தனம் அரைத்தார். அதை இட்டுக் கொண்டவர்களெல்லாம், உடலெங்கும் வெந்துபோவதுபோன்ற ஒரு எரிச்சலை உணர்ந்து அலறினர். இதற்கான விளக்கத்தை அவரிடம் கேட்டபோது, அக்னி ஸுக்தம் சொல்லிக்கொண்டே இதை அரைத்ததாகவும், அவற்றின் சக்தியாலேயே இப்படி எரிச்சல் ஏற்பட்டது எனவும் பதிலுரைத்தார். தகுதி வாய்ந்த ஒருவர் பக்தியுடனும், சிரத்தையுடனும் இப்படிச் செய்யும்போது, வேத மந்திரங்கள் அவருக்குக் கட்டுப்படுகின்றன என்பதை உணர்ந்த அனைவரும் ஸ்ரீ வேங்கடநாதரைப் ப‌ணிந்து வணங்கி, அவரது பெருமையை உணர்ந்து மன்னிப்புக் கோரினர்.
-
இப்படியாக இறை வழிபாட்டிலும், சமூக சேவையிலும் ஸ்ரீ வேங்கடநாதர் ஈடுபட்டிருக்கையில், அவரது ஆன்மீக குருவான ஸுதீந்திர தீர்த்தர் தமக்கு ஒரு வாரிசைத் தேடிக் கொண்டிருந்தார். ஸ்ரீ வேங்கடநாதரே இதற்கு முற்றிலும் தகுதியானவர் என ஸுதீந்திரருக்குக் கனவில்  இறைவன் உணர்த்தினார். தனது இளம் மனைவி, சிறு வயது பாலகன் இவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு தனக்கு இருப்பதால், முதலில் ஸ்ரீ வேங்கடநாதர் மறுத்தார். அப்போது கல்விக்கு அதிபதியான வித்யாலக்ஷ்மி அவரது கனவில் தோன்றி, இவ்வுலகம் உய்ய அவரைச் சந்யாசம் மேற்கொள்ளுமாறு கூறியருளினார். இதை ஒரு நல்ல சகுனமாகக் கருதிய வேங்கடநாதர் தனது மனதை மாற்றிக்கொண்டு 1621-ல் பங்குனி மாதம், சுக்ல த்விதீயை கூடிய நன்னாளில் துறவறம் பூண்டார்.
-
ஸ்ரீ வேங்கடநாதர் சந்யாசம் பூண்டதை ஏற்றுக்கொள்ள இயலாத அவரது மனைவி தற்கொலைசெய்து கொண்டாள்.  . இந்து சமய சாஸ்திரங்க‌ளின்படி, அகால மரணமடைந்தவர் பேயாக மாறி, பூமிக்கும், சுவர்க்கத்துக்கும் இடையே அல்லாடுவர் என்பதற்கொப்ப, பேயாக மாறிய ஸரஸ்வதி, அந்த உருவிலேயே மடத்தை நோக்கி ஓடினாள். ஆனால், அதற்குள் அவளது கணவர் ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராகத் துறவறம் கொண்டுவிட்டார். தனது மஹிமையால் பேயுருவில் தமது பூர்வாச்ரம மனைவி வந்திருப்பதை உணர்ந்து, அவளது கடைசி ஆசையைப் பூர்த்தி செய்வதற்காகத் தன் கமண்டலத்திலிருந்து சில துளி நீரைத் தெளிக்கவே, பிறப்பு, இறப்புகளைக் கடந்து மோக்ஷம் அடைந்தாள். தன்னலமற்ற அவளது சேவைக்குக் கிடைத்த பரிசாக‌ இது அமைந்தது.
-
கும்பகோணத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் இருந்தபோது, தஞ்சை மாநிலம் முழுவதும் 12 ஆண்டுகளாகக் கடும் பஞ்சத்தில் வாடியது. அப்போது தஞ்சை மன்னர் ஸ்வாமிகளைப் பணிந்து , பஞ்சம் தீர ஏதேனும் யாகங்கள் வளர்க்க வேண்டினார். அவ்வாறே ஸ்வாமிகள் செய்த உடனேயே, மழை பொழிந்து, வளம் பொங்கியது. விலையுயர்ந்த ரத்தினங்கள் பொறித்த ஒரு அழகிய மாலையை தனது நன்றியறிதலாக மன்னர் மடத்துக்கு வழங்கினார். தாம் செய்துகொண்டிருந்த ஒரு யாகத்தில் அந்த மணிமாலையை ஸ்வாமிகள் அர்ப்பணித்தார். தமக்கு இழைக்கப்பட்ட அவமானமாக மன்னர் கருதிக் கோபமுற்றதைக் கண்ட ஸ்வாமிகள், தமது திருக்கரங்களை ஹோம குண்டத்துள் விட்டு, சற்றுக்கூட மாற்றுக் குறையாத வடிவில் அதே மாலையைத் திரும்பவும் எடுத்து, அதை மன்னருக்கு அளித்தார். ஸ்வாமிகளின் கரங்களிலோ, அந்த மாலையிலோ தீயின் சுவடு சற்றுக்கூட இல்லை. மஹானின் பெருமையை உணர்ந்த மன்னர் அன்று முதல் ஸ்வாமிகளின் தீவிர பக்தரானார்.
-
தென்னிந்தியா முழுவதும் துவைத தத்துவத்தைப் பரப்பவெனத் தீர்த்த யாத்திரை செல்ல முடிவுசெய்து கிளம்பிய ஸ்வாமிகள், இராமேச்வரம்,ஸ்ரீரங்கம் முதலான தலங்களுக்குச் சென்றார். இராமேச்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் லிங்கம்,ஸ்ரீராமன் இராவணனுடன் போரிட, இலங்கைக்குச் செல்லும்முன் வ‌ழிபட்ட லிங்கமே எனப் பிரகடப்படுத்தினார். இது தொடர்பாக, அந்தணர் ஒருவருக்கும், ராக்ஷஸி ஒருவருக்கும் பிறந்த அரக்கனே இரவணன் என்றும் விளக்கினார். ஒருசில அறிஞர்கள் சொல்லுவதுபோல, பரம்பொருளான ஸ்ரீராமர், இராவணனைக் கொன்றதால் ஏற்பட்டதாக‌த் தவறாகக் கூறப்படும் பிரம்மஹத்தி முதலான எவ்வித தோஷங்களுக்கும் ஆட்பட்டவர் அல்லர் என்றும் மறுத்துரைத்தார்.
-
அங்கிருந்து கன்யாகுமரி, திருவனந்தபுரம் முதலான திருத்தலங்களுக்குச் சென்ற பின்னர், தனது பூர்வாச்ரமத்தில், இளவயதைக் கழித்த மதுரைக்கு வந்து, அங்கு வசித்த தனது [பூர்வாச்ரம] தமக்கையின் கணவரையும் சந்தித்தார். பின்னர், விஷ்ணு மங்களா, குக்கே ஸுப்ரமண்யா, உடுப்பி முதலிய தலங்களுக்கும் சென்று, தமது துவைதக் கருத்துகளின் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்றார். அப்போது அவர் எழுதிய பாஷ்யங்கள் ஒரு யானையின் மீது வைக்கப்பட்டு அவரைப் பின்தொடர, செல்லுமிடமெங்கும் பெருமளவில் பக்தர் கூட்டத்தைப் பெற்றார்.
-
 தமது புனித யாத்திரையின்போது ஒருநாள் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் [ஹூப்ளி அருகே] ஸ்வாமிகள் வெயிலின் கொடுமையினால் நிழல் தரும் ஒரு மரத்தடியில் இளைப்பாறினார். அப்போது ஒரு இஸ்லாமிய நவாப் இவரை நோக்கி வருத்தத்துடன் வருவதைக் கண்டு, என்ன விஷயமென விசாரிக்கையில், பாம்பின் விஷக்கடியால் மாண்டுபோன தனது மகனைப் புதைத்துவிட்டு வருவதாக நவாப் கூறினார். இதைக் கேட்டதும், சற்று நேரம் அமைதியாக தியானித்த ஸ்வாமிகள், அந்தக் குழந்தையை சமாதியிலிருந்து வெளியெடுக்குமாறு சொல்ல, குழம்பிய மனத்துடன் நவாப் அவ்வாறே செய்தார். தமது கமண்டலத்திலிருந்து சில துளி நீரை அந்த உடலின் மீது தெளித்துவிட்டு, தனது இஷ்ட தெய்வத்தை எண்ணி ஸ்வாமிகள் மனதுள் பிரார்த்தனை செய்தார். என்ன ஆச்சரியம்! அந்தக் குழந்தை அப்போதுதான் கண் விழித்ததுபோல் எழுந்தான். நவாபின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை!
-
இது நிகழ்ந்து பல நாட்களுக்குப் பின், அதோனி ராஜ்ஜியத்தின் நவாபை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு நிகழ்ந்தது. ஸ்வாமிகளிடம் மரியாதை காட்டுவதற்குப் பதிலாக, அவரது அபூர்வ சக்தியைச் சோதிக்க எண்ணிய நவாப், ஒரு தட்டில் மாமிசத் துண்டுகளை வைத்து, அவற்றை ஒரு பட்டுத் துணியால் மூடி, ஸ்வாமிகளிடம் சமர்ப்பித்தான். மஹான்களை சந்திக்கும்போது இதுபோல சன்மானம் செய்வது இந்து வழக்கம். தனது கமண்டலத்திலிருந்து புனித நீரை அந்தத் துணியின் மீது தெளித்துவிட்டு ஸ்வாமிகள் அதை நீக்கியபோது, அங்கே பழங்கள் நிறைந்திருந்தன. தனது தவற்றை உணர்ந்து வருந்திய நவாப், மஹானின் பெருமையை உணர்ந்து, அவரிடம் மன்னிப்புக் கோரி, அவரைப் பணிந்து வணங்கி அவரது தீவிர பக்தனானான். பிராயச்சித்தமாக, ஸ்வாமிகள் வேண்டுமளவுக்கு நிலத்தையும், செலல்வத்தையும் அளிப்பதாக வேண்டினான். தமக்கென எதுவும் வேண்டா ஸ்வாமிகள், 'மாஞ்சாலே' என்னும் பகுதியில் இருக்கும் நிலத்தைத் தமது மடத்துக்குத் தருமாறு கூறினார். வறண்ட இந்த நிலத்தை விடவும், செழிப்பான வேறிடத்தில் நிலமளிப்பதாக நவாப் கூறியபோதும், துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்த இந்த நிலமே போதும் என ஸ்வாமிகள் தீர்மானமாகக் கூறிவிட்டார். அங்கே தற்போது "மந்திராலயம்" என அழைக்கப்படும் ஸ்வாமிகளின் மடம் ஸ்தாபிக்கப்பட்டது.
-
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருநாள், ஒரு பக்தரிடம், இந்த இடத்தில்தான் துவாபர யுகத்தில் பிரஹலாதன் என்னும் அரசன் ஸ்ரீராமரை வேண்டி யாகங்கள் செய்தான் என்பதால் இது ஒரு புனிதத்தலம் என ஸ்வாமிகள் அருளினார். இந்த மந்திராலயம் என்னும் புனித க்ஷேத்திரத்தில் ஸ்வாமிகள் பல காலம் தங்கி, தமது ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்தார். வருபவர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்ய வேண்டும் என்னும் ஸ்வாமிகளின் கட்டளைக்கு ஏற்ப இங்கு இன்றும் இந்தப் புனிதமான அன்னதானம் பல பக்தர்களின் நன்கொடையால் தொடர்ந்து நிகழ்ந்து....
*#யார்_சிவனடியார்*



*• பன்றிக்கறியை படைத்து, தன் அன்பை வெளிக்காட்டிய ஒருவர்தான் நாயன்மார் ஆனார்.*

*• பிடித்த மீன்களில் உயர்ந்த மீனை சிவனுக்கு தந்தே ஒருவர் நாயனார் ஆனார். (மீனவர் குளத்தில் பிறந்தவர் மீன் சாப்பிடாமலா இருந்திருப்பார்!!!!!)*

*• மாட்டின் தோலை உறித்து வாத்திய கருவிகளை கோயிலுக்கு இனாமாக வழங்கியே, நந்தனார் நாயன்மார் ஆனார்.*

*• சிவனடியார்களின் உடைகளை துவைத்து கொடுத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*

*• சிவனடியார்களுக்கு அமுது படைத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*

*• சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்துதவியே, ஒருவர் சிவனடி சேர்ந்தார்.*

*• சிவபெருமான் புகழை பாடியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*

*• குங்கிலிய தூபம் போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*

*• ஈசனை தவறாக பேசுபவர் நாவை வெட்டியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*

*• ஈசனுக்கு பூ பரித்து போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*

*ஆக...... சிவனடியார் என்பர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் நிபந்தனையும் கிடையாது.*

*ஈசனை நினைத்து எந்த செயல் செய்தாலும், அது சிவதொண்டே.*

*அன்பர்கள் எப்படி இருந்தாலும், ஈசன்மேல் அன்பாக இருந்தால்----அவரே சிவனடியார்.*

*எதைவேண்டுமானாலும் செய்யுங்கள்....ஈசனை நினைந்து செய்யுங்கள். சிவபெருமானை நினைந்து செய்யும் எல்லா செயலும் சிவனுக்கு ரொம்ப பிடிக்கும்.*

*சிவனடியார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நால்வர் பெருமக்களோ நாயன்மார்களோ சொல்லவே இல்லை.*

*ஆக..... சிவனடியார் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் தகுதி, நம்மில் யாருக்குமே கிடையாது.*

*சிவத்தை நினைந்து செய்யும் ஒவ்வொரு செயலும் வழிபாடுதான். வாழ்வையே வழிபாடாக்கிய ஒவ்வொருவரும் சிவனடியார்தான்.*

*#வாழ்தலே_வழிபாடு*

*#நமச்சிவாய*


*#சொல்லுக_சொல்லைப்_பிறிதோர்ச்சொல்_அச்சொல்லை*

*#வெல்லும்_சொல்இன்மை_யறிந்து.*


*#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_நட்பே.*

*#வாழ்க_வளமுடன்.*
*இதுவரை புரியாத புதிர்150ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் அதிசயம்.!!!

கோயிலை  காவல் காக்கும் முதலை...!*🐊

🐊ஒவ்வொரு கோயில்களுக்கும் ஏதாவது ஒரு தனி சிறப்பு ஒன்று இருக்கும். அந்த தனித்துவமே அந்த கோயில், மக்களிடையே பிரசித்திப் பெற காரணமாக அமைவதும் உண்டு.

🐊அந்த வகையில் கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள அனந்தபுரா கோயிலும் பிரசித்திப் பெற்ற ஒன்று. இந்த கோயிலில் என்ன தனித்துவம் இருக்கிறது என கேட்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.

🐊 கேரளாவின் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் அனந்தபுரா கோயில், அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானமாக கருதப்படுகிறது.

🐊 அனந்தபுரா கோயில் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதோடு பிரதான கோயிலை சுற்றி தலைவாயில் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

🐊 பச்சைப் பசேல் என்று இருக்கும் இந்த கோயில் குளத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முதலை ஒன்று வாழ்ந்து வருகிறது. இதை அங்குள்ள மக்கள் பபியா என பெயரிட்டு அழைக்கிறார்கள்.

🐊இந்த முதலை கோயிலின் பாதுகாவலாக கருதப்படுவதோடு, பக்தர்களால் மிகவும் மரியாதைக்குரிய பிராணியாகவும் மதிக்கப்படுகிறது.

🐊அதோடு இந்த முதலை இறந்து போனாலும், அதன் இடத்தில் கோயிலை பாதுகாக்க மற்றொரு முதலை இந்த ஏரிக்கு வரும் என்றும் நம்பப்படுகிறது.

🐊இதில் என்ன விசேஷம் என்றால், பொதுவாக முதலை இனமானது அசைவ வகையைச் சார்ந்தது. ஆனால், இந்த முதலையோ குளத்தில் உள்ள மீன்களைக்கூட சாப்பிடாது.

🐊 இந்த முதலைக்கு கோயில் குருக்கள், உச்சிக்கால பூஜையின் போது சாதம் வெல்லம் கலந்த உருண்டைகளை சாப்பிடக் கொடுக்கிறார். இதற்கு முசலி நைவேத்யா என்கிறார்கள்.

🐊 கோயில் குளத்தில் குளிக்க வரும் பக்தர்கள் மற்றும் குருக்கள்களை இதுவரை பபியா தாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

🐊 சரியாக பிரசாதம் வழங்கப்படும் வேளைகளில் இந்த முதலை குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட முதலையை இந்தக் குளத்தில் எவரும் கண்டதில்லை.

🐊 ஒரு முதலை இறந்து விடுமேயானால், மறுதினமே இன்னொரு முதலை தென்படுமாம். அருகில் வேறு ஆறுகளோ, குளங்களோ இல்லாத நிலையில் எப்படி இந்தக் கோயில் குளத்திற்குள் முதலை வந்தது என்பது எவருக்கும் புதியாத புதிர் என்கிறார்கள்!🐊

Thursday, 23 August 2018

*#ஸ்ரீராமகிருஷ்ணரின்_உபதேசங்கள்*

*கடவுள் எல்லா உயிரிலும் நிறைந்திருக்கிறார், எறும்புவரை உள்ள உயிரினங்களில் இருக்கிறார்.ஆனால் சக்தி வெளிப்பாட்டில் வேறுபாடு உள்ளது.யாரை பலர் மதிக்கிறார்களோ போற்றுகிறார்களோ அவர்களிடம் கடவுளின் சக்தி அதிகம் வெளிப்பட்டுள்ளது.*

*புத்தகம் படிப்பது கடவுளை அடைவதற்கான வழியை தெரிந்துகொள்வதற்காகத்தான். வெறுப் படிப்பினால் எந்த பயனும் இல்லை. படித்து முடித்தபிறகு இறைவனை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.*

*அரசமரத்தை வெட்டினால் அது மறுபடியும் தளிர்விடும். அதேபோல் ஞானிகளுக்கு சமாதிநிலையில் நான்-உணர்வு போய்விடுகிறது. சமாதி கலைந்த பிறகு மறுபடியும் வந்துவிடுகிறது.அதனால் தான் விஞ்ஞானி பக்தி நெறியை பின்பற்றி வாழ்கிறான்.*

*மரணத்தைப்பற்றி எப்போதும் சிந்தித்துவர வேண்டும். மரணத்திற்கு பிறகு எதுவும் இருக்காது என்பதை மனத்தில் பதியவைக்க வேண்டும். வேலையின் காரணமாக மக்கள் நகரங்களுக்கு செல்வது போல் நாமும் சில கடமைகளை செய்வதற்காக பிறந்திருக்கிறோம்.*

*பணக்காரனின் ஒரு தோட்டத்தில் வேலைக்காரன் வேலை செய்கிறான்.   இது யாருடைய தோட்டம் என்று யாராவது கேட்டால். இது எங்களுடைய தோட்டம் என்று  சொல்வான். ஆனால் வேலை போய்விட்டால் அங்கிருந்து ஒரு தகரட்டபாவை கூட வெளியே கொண்டு வரமுடியாது. அதேபோல் வாழும்போது சம்பாதித்தவை அனைத்தும் என்னுடையது என்கிறோம்.மரணத்திற்கு பின் எதுவும் எடுத்து செல்ல முடியாது.*

*வேதம், புராணம்,தந்திரம்,ஆறுதரிசனங்கள் இவைகளை பற்றி வாயினால் விவரிக்கலாம்.அதனால் அவைகள் எச்சிலாகிவிட்டன. ஆனால் பிரம்மத்தை வாயினால் விவரிக்க முடியாது. அதனால் அது ஒன்றுமட்டும் எச்சிலாகவில்லை.பிரம்மத்தை நேரில் உணர்ந்தவர்கள் அதை குறித்து வாயால் விவரிக்க முடியவில்லை.*

*உலகியல் ஆசையின் சுவடு இருந்தால்கூட பிரம்மஞானம் கிடைக்காது.பார்ப்பது,கேட்பது,சுவைப்பது,தொடுவது போன்றவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருந்தால்தான் பிரம்மஞானம் கிடைக்கும்.ரிஷிகள் தனிமையில் அமர்ந்து நாள் முழுவதும் தியானம்செய்வார்கள்.அதானால் தான் அவர்களால் பிரம்மஞானம் பெற முடிந்தது.*

*கலியுகத்தில் மனிதன் உணவை நம்பி இருக்கிறான். உணவை சார்ந்து இருக்கும்வரை உடல் உணர்வு நீங்காது. உடல் உணர்வு உள்ளவர்கள் நானே பிரம்மம் என்று சொல்வது நல்லதல்ல. உடல் உணர்வு யாருக்கு இல்லையோ அவர்கள் தான் நானே அது என்று சொல்ல தகுதியானவர்கள்.*

*உடல் பிரம்மமல்ல, மனம் பிரம்மமல்ல,இந்த உலகம் பிரம்மல்ல இதுவல்ல,இதுவல்ல என்று ஆராய்ந்து பிரம்மத்தை அறிந்த பின். அந்த பிரம்மமே உடலாகவும்,மனமாகவும்,இந்த உலகமாகவும் ஆகியிருப்பதை காண்கிறான்.பிரம்மத்தை அறிந்தவன் ஞானி. அந்த பிரம்மமே அனைத்துமாக ஆகியிருப்பதை காண்பவன் விஞ்ஞானி.*

*உங்களுக்கு ஒரு மகாமந்திரம் சொல்கிறேன் கேளுங்கள். எல்லாவற்றையும் துறந்து கடவுளை நம்பி இருங்கள். அவரே உண்மை,மற்ற அனைத்தும் நிலையற்றவை. அவரை அறியவில்லை என்றால் மற்ற அனைத்தும் இருந்தும் வீண். அவரை அறியாமல் வாழ்வதுவீண். இதுதான் மகாமந்திரம்.*

*கழுகுகள் மிக உயரத்தில் பறக்கின்றன. ஆனால் அதன் பார்வை கீழே உள்ள அழுகிய பிணங்களை தேடுவதிலேயே இருக்கும். அதேபோல் மத கருத்துக்களை பேசும் பண்டிதர்கள் பார்வை எல்லாம் காமத்தின்மீதும் பணத்தின்மீதும்தான் இருக்கும்.*

*விளக்கின் வெளிச்சத்தில் ஒருவன் பகவானைபற்றிய புத்தகத்தை படிக்கிறான்.மற்றொருவன் திருட்டுகையெழுத்து போடுகிறான்.சூரியன் நல்லவனுக்கும் ஒளி தருகிறது தீயவர்களுக்கும் ஒளி தருகிறது. அதேபோல் பிரம்மம்(உருவமற்ற இறைவன்) நல்லவர்களிடமும் தீயவர்களிடமும் அனைவரிடமும் உள்ளார்.*

*பாம்பின் வாயில் விசம் இருக்கிறது. பாம்பு ஒருவனைக் கடித்தால் அவன் இறந்துவிடுவான் ஆனால் பாம்பை விசம் பாதிக்காது. அதேபோல் இந்த உலகத்தில் உள்ள துன்பம் பாவம் அமைதியின்மை போன்றவற்றால் பிரம்மம் பாதிக்கப்படுவதில்லை. உயிர்கள்தான் இவற்றால் பாதிக்கப்படுகின்றன.*

*மேற்கு இந்தியாவில் பெண்கள் குடத்தை தலையில் சுமந்தபடி வெகுதொலைவு நடந்து செல்வார்கள்.அவர்கள் மனம் முழுவதும் குடத்தின்மீதே இருக்கும். அதேவேளையில் சிரித்துபேசியபடியே நடப்பார்கள். அதேபோல் இல்லறத்தில் வாழ்பவர்கள் இறைவனை தலையில் தாங்கிய வண்ணம் வாழவேண்டும்.மனம்முழுவதும் இறைவனிடம் இருக்கவேண்டும்.இல்லற கடமைகளையும் செய்ய வேண்டும்.*

*நேரான வழியில் செல்லாமல் சுற்றிவழைத்து செல்லும் வழியில் சென்றால், சென்று நேரவேண்டிய இடத்தை அடைவது காலதாமதமாகலாம்.* *அதேபோல் இறைவனைப் பற்றி குருவிடமிருந்து கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும்.*
*இல்லாவிட்டால் முக்தி கிடைக்க காலதாமதம் ஆகலாம். பல பிறவிகள்கூட காத்திருக்கவேண்டிவரலாம்.*
*பெரிய மரக்கட்டை தானும் மிதக்கும், அதன்மேல் ஏறிக்கொள்பவர்களையும் தாங்கிக்கொள்ளும்.*

*குரு என்பவர் பெரிய மரக்கட்டை போன்றவர்கள் .உலகை வழிநடத்துவதற்காக ஒவ்வொரு யுகத்திலும் இறைவனே குருவாக அவதரிக்கிறார்..*

*எல்லாம் இறைவன் செயல். மனிதன் என்பவன் இறைவன் கையில் ஒரு கருவி. மனிதன் வீடு இறைவன் அதற்குள் குடியிருப்பவன். மனிதன் எந்திரம் இறைவன் அதை இயக்குபவர். இறைவன் எப்படி பேச வைக்கிறானோ அதேபோல் மனிதன் பேசுகிறான் என்று உணர்பவன் ஞானி. இந்த அறிவு வந்தால் அது தான் ஞானம்.*


*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*   

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!* 

                        *#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_நட்பே.*

 *#வாழ்க_வளமுடன்.*
‬: சித்தர்கள் எத்தனை கனிவான மனம் கொண்டவர்கள் என்பதை ஒரு சிலரே அறிவர்.  அதை அனுபவித்துப் பார்ப்பதற்கே மிகப் பெரிய புண்ணியம் செய்திருக்கவேண்டும்.  நம் கர்மாவை பார்த்து, நம் தகுதியை பார்த்து, நம் எதிர்கால நடவடிக்கைகள் "தெய்வ நம்பிக்கையை" சார்ந்து இருக்குமா என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்த பின்தான் அவர்கள் அருள் நமக்கு விதிக்கப்படும். எல்லாம் அவன் செயல் என்பது நிதர்சனமாயினும், பல நேரங்களில் மனிதர்களான நாம் அதையும் மறந்து விடுகிறோம் என்பதே உண்மை.  ஏன்?  நம் வாழ்க்கையில் நம் கண் முன் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் காரணம்.  சோதனை இல்லாமல் ஒருபோதும் சித்தர் அருள் நமக்கு கிடைக்காது.  அந்த சோதனை நடக்கும் போது, நாம் எப்படி நடந்து கொள்கிறோம், அவர்கள் பரீட்சையில் நாம் தேறுகிறோமா என்பதெல்லாம் பொறுத்து அவர்கள் அருள் நமக்கு கிடைக்கும்.  உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம்.

அவன் வீட்டை விட்டு வெளியேறி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.  வியாபாரத்தில் பெருத்த நஷ்டம்.  கடன் சுமை தலைக்கு மேலே உயர, குடும்பத்தை, அதன் தினப் பிரதி விஷயங்களை சந்திக்ககூட சக்தி இன்றி வாழ்க்கையே கை விட்டு போய், என்ன செய்வதென்று அறியாமல் நடந்தான்.  திடீரென்று ஏதேனும் மலை சார்ந்த இடத்திற்கு சென்று காட்டுக்குள் போய் "தற்கொலை" செய்துகொள்ளலாம் என்று தோன்றவே, மலை ஏறத் தொடங்கினான்.  அவன் சென்று சேர்ந்த இடம் "பொதிகை மலை" அடிவாரம்.

கைவசம் சாப்பிட எதுவும் இல்லாமல், பசியும் அசதியும் ஒன்று சேர, வனத்தில்  ஒரு வேப்பிலை மரத்தின் அடியில் அமர்ந்து உறங்கிப் போனான்.

நன்றாக உறங்கியவன், ஏதோ சப்தம் கேட்டு விழித்துப் பார்க்க, தன் முன்னே ஒரு மண் குடுவையில் குடிக்க நீரும், ஒரு இலையில் சுற்றப்பட்ட உணவும் இருப்பதை கண்டான்.  அவனுக்கோ மிகுந்த ஆச்சரியம்.  மனிதர் வாடையே இல்லாத இந்த வனத்தில் நான் பசியுடன் இருக்கிறேன் என்று உணர்ந்து யார் உண்ண உணவும், குடிக்க நீரும் யார் கொண்டு வைத்திருப்பார்கள்?  என்ன ஆனாலும் யோசிக்க அவன் மனம் நிற்கவில்லை.  அவற்றை எடுத்து உண்டான்.

இந்த இடத்தில் தங்கி இருப்பது தான் உசிதம் என உணர்ந்து, "இங்கேயே தங்கிவிடுவோம்!  உணவு கிடைத்தால் உண்போம்! இல்லையேல், இறைவனை த்யானித்து தவத்தில் மூழ்கிவிடுவோம்" என்று தீர்மானித்தான்.  தற்காலிகமாக "தற்கொலை" எண்ணம் விலகி நின்றது.

மூன்று நாட்கள் கழிந்தது.  அவனுக்கு பசிக்கவும் இல்லை, யாரும் உண்ண உணவு கொண்டு தரவும் இல்லை.  நான்காவது நாள் அவனுக்குள் பசி உணரத் தொடங்க, த்யானத்திலிருந்து வெளியே வந்து கண் விழித்துப் பார்க்க, அவன் முன்னே உணவும் நீரும் இருந்தது.  மிகுந்த ஆச்சரியத்துடன் அதை உண்ணத் தொடங்கினான். 

உண்ணும் போதே "யார் இத்தனை கருணையுடன் நான் இருக்கும் இடம் தேடி வந்து உணவை அளிப்பது?  எப்படி அவர்களுக்கு நான் இங்கு பசியுடன் இருக்கிறேன் என்று தெரிந்தது?"  என்று யோசித்தான்.

அந்த நிமிடத்தில் காட்டின் ஒரு மூலையில் இருந்து சன்னமாக வார்த்தைகள் காற்றில் மிதந்து வந்தது.

"மூடனே!  தகுதியில்லாத ஆசைகளை வளர்த்துக் கொண்டு, அளவுக்கு மீறி வியாபாரம் செய்ய ஆசைப்பட்டு, கடன் வாங்கி குவித்தாய்.  வாழ்க்கை கட்டுப்பாட்டுக்கு மேலே சென்றதும், உன்னை நம்பி இருந்த குடும்பத்தை தவிக்கவிட்டு, இங்கு வந்து தற்கொலை செய்துகொள்ள வந்தாய்.  இங்கிருந்து சென்று விடு.  உன் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது.  இப்பொழுதே போ!" என்று உத்தரவு வந்தது.

ஆனால், அவன், தன் கடன் சுமைகளை மனதில் வைத்து "பணம் கிடைக்க வேண்டும்.  அது அன்றி இங்கிருந்து நகருவதில்லை.  இல்லையேல் இங்கேயே இருந்து மீதம் இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து, முடிவை எதிர்கொள்வேன்" என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்தான்.

 அசரீரி மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.  அவன் அந்த வார்த்தைகளை சட்டை செய்வதாகவே இல்லை.

த்யானத்தை தொடர்ந்தான்.

மூன்று நாட்கள் சென்றது.  எந்த உணவும் கிடைக்கவில்லை.  அவனுக்கும் பசிக்கவில்லை.  அந்த அசரீரி மட்டும் விட்டு விட்டு அவனை "திரும்பிப் போ" என்று சொல்லிக் கொண்டிருந்தது. 

இனி எதிர்பார்த்து காத்திருப்பதில் பயனில்லை என்று நினைத்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தீர்மானித்து அருகிலிருந்த உயரமான குன்றிலிருந்து கீழே குதித்தான்.

வேகமாக பூமியை நோக்கி வந்த அவன் தன் சுய நினைவை இழந்தான்.

நினைவு வந்து முழித்துப் பார்க்க, அவனை ஒரு சித்தர் தன கைகளில் மேகக்கூட்டத்திற் கிடையில்  சுமந்து செல்வதை உணர்ந்தான்.  மிகுந்த பசியின் காரணமாக மீண்டும் நினைவிழந்தான்.

தன் முகத்தில் நீர் தெளிக்கப்படுவதை உணர்ந்து மயக்கம் தெளிந்து பார்க்க அங்கே ஒரு சித்தர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் அவனை கருணையுடன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான்.  அவர் அவனுக்கு தேனும், பழங்களும் கொடுத்து பசியாற்றியபின் பேசத்தொடங்கினார்.

"அப்பனே!  உன் பிரச்சினைகளுக்கான விமோசன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.  திரும்பி உன் வீட்டிற்கு செல்.  அங்கே அனைத்தும் உனக்கு புரியும்.  தற்கொலை செய்கிற உனது திடமான எண்ணத்தை கை விடு.  இது புனிதமான மலை.  இங்கே தவறை செய்து இந்த மலையை அசுத்தமாக்காதே! உனக்கு இன்னும் விதி உள்ளது.  நல்ல முறையில் நல்லது செய்து வாழ்ந்து வா.  எனது ஆசிகள் உனக்கு" என்றார்.

நடப்பதெல்லாம் கனவா, நனவா என்று புரியவில்லை அவனுக்கு.

"சாமி! நீங்க யாரு!  உங்க பேர் என்ன?  எதுக்காக என்னை காப்பாத்தினீங்க?"

"நான் கோரக்கர்..  தலையாய சித்தர் அகத்தியரின் உத்தரவால் உன்னை காப்பாற்றி கரை ஏற்றினேன். நீ புண்ணியவான்" என்று கூறி அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிரித்தபடி நடந்து சென்று மறைந்து போனார்.

என்னவோ கேட்க நினைத்தவன் ஒரு அடி எடுத்து வைக்க, காலில் ஏதோ ஒன்று தட்டியது.

குனிந்து கீழே பார்த்தவனுக்கு ஒரு மண் பானை கண்ணில் பட்டது.  மெதுவாக அதை திறந்து பார்த்தவன் அசந்து போனான்.

அது நிறைய பணம் இருந்தது.  தனக்கென சித்தனால் விதிக்கப்பட்டது என்று உணர்ந்து,   அதை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவனுக்கு இன்னொரு அதிசயம் காத்திருந்தது.

அவன் வாங்கியிருந்த கடன் அனைத்தையும் யாரோ ஒரு முன் பின் தெரியாத ஒருவர் வந்து அடைத்து தீர்த்துவிட்டிருந்தார்.

அனைத்தையும் அப்போது உணர்ந்த அவன் அன்று முதல் நேர் வழியில் சென்று, நிறைய சம்பாதித்து, ஆன்மீகத்தில் பல நிலைகளை அடைந்து, இன்றும் சித்தர் காட்டிய வழியில் செல்கிறான்.

அதீத ஆசைகளால் அலைக்கழிந்திருந்தாலும், சித்தனால் அருளப் பெறுகிற அளவுக்கு அத்தனை புண்ணியம் செய்தவனா நான் என்று ஒருநாள் த்யானத்தில் சித்தரிடம் கேள்வி கேட்க

"ஆம்! நீ புண்ணியம் செய்தவன் தான்" என்று பதில் கூறினார் கோரக்கர்.

இன்றும் சித்தர்கள் நம்மிடை இருந்து கொண்டு, ஆபத்து காலத்தில் நம்மை கை தூக்கி விடுகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.

குருவே சரணம்...

ஸ்ரீ ரமண பாதம்

Sunday, 19 August 2018

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்
-----------------------------------
கடவுள் எல்லா உயிரிலும் நிறைந்திருக்கிறார், எறும்புவரை உள்ள உயிரினங்களில் இருக்கிறார்.ஆனால் சக்தி வெளிப்பாட்டில் வேறுபாடு உள்ளது.யாரை பலர் மதிக்கிறார்களோ போற்றுகிறார்களோ அவர்களிடம் கடவுளின் சக்தி அதிகம் வெளிப்பட்டுள்ளது.

புத்தகம் படிப்பது கடவுளை அடைவதற்கான வழியை தெரிந்துகொள்வதற்காகத்தான். வெறுப் படிப்பினால் எந்த பயனும் இல்லை. படித்து முடித்தபிறகு இறைவனை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்
-
அரசமரத்தை வெட்டினால் அது மறுபடியும் தளிர்விடும். அதேபோல் ஞானிகளுக்கு சமாதிநிலையில் நான்-உணர்வு போய்விடுகிறது. சமாதி கலைந்த பிறகு மறுபடியும் வந்துவிடுகிறது.அதனால் தான் விஞ்ஞானி பக்தி நெறியை பின்பற்றி வாழ்கிறான்.

மரணத்தைப்பற்றி எப்போதும் சிந்தித்துவர வேண்டும். மரணத்திற்கு பிறகு எதுவும் இருக்காது என்பதை மனத்தில் பதியவைக்க வேண்டும். வேலையின் காரணமாக மக்கள் நகரங்களுக்கு செல்வது போல் நாமும் சில கடமைகளை செய்வதற்காக பிறந்திருக்கிறோம்.

பணக்காரனின் ஒரு தோட்டத்தில் வேலைக்காரன் வேலை செய்கிறான்.   இது யாருடைய தோட்டம் என்று யாராவது கேட்டால். இது எங்களுடைய தோட்டம் என்று  சொல்வான். ஆனால் வேலை போய்விட்டால் அங்கிருந்து ஒரு தகரட்டபாவை கூட வெளியே கொண்டு வரமுடியாது. அதேபோல் வாழும்போது சம்பாதித்தவை அனைத்தும் என்னுடையது என்கிறோம்.மரணத்திற்கு பின் எதுவும் எடுத்து செல்ல முடியாது
---
வேதம், புராணம்,தந்திரம்,ஆறுதரிசனங்கள் இவைகளை பற்றி வாயினால் விவரிக்கலாம்.அதனால் அவைகள் எச்சிலாகிவிட்டன. ஆனால் பிரம்மத்தை வாயினால் விவரிக்க முடியாது. அதனால் அது ஒன்றுமட்டும் எச்சிலாகவில்லை.பிரம்மத்தை நேரில் உணர்ந்தவர்கள் அதை குறித்து வாயால் விவரிக்க முடியவில்லை.
----
உலகியல் ஆசையின் சுவடு இருந்தால்கூட பிரம்மஞானம் கிடைக்காது.பார்ப்பது,கேட்பது,சுவைப்பது,தொடுவது போன்றவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருந்தால்தான் பிரம்மஞானம் கிடைக்கும்.ரிஷிகள் தனிமையில் அமர்ந்து நாள் முழுவதும் தியானம்செய்வார்கள்.அதானால் தான் அவர்களால் பிரம்மஞானம் பெற முடிந்தது.
-------
கலியுகத்தில் மனிதன் உணவை நம்பி இருக்கிறான். உணவை சார்ந்து இருக்கும்வரை உடல் உணர்வு நீங்காது. உடல் உணர்வு உள்ளவர்கள் நானே பிரம்மம் என்று சொல்வது நல்லதல்ல. உடல் உணர்வு யாருக்கு இல்லையோ அவர்கள் தான் நானே அது என்று சொல்ல தகுதியானவர்கள்.
----
உடல் பிரம்மமல்ல, மனம் பிரம்மமல்ல,இந்த உலகம் பிரம்மல்ல இதுவல்ல,இதுவல்ல என்று ஆராய்ந்து பிரம்மத்தை அறிந்த பின். அந்த பிரம்மமே உடலாகவும்,மனமாகவும்,இந்த உலகமாகவும் ஆகியிருப்பதை காண்கிறான்.பிரம்மத்தை அறிந்தவன் ஞானி. அந்த பிரம்மமே அனைத்துமாக ஆகியிருப்பதை காண்பவன் விஞ்ஞானி.
---------
உங்களுக்கு ஒரு மகாமந்திரம் சொல்கிறேன் கேளுங்கள். எல்லாவற்றையும் துறந்து கடவுளை நம்பி இருங்கள். அவரே உண்மை,மற்ற அனைத்தும் நிலையற்றவை. அவரை அறியவில்லை என்றால் மற்ற அனைத்தும் இருந்தும் வீண். அவரை அறியாமல் வாழ்வதுவீண். இதுதான் மகாமந்திரம்.
-
கழுகுகள் மிக உயரத்தில் பறக்கின்றன. ஆனால் அதன் பார்வை கீழே உள்ள அழுகிய பிணங்களை தேடுவதிலேயே இருக்கும். அதேபோல் மத கருத்துக்களை பேசும் பண்டிதர்கள் பார்வை எல்லாம் காமத்தின்மீதும் பணத்தின்மீதும்தான் இருக்கும்.
-
விளக்கின் வெளிச்சத்தில் ஒருவன் பகவானைபற்றிய புத்தகத்தை படிக்கிறான்.மற்றொருவன் திருட்டுகையெழுத்து போடுகிறான்.சூரியன் நல்லவனுக்கும் ஒளி தருகிறது தீயவர்களுக்கும் ஒளி தருகிறது. அதேபோல் பிரம்மம்(உருவமற்ற இறைவன்) நல்லவர்களிடமும் தீயவர்களிடமும் அனைவரிடமும் உள்ளார்
-
பாம்பின் வாயில் விசம் இருக்கிறது. பாம்பு ஒருவனைக் கடித்தால் அவன் இறந்துவிடுவான் ஆனால் பாம்பை விசம் பாதிக்காது. அதேபோல் இந்த உலகத்தில் உள்ள துன்பம் பாவம் அமைதியின்மை போன்றவற்றால் பிரம்மம் பாதிக்கப்படுவதில்லை. உயிர்கள்தான் இவற்றால் பாதிக்கப்படுகின்றன.
-
மேற்கு இந்தியாவில் பெண்கள் குடத்தை தலையில் சுமந்தபடி வெகுதொலைவு நடந்து செல்வார்கள்.அவர்கள் மனம் முழுவதும் குடத்தின்மீதே இருக்கும். அதேவேளையில் சிரித்துபேசியபடியே நடப்பார்கள். அதேபோல் இல்லறத்தில் வாழ்பவர்கள் இறைவனை தலையில் தாங்கிய வண்ணம் வாழவேண்டும்.மனம்முழுவதும் இறைவனிடம் இருக்கவேண்டும்.இல்லற கடமைகளையும் செய்ய வேண்டும்.
-
நேரான வழியில் செல்லாமல் சுற்றிவழைத்து செல்லும் வழியில் சென்றால், சென்று நேரவேண்டிய இடத்தை அடைவது காலதாமதமாகலாம். அதேபோல் இறைவனைப் பற்றி குருவிடமிருந்து கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும். இல்லாவிட்டால் முக்தி கிடைக்க காலதாமதம் ஆகலாம். பல பிறவிகள்கூட காத்திருக்கவேண்டிவரலாம்
பெரிய மரக்கட்டை தானும் மிதக்கும், அதன்மேல் ஏறிக்கொள்பவர்களையும் தாங்கிக்கொள்ளும் .
--
குரு என்பவர் பெரிய மரக்கட்டை போன்றவர்கள் .உலகை வழிநடத்துவதற்காக ஒவ்வொரு யுகத்திலும் இறைவனே குருவாக அவதரிக்கிறார்..
--
எல்லாம் இறைவன் செயல். மனிதன் என்பவன் இறைவன் கையில் ஒரு கருவி. மனிதன் வீடு இறைவன் அதற்குள் குடியிருப்பவன். மனிதன் எந்திரம் இறைவன் அதை இயக்குபவர். இறைவன் எப்படி பேச வைக்கிறானோ அதேபோல் மனிதன் பேசுகிறான் என்று உணர்பவன் ஞானி. இந்த அறிவு வந்தால் அது தான் ஞானம்.
-
⁉️சாளக்கிராமம் என்றால் என்ன ⁉️

பண்டைய  இந்தியாவில்  தலை  சிறந்து  விளங்கிய  ”அவந்தி ”  தேசமே  இன்றைய   நேபாளம் .

இங்கு  இமயமலையின் அடிவாரத்தை  ஒட்டினார்போல “ஹரிபர்வதம்”  என்னுமோர்  மலை  உள்ளது .இங்கு  சங்கர தீர்த்தம்  என்னும் பகுதியில்  ” கண்டகி ” நதி  உற்பத்தியாகின்றது .

இந்தப்பகுதிதான்  ”சாளக்கிராமம்”‘  என்று  அழைக்கப்படுகிறது . இந்த  ” ஹரி ”  ஷேத்திரத்தில்  உள்ள  சகல  கற்களிலும்,  விஷ்ணுவின்  சகல அம்சங்களும் பொருந்திய  சாளக்கிராம மூர்த்திகள்  புண்ணியகாலங்களில்  தோன்றுவதாகக் கூறப்படுகிறது .

சாளக்கிராமம்  என்பது  கண்டகி நதியில்  உற்பத்தியாகின்ற ஒருவகையான  அழகிய  தெய்வீகம்  நிறைந்த  கற்களாகும். இவைகள்  நத்தைக்கூடு ,  சங்கு ,  போன்ற  பலவடிவங்களிலும் , பல வண்ணங்களிலும்  கிடைக்கின்றன .

மஹாவிஷ்ணு தாமாகவே  ,   தங்கமயமான  ஒளியுடன்  திகழும்  ” வஜ்ரகிரீடம் ”   என்ற  பூச்சியின்  வடிவம்  கொண்டு , கற்களை ( சாளக்கிராமம் ) குடைந்து  ,  அதன்  கர்பத்தை  அடைந்து , அங்கு ,  ரீங்காரமான  சப்தத்தில் ,  இருந்து  கொண்டே தன்  முகத்தினால்  ,பலவிதமான  சுருள்  ரேகையுடன்  கூடிய  பல சக்கரங்களை  வரைந்து  ,  பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை– ( அதாவது  தனது  அவதார  ரூபங்களை )  பல வடிவங்களில்  விளையாட்டாகவே  வரைந்து வெகுகாலத்திற்கு  அங்கேயே  இருந்து  பின்  மறைந்து விடுவதாகக்  கூறப்படுகிறது.

இப்பேர்பட்ட  வடிவங்களே  நாம் சேவிப்பதற்கு  உகந்தவையாகும் .இவைகளில்  ஸ்ரீமந்  நாரயணின்  ஜீவருபம் கலந்து இருப்பதாக  ஐதீகம் .சாளக்கிராமங்களின் வண்ணங்களுக்கேற்ப  அவற்றின்  பூஜா பலன்களும் மாறுபடுகின்றனவாம்....

இதன் அமைப்பு மற்றும் நிறங்களைப் பொறுத்து இதன் பலன்களும் வேறுபடுகின்றன.

1. முற்றிலும் சிவப்பு நிறமாக இருக்கும் சாளக்கிராமம் ‘நரசிம்மக்கல்' எனப்படுகிறது. இதை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.

2. சக்கரம் போன்ற வடிவத்தில், கறுப்பாக இருந்தால் ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் பெருகும். குடும்பம் சிறக்கும்.

3. முன்பகுதியில் பாம்பு போன்ற தோற்றமோ, பொன்னிறத்தில் ரேகைகள் இருந்தாலோ நலங்கள் வந்து சேரும். இக்கல்லை ‘வாமதேவன் கல்' என்பர்.

4. இடப்புறம் பச்சை நிறத்தில் இருக்கும் கல் பாவத்தைப் போக்கக் கூடியது.

5. வட்டவடிவமான சாளக்கிராமம் செல்வம் தரும்.

6. குடைபோன்ற வடிவமுள்ள கல்லை வணங்கினால் நாடாளும் பாக்கியம் கிடைக்கும்.

7. சாளக்கிராமத்தில் சக்கரம் போன்ற அமைப்பு அல்லது பாம்புகளின் தலையுடன், பல்வேறு நிறங்களில் காணப்பட்டால் அது ‘லட்சுமி காந்தம்' எனப்படுகிறது. இக்கல்லைப் பூஜை செய்து வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.

8. சாளக்கிராமம் உடைந்ததாக இருப்பினும் அதனைப் பயன்படுத்தலாம். இதனால் எவ்விதக் கெடுதலுமில்லை.

9. சப்பையான வடிவில் உள்ள சாளக்கிராமம் துன்பம் தரும்.

10. சாளக்கிராமக்கல் இடப்புறம் கருப்பு, வலப்புறம் பழுப்பு நிறத்துடன் இருந்தால் வறுமை வரும்.

சாளக்கிராமத்தில்  தெய்வீக  சக்தி  இருப்பது  மட்டுமின்றி ,  அவற்றில்  14  உலோகங்கள்
இருப்பதாகக்  கூறப்படுகிறது .சாளக்கிராமம்  விற்பனை   செய்வதை   வாங்குதல்   கூடாது .பிறரால்  பூஜிக்கப்பட்ட  சாளக்கிராமங்களை பெரியவர்களிடமிருந்தும் ,  சாஸ்த்திர  ஞானம் பெற்றவர்களிடமிருந்தும்   வாங்குதல்  நன்று .

1 . நீல  நிறம்—செல்வம் , சுகம் ( ஸ்ரீ  கிருஷ்ண  ஷேத்திரம் )
2 . பச்சை—பலம் , தைரியம்  ( ஸ்ரீ  நாரயண ஷேத்திரம் )
3 .வெண்மை—ஞானம் ,  பக்தி ,  மோட்சம் (வாசுதேவ  ஷேத்திரம் )
4  .கருப்பு—புகழ் , பெருமை ( விஷ்ணு  ஷேத்திரம் )
5 .புகை நிறம்—துக்கம் , தரித்திரம்
6 .மஞ்சள் நிறம்—  வாமன  ஷேத்திரம்
7 . பசும்பொன் ( அ ) மஞ்சள் கலந்த  சிகப்பு  நிறம்—ஸ்ரீ  நரசிம்ம  ஷேத்திரம்

சாளக்கிராமத்தை   பால்  ( அ )  அரிசியின்  மீது  வைத்திருந்து  பின்னர்   எடுத்துப் பார்த்தால் ,  அதன்  எடை  முன்பு இருந்ததை  விடக்  கூடுதலாக  இருக்கும் .

துண்டிக்கப்பட்டிருந்தாலும்  ( அ )  விரிந்து  போனதாய்  இருந்தாலும்

 சாளக்கிராமம்   எங்கு  இருக்கிறதோ  அங்கு  தோசமில்லை .

!!🤚ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து 🤚!!

Saturday, 18 August 2018

இன்று சனிக்கிழமை  திருநெல்வேலி நவ கைலாயம் பாபநாசம், சேரன்மகாதேவி கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம்
சிவபெருமானை வழிபட்டு அனைவரும் வாழ்வில் மேம்பட அருள  வேண்டுகிறேன். காலை வணக்கம்.
தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவவாலயங்கள் உள்ள ஊரைக் குறிப்பதாகும். இவை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது  இந்த தலங்களைத் தரிசித்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

இந்தத் தலங்களை தரிசனம் செய்ய மார்கழி மாதங்களில் தமிழக அரசே சிறப்பு பேருந்தினை ஏற்பாடு செய்கிறது. காலையில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பி நவகைலாயங்களை தரிசனம் செய்துவிட்டு இரவுக்குள் திருநெல்வேலிக்கு திரும்படி ஏற்பாடு செய்யப்படுகிறது.

அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது

நவகைலாயங்கள் தொகு
பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம் ஆகிய ஊர்களை நவகைலாயங்கள் என்று அழைக்கின்றனர். இவற்றில் முதல் மூன்று தலங்களை மேல்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று தலங்களை நடுகைலாயங்கள் என்றும், இறுதி மூன்றினை கீழ்க்கைலாயங்கள் என்றும் வகைப்படுத்துகின்றனர்

இந்த நவகைலாயத் தளங்களில் நவக்கிரங்களின் வழிபாடுகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தத் தலங்களில் நவக்கிரங்கள் வழிபட்டுள்ளன என்று கூறப்படுகிறது
அஞ்சுவதும்_அடிபணிவதும்
#ஈசன்_ஒருவனுக்கே. இது சரியா ??

அச்சம் என்ற உணர்வை நீக்கி, அரவணைப்பு என்று உணர்த்தி, அஞ்சேல் என்ற துணிவும் அருள்வதே இறைவன்,

அச்சம் என்ற உணர்வு ஓர் சிறு துளி இருக்கும் என்றாலும், ஒன்றால், சமர்ப்பணம், காதல், பரிபுரனத்துவம் எப்படி நடைபெறும்,

அஞ்சவைப்பதும், அடிபணியவைப்பதும், படைப்புகள் குணமே, அது எப்படி படைத்தவனை குறிக்கும்,

நம் விட்டிலேயே எடுத்துகொள்வோம் அப்பாவை காட்டி பயமுறுத்தி நம்மை வளர்ப்பதாலேயே நம் தந்தையோடு ஆத்மார்த்தமாக ஒன்றுவது இல்லை, அந்த ஒன்றால் தாயிடம் இருப்பது போல தந்தையிடம் இருப்பது இல்லை, காரணம் அச்சம் என்ற உணர்வின் பிரதிபலிப்பு !!

இதே போல இறைவன் கண்ணை குத்தும், உன்னை சும்மாவிடாது, அப்படி இப்படி என்று பயமுறுத்தியே, நம்மோடு இரண்டற கலந்த இறைவனை பிரித்து பார்த்து, நாம் தவறு என்று செய்வதில் இறைவனுக்கு இடமில்லை என்று பூஜை அறையில் துணிகொண்டு மூடுவது, கதவை சாற்றிவிட்டு, உங்கள் இஷ்டம் போல இருப்பது,

உங்களை இப்படி, இங்கே, இருக்கவைப்பது, வைத்துக்கொண்டு இருப்பது யார் ?

இந்த அச்சம் என்ற உணர்வு இறைவனை பிரித்து பார்க்கவே வைக்கும், அவனின்றி ஏதுமில்லை என்று வாய் அளவே சொல்ல வைக்கும் !!

அவனின்றி ஏதுமில்லை என்று அனுபவித்து எதிலும், எப்போதும் வாழவைக்குமா ??

அஞ்சேல் ( அச்சபடாதே ) என்று அருளியவாறு யார்பெறுவார் அச்சோவே !! என்று அனைத்துமாய் இறைவனை அனுபவித்தவர்கள் வாக்கு !!

அச்சம் நீக்கவே இறைவன், அஞ்சவேண்டாம் உன்னுள் நானே என்று இருக்கிறேன், என்று தெளிவு படுத்துவதே இறைவனை அனுபவிக்கும் வழிபாடு !!
எனவே அச்சத்தை ஒருபோதும் இறைவனோடு - சிவத்தோடு இணைத்து நினைக்ககூட செய்யாதிர்கள் !!

அடிபணிவது என்று தனித்து ஏதும் இல்லை, சிவமாகி பிரபஞ்சத்தில் இருக்கும் யாவும் அவனுள் இருப்பதே, இதில் நீ அடிபனியவேண்டும் என்று ஒரு போதும் இறைவன் நினைப்பது இல்லை, அனுபவித்து வாழவேண்டும் என்றே வாழ்விக்கிறான் !!

ஆப்படியே அடிபணியாது வாழ்ந்த காலம் எத்தனை ?? அடிபணியாது காக்கப்பட்ட பிறவிகள் எத்தனை ?? அதையெல்லாம் கடந்துதானே இப்போது இருக்கிறாய், அப்போதே நீ அடிபணியவில்லை என்று உன்னை அழித்து இருக்க வேண்டாமா இறைவன் !!

உன்னை யாரிடமும் அடிமைப்பட்டு அடிபணித்து கிடக்கக்கூடாது என்றே வாழ்விக்கும் இறைவன் அவனிடம் அடிபணிந்து கிடக்கவேண்டும் என்று என்னுவானா !!

உன்னுடைய விருப்பமே இறைவனுக்கு அடிபணித்து கிடக்கவேண்டுமா, இல்லை ஏதாவது எவனாவது தருவான் என்று நம்பிக்கொண்டு அடிபணிந்து கிடக்கிறாயா ?? என்பதே !!

மெய்யாய் இறைவன் யாரையும் அடிபணித்து கிடக்கவேண்டும் என்று எண்ணுபவன் அல்ல !!

உன்னை ஏன் அடிபணித்து கிடக்கிறாய் என்று தெளிவுபடுத்தி, அதற்காக நீ வரவில்லை என்ற மெய்யை உணர்வித்து அரவணைத்து அருள்வதே கருணையாளன் திருவருள் !!

மெய்யை உணருங்கள்,
அச்சம் என்ற உணர்வு எதையும் நெருங்கவிடாது விளக்கி வைக்கும், உண்மையான காதல், பந்தம், சிவமே என்று அனுபவிக்கும் ஆன்மா எதுவும் அச்சம் என்ற உணர்வு ஓர் துளிகூட இல்லாது இறைவனை அனுபவிக்கும் !!

அச்சம் தவிர்ப்பவனே இறைவன், அனுபவித்து வாழ்விப்பவனே இறைவன், மெய்யை உணருங்கள் !!

மெய்யானவன் திருவருளால், அனுபவிக்கும் அற்புதமே, அனுபவிக்க காரனமாவன் கருணையால், பதிவாக !!

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே...
*#துன்பம்_போக்கும்_சனி_பகவானின்_வரலாறு*

*************************************************************************************************************************************


*பொதுவாக ஜோதிடப்படி அனைத்துத் துன்பங்களுக்கும் சனி தான் காரணம் என்று சொல்லும் வழக்கம் உண்டு.*

*ஆனால் உண்மையில், பலவிதக் கொடுமைகளுக்கும் காரணமாக உள்ளவர் சனி என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் ஆதிக்கம் கொண்டவர்கள் பட்டறிவு மூலம் வாழ்க்கையில் சிறந்த உயர்ந்த அனுபவங்களை பெற்று உன்னதமாக பிறருக்கு யோசனை சொல்லும் அனுபவசாலிகள் ஆவார்கள். சர்வ சக்திகளை பெற்று சாதனை புரியச் செய்வார் சனீஸ்வரர்.*

*ஒரு நியாயமான கிரகம் மனிதர்களின் பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களைத் தருவதில் இவருக்கு நிகர் இவரே. உலகுக் கெல்லாம் ஒளியை அள்ளி வீசும் சூரிய தேவனுக்கும் சுவர்ச்சலாவுக்கும் யமன், வைவஸ்தமனு, யமுனா என்ற மூன்று குழந்தைகள் உள்ளன. சுவர்ச்சலாவுக்கு சூரியனின் அன்பான அணைப்பு அதீதமான உஸ்ணமாகத் தகித்தது.*

*சுவர்ச்சலாவால் தாங்க முடியவில்லை. தன் நிழலைக் கொண்டு ஒரு உருவத்தைப் படைத்தாள் அவளுக்குப் பெயர் சாயாதேவி. தான் தவம் முடிந்து வரும் வரை தன் கணவனுக்கு தன்னிடத்தில் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணிந்து விட்டுப் போய் விடுகிறாள். சாயாதேவியும் அப்படியே வாழ்ந்து வருகிறாள்.*

*சாயாதேவிக்கு தப்தி (பத்திரை), சாவர்ணிக மனு, சிருதகர்மா (சனி) என்று மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். சாயாதேவி தனக்கென்று குழந்தைகள் பிறந்த பின்பு மாற்றாந் தாயைப் போல் நடந்து கொண்டாள். சூரியனும் யமனும் அவளை மன்னித்து விட்டார்கள். சூரிய தேவன் சுவர்ச்சலா தேவியைத் தேடிக் கண்டுபிடித்து தீராத காதலுடன் தழுவினான்.*

*சூரியனின் காந்த சக்தியால் சுவர்ச்சலா தேவிக்கு அப்பொழுது பிறந்தவர்கள் தான் அசுவினி தேவர்கள். இந்நிலையில் சாயாதேவி தன் குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தாள். அதிலும் சிருதகர்மாவைத் (சனி) தவிர மற்றவர்கள் பேரும் புகழும் பெற்றிருந்தார்கள். மேலும் சிருதகர்மாகவின் கண்கள் அதீதவீர்யமுள்ளவை.*

*எவர் மீது அவன் பார்வை பட்டாலும் உடனே ஆபத்து விளையும். அதனால் சாயாதேவி அவனை வெளியே விடாமல் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் விண்ணுலகமே கயிலையை நோக்கிச் சென்றது கயிலையில் விநாயகப் பெருமானுக்குப் பிறந்த நாள். எல்லோரும் கயிலையில் நடக்கும் விழாவைக் காணச் செல்வதால் தானும் அங்கு செல்ல வேண்டும் என்று சிருதகர்மா அடம் பிடித்தான்.*

*சாயாதேவி எத்தனையோ சொல்லியும் சிருதகர்மா கேட்கவில்லை. இறுதியில் பிடிவாதம் வென்றது. கயிலை மலையின் ஓர் ஓரத்தில் நின்று விழாவைக் கண்டுகளித்து விட்டு வருமாறு அன்னை ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தாள். கயிலையில் சிருதகர்மா காலடிவைத்ததுமே கயிலை மலை ஒரு குலுங்கு குலுங்கியது.*

*இதை மலைமகள் பார்வதியும் உணர்ந்தாள். சக்தி, சூரியனின் குமாரன் சிருதகர்மா இதோ வந்து கொண்டிருக்கிறான் அவன் பார்வைபடா வண்ணம் குழந்தை விநாயகனைப் பார்த்து கொள் என்று சிவபெருமான் கூற, அன்னை மகன் விநாயகனை வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள் சக்திக்கு மீறிய கவசம் எது? ஆனால் சிருதகர்மா விநாயகனைப் பார்த்துவிட அவனின் பார்வைத் தீட்சண்யத்தால் விநாயகனின் தலைதெறித்து விழுந்தது.*

*பார்வதி கதறினாள். சிவபெருமாள் மனைவியைச் சமாதானப்படுத்தினார். கஜமுகாசுரனை சம்ஹாரம் பண்ணப் பிறந்தவன் நம் குமாரன் விநாயகன் அதற்கு சாதாரண முகம் உதவாது யனையின் முகம் தான் வேண்டும் என்று சமாதானம் சொன்னார். பைரவனை அனுப்பி வடக்கு திக்கில் தலைவைத்துப் படுத்திருக்கும் யானையின் தலையைக் கொண்டு வரச் சொன்னார்.*

*காசி அருகே படுத்துக்கிடந்த யானை ஒன்றின் தலையை பைரவன் கொண்டு வந்து கொடுத்தார். அது முதல் விநாயகர் கஜமுகன் ஆனார். புதல்வனின் தலையைப் பார்க்க பார்க்க பார்வதி தேவியாருக்கு பற்றிக் கொண்டு வந்தது. கோபம் கோபமாக வந்தது. கயிலையில் காலெடுத்து வைத்த உன்பாதம் ஊனமாகட்டும் என்று சபித்தாள்.*

*அன்று முதல் விந்தி நடந்ததால் சனி. ஆனால் விந்தி விந்தி வீடு திரும்பிய சிருதகர்மாவைக் கண்டு சாயாதேவி வெகுண்டாள். பார்வதியின் மகனான விநாயகனின் வயிறு ஓநாய் வயிறாகட்டும் என்று சபித்தாள். விநாயகரின் வயிறு பெருத்தது அன்று முதல் விநாயகன் லம்போதரன் ஆனார். ‘சனி என்ற சிருதகர்மா, நீ சிறப்படைய உனக்குத் தவம் ஒன்றே சரியான வழி’ என்று சாயாதேவி மகனுக்கு ஆலோசனை வழங்கினாள்.*

*உடனே சனி, தாயின் அனுமதியுடன் காசி சென்று லிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்து கடுமையாகத் தவம் இருந்தார். சனியின் தவத்தை மெச்சி பரமன் காட்சி கொடுத்தார்.*

*‘சிருதகர்மா உன் தவத்தால் என்னை மிகவும் மகிழ்வித்தாய். இன்று முதல் தேவர்களிலேயே ஈஸ்வரப் பட்டம் உனக்கு மட்டும் தான். மகேஸ்வரனுக்குப் பிறகு ஈஸ்வரப்பட்டம் சனீஸ்வரனான உனக்குத் தான். நவக்கிரகங்களில் ஸ்திர நிலையும் உனக்குத் தான். நீ பூஜித்த லிங்கம் சனீஸ்வரலிங்கம் என்று அழைக்கப்படும். உனக்கேற்ற நாளான சனிக்கிழமையும் ஸ்திரவாரம் என்று அழைக்கப்படும்’ என்று ஈசன் வரம் அளித்தார். சிருதகர்மா அன்று முதல் சனீஸ்வரனாகவும் சனி பகவானாகவும் இருந்து நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறார்.*


*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*   

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!* 

                        *#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_நட்பே.*

 *#வாழ்க_வளமுடன்.*

Sunday, 12 August 2018

*நாளை (13.08.2018) ஆடிப்பூரம்!*

ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள்.

பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள்.

அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே.

*சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா?*

ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம்.

ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். 

பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார்.

இதனால், அங்கு இருந்த  ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே   தூங்கிவிட்டார். நல்ல தூக்கம்.

சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார்.

சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்.

அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். “நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார்.

என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன்.  பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்.” என்றாள் அம்பாள்.

தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார்.

இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள்.

அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிக்ஷங்கள் ஏற்படும்.

பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். 

அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும்.

அதேபோல ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம்.  இந்த நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்களில் இரண்டு வளையல்களை அணியலாம்.

அதேபோல ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைக்கூடும்.

🙏🕉🙏🕉🙏🕉
🌘🌘🌘🌘🌘🌘🌘🌘🌘🌘🌘🌘🌘
👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿
இன்று மாலை சந்திரனை தரிசிக்க மறந்துவிடாதீர்கள்
👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿

 🌙 🌙 !!
சந்திர தரிசனம் !!


🌟 மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

🌟 மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

மூன்றாம் பிறை பிறந்த கதை :

🌟 ஒருமுறை விநாயகப் பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.

பிரச்சனைகள் தீர்க்கும் பரிகாரத் தலங்கள் !!
மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.

உங்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்கள் நட்சத்திரப்படி

செல்ல வேண்டிய கோவில்கள்...

செய்ய வேண்டிய பரிகாரங்கள்...

அணிய வேண்டிய ராசிக்கற்கள்.

🌟 இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தியதுடன், சிவனை நோக்கி கடும் தவம் இருந்து பழையபடி முழுவெண்மதியை பெற்றான். முழுமதி நாளில் சந்திரனை வழிபடுவது சந்திர தரிசனம் ஆகும்.

மூன்றாம் பிறையை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் :

🌟 சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

🌟 மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

🌟 மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

🌟 சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

🌘🌘🌘🌘🌘🌘🌘🌘🌘🌘🌘🌘🌘

Saturday, 11 August 2018

*கந்த சஷ்டி கவசம் விளக்கம்.*

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள்.

போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள்.

இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.

அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார்.

இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன்.

இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த் திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது.

வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.

கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பதுப இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.

முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந் தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனைப உடம்பில் தான் எத்தனை பாகங்கள்ப காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.

பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.

பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.

சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள்.

முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள்.

*காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட*

Wednesday, 8 August 2018

*ஆடி அமாவாசையின் அற்புத ரகசியங்கள்-1*

*(ஆடி அமாவாசை பற்றிய அபூர்வ தகவல்கள் , வழிபாட்டு முறைகள் , அறிவியல் உண்மைகள் முழுமையாக உங்கள் பார்வைக்கு......)*

அமாவாசை என்பது *சூரியனும் சந்திரனும்* ஒன்றாக இணையும் காலம் எனப்படும்..

ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.

இந் நிகழ்வு *இவ் வருடம் 11.8.2018 சனிக்கிழமை* அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது.

வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள்.

பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன. அத்துடன் தன்னைத் தானே சுற்றும் பூமி, சூரியனையும் சுற்றி வருவதானது நாமும் உறுண்டு கொண்டு ஆலயத்தைச் சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போன்ற நிகழ்வாகும். சந்திரன் பூமியை வலம் வருவதோடு பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றி வருவருகின்றமையால் பூமியில் திதிகள் தோன்றுகின்றன. பூமி தனது அச்சில் 23 1/2 பாகை சரிவாகச் சுற்றுவதனால் பருவகாலங்கள் உண்டாகின்றன.

சில இரவுகளில் பூமியில் உள்ளோருக்கு சந்திரனைக் காண முடிவதில்லை. காரணம் சந்திரன் பூமியைச் சுற்றுவதால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் 29.53 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் வருகின்றது. அப்போது பூமியில் உள்ளோருக்கு சந்திரன் தெரிவதில்லை.

வேறு விதமாக கூறுவதாயின் சந்திரன் தானாக ஒளிர்வதில்லை சூரியனின் ஒளியைப் பெற்று பிரதிபலிப்பதனால் ஒளிர்வது போல் தோற்றமளிக்கின்றது.

அதனால் பூமிப்பக்கம் இருக்கும் சந்திரனின் சூரிய ஒளி படது இருப்பதனால் எம்மால் சந்திரனைப் பார்க்க முடிவதில்லை. அன்றைய தினமே அமாவாசை திதி என அழைக்கப்பெறுகின்றது.
ஆனால் சில இரவுகளில் சந்திரனின் முழுத் தோற்றத்தையும் பூமியில் உள்ளோரால் பார்க்க முடிகிறது.

காரணம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சஞ்சரித்த சந்திரன் சுமார் 15 நாட்களில் பூமியின் மறுபக்கத்திற்கு சென்று விடுகின்றது,

 அதாவது; சந்திரன், பூமிக்கு ஒருபக்கத்திலும், சூரியன் மறுபக்கத்திலுமாக, மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருகின்றது. இப்போது பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் பகுதியில் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்கின்றது. அதனால் சந்திரன் பூமியில் உள்ளோருக்கு பிரகாசமாகத் தோற்றமளிக்கின்றது.

இந்நாளை பூரணை அல்லது பௌர்ணமி திதி என்று அழைக்கப்பெறுகின்றது.
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.

 சூரியனைப் “பிதிர் காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்..

இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடிகின்றனர்.

*அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும்* வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.

அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் *தைமாதத்திலும், ஆடி மாதத்தில்* வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர்.

தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

அதேபோல், சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் தொடக்க மாதமாக தை மாதம் அமைவதால், அந்த மாதத்தில் வரும் அமாவாசைத் திதியும் பிதுர் வழிபாட்டிற்கு சிறப்பானது எனக் கொள்ளப்படுகிறது.

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருப்பதனால், அன்றைய தினம் தந்தையை இழந்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரனகிய சூரியனும் இந்து கலாச்சாரத்தில் வணங்ககூடியவர்கள்.. சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள்.

சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள்..இவர்கள் இருவரும் இணையும் அம்மாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற , தடைகள் அகல , பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.

அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது..

 அம்மாவாசை அன்று மட்டும் அல்ல , தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும்.. அம்மாவாசை அன்று மட்டும் அல்லாமல் தினமும் நமது மூதாதையர்களை நினைத்து நமது வேலைகளை தொடங்குதல் வேண்டும்..

திருமணத்தடை , குழந்தை பிறப்பு தாமதம் , வறுமை , நீடித்த நோய் தொல்லை போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.. நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அம்மாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும் என்பது நம்பிக்கை
இன்று நமக்கு இருக்கும் நோயில்லாத வாழ்வு , நேரத்திற்கு உண்பது போன்றவை நமது முன்னோர்களின் ஆசியினால் என்பதால் அவர்களை ஆடி அம்மாவசை போன்ற காலங்களில் வணங்குவது சாலசிறந்தது..

இயற்கையாக முறையில் இறக்காமல் துர் மரணம் மூலமாக இறந்து ஆன்மா சாந்தியடையாமல் இருக்கும் ஆன்மாக்களை சரியான பித்ருபூஜைகள் மூலம் சாந்தம் கொண்டு அந்த வம்சத்திற்கு ஆசிகள் வழங்கும் என்பதால் அன்றைய தினத்தில் பித்ருபூஜை செய்வது சாலசிறந்தது
பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல..காய்கறிகள் தானமாக தரவேண்டும் , குறிப்பாக பூசணிக்காய்..

ஏனெனில் அதில் தான் அசுரன் குடியிருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.. பூஜைக்கு பிறகு இல்லத்தில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி சமர்பிக்க வேண்டும்..அதன் மூலம் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று நமது முன்னோர்கள் மனதார வாழ்த்துவார்கள்..

முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

முன்னோரை கஷ்டப்படுத்தினால் இறைவன் கூட நம்மை கண்டுகொள்ள மாட்டார்.. எனவே சிரமம் பார்க்காமல் ஆடி அம்மாவசை அன்று மறக்காமல் முன்னோருக்கு உங்களால் முடிந்த எளிய தர்ப்பணம் செய்து அவர்கள் அருளை பெறுங்கள்.. அதன் மூலம் தடைப்பட்ட பல காரியங்கள் எளிதாக முடிவதை காணலாம்..

ராமேஸ்வரம் , பவானி , திருச்செந்தூர் திருவையாறு போன்ற நீர் நிலைக்கு சென்று பித்ருதர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்ற முதியோருக்கு உணவிட்டு ஏதேனும் காணிக்கை தந்து அவர்களை மகிழ்ச்சியாய் நம்மை வாயார மனதார வாழ்த்தினால் போதும்..

Monday, 6 August 2018

ருத்ராக்ஷங்களின் முகமும்! வியக்கத்தக்க சக்திகளும்!*

சிவபெருமானின் பக்தர்கள் கழுத்தில் அல்லது கையில் அணிவார்கள். ருத்ராக்ஷா என்ற வார்த்தையில் இருந்து ருட்ராட்சை அதன் பெயரை பெற்றது. ருத்ராக்ஷா என்பது ‘ருத்ரா’ (சிவன் என்று பொருள்) மற்றும் ‘அக்ஷா’ (கண்கள் என்று பொருள்) என்ற வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.

சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானதே ருத்ராட்சை மரம் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் அது ருத்ராட்சை என்ற பெயரை பெற்றது.

 இமயமலை வட்டாரத்தில் இந்த ருத்ராட்சை மரங்கள் அதிகமாக காணப்படும். இந்த மரம் நீடித்து வாழ, குறைந்த தட்பவெப்ப நிலையும் மாசற்ற சுற்று சூழலும் இருந்தாக வேண்டும். அதனால் தான் நேபால் மற்றும் ஹிமாசல பிரதேச மலை வட்டாரங்களில் மட்டுமே இது காணப்படும்.

இந்த ருத்ராட்சை மரம் 100 ஆண்டு காலம் வரை நீடித்து நிற்கும்.

ருத்ராட்ச மணிகளை மாலையாய் கோர்த்து தொடர்ச்சியான வழிபாடுக்கு அதனை பயன்படுத்தலாம். இந்த ருத்ராட்சை மணிகள் ஒரு முகம் முதல் 21 முகங்கள் வரை கொண்டுள்ளதாகும். இருப்பினும் 1-14 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை மட்டுமே மனிதர்கள் அணிகிறார்கள்.

ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. அதற்கு வியக்கத்தக்க சக்திகளும் உள்ளது.

ருத்ராட்சை அணிவதால் பல வகையான நோய்கள் குணமடைந்து ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை கொண்டு வரும்.

*ஒருமுக ருத்ராட்சை*
ஒரு முக ருத்ராட்சை என்பது சிவபெருமானின் மிக நெருங்கிய வடிவமாக பார்க்கப்படுகிறது. “ஓம் ஹ்ரீம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும். இந்த ருத்ராட்சையை அணியும் போது, இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வகை ருத்ராட்சையை அணிபவருக்கு அனைத்து வகையான சந்தோஷமும் செல்வ செழிப்பும் பெருகும்.

*இரண்டு முக ருத்ராட்சை*
இரண்டு முக ருத்ராட்சை அனைத்து வகையான ஆசைகளையும் நிறைவேற்றும். இதனை அணியும் போது, “ஓம் நமஹ” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

*மூன்று முக ருத்ராட்சை*
அறிவை நாடுபவர்களுக்கானது இந்த மூன்று முக ருத்ராட்சை. இதனை அணியும் போது, “ஓம் கிளீம் நமஹ” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

*நான்கு முக ருத்ராட்சை*
நான்கு முக ருத்ராட்சை என்பது பிரம்மனின் வடிவத்தை குறிக்கும். இவ்வகை ருத்ராட்சை ஒரு மனிதனுக்கு தர்மம், அர்தா, காமம் மற்றும் மோட்சத்தை அளிக்கும். “ஓம் ஹ்ரீம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

*ஐந்து முக ருத்ராட்சை*
வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தடங்களை நீக்க ஐந்து முக ருத்ராட்சை உதவி புரியும். “ஓம் ஹ்ரீம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

*ஆறு முக ருத்ராட்சை*
முருக பெருமானை குறிக்கிறது இந்த ருட்ராட்சை. இந்த ருத்ராட்சையை வலது கையில் கட்டிக் கொண்டால், பிரம்மஹத்தி பாவங்களை போக்கலாம். “ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

*ஏழு முக ருத்ராட்சை*
அளவுக்கு அதிகமான நிதி நஷ்டம் அல்லது போதிய அளவில் சம்பாதிக்க முடியாதவர்கள் இந்த ஏழு முக ருத்ராட்சையை அணியலாம். “ஓம் ஹம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

*எட்டு முக ருத்ராட்சை*
பைரவரை குறிக்கிறது எட்டு வகை ருத்ராட்சை. இவ்வகை ருத்ராட்சை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் துரதிஷ்டவசமான விபத்துகளில் இருந்தும் காக்கும். “ஓம் ஹம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

*ஒன்பது முக ருத்ராட்சை*
ஒன்பது வடிவிலான சக்தியை குறிக்கிறது இந்த ருத்ராட்சை. இவ்வகை ருத்ராட்சையை அணிபவர்களுக்கு அனைத்து விதமான சந்தோஷங்களும் வளமையும் வந்து சேரும். “ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

*பத்து முக ருத்ராட்சை*
10 முக ருத்ராட்சை விஷ்ணு பகவானை குறிக்கும். இந்த ருத்ராட்சையை அணிபவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் கிட்டும். “ஓம் ஹ்ரீம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

*பதினொன்று முக ருத்ராட்சை*
வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி கிட்டிட பதினொன்று முக ருத்ராட்சையை அணியவும். “ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

*பனிரெண்டு முக ருத்ராட்சை*
சந்தோஷத்திற்கும் ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் பனிரெண்டு முக ருத்ராட்சையை அணிய வேண்டும். “ஓம் க்ரோம் ஷ்ரோம் ரோம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

*பதிமூன்று முக ருத்ராட்சை*
விஷ்வதேவர்களை குறிக்கிறது பதிமூன்று முக ருத்ராட்சை. அதிர்ஷ்டத்திற்காக அணியப்படுகிறது இந்த ருத்ராட்சை. “ஓம் ஹ்ரீம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

*பதினான்கு முக ருத்ராட்சை*
பதினான்கு முக ருத்ராட்சையும் சிவபெருமானையே குறிக்கும். இந்த ருத்ராட்சை உங்கள் நெற்றியை தொடுமாறு அணிய வேண்டும். உங்கள் பாவங்கள் நீங்க இதனை அணியலாம். "ஓம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

Sunday, 5 August 2018

80 ஆன்மீக குறிப்புகள்:*

1. தினசரி காலையும், மாலையும் தூய
மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள்
பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க
வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம்,
தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த
மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம்,
கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி,
குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி,
வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித
நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை
அண்டாது. தூய்மையான காற்றும்
கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக
வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை
இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து
வைக்காதீர்கள். இது இறை சக்தியைக்
குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள்
ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு
பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம்
ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால்,
அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை
சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில்
பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ
வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக
இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.
அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற
பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும்
இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி
இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது
உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது
துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில்
வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம
நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய்
தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல்
பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது.
இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல்
கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும்
இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத
பூக்களைக் சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள்
வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும்,
விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே
குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம்
அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு
மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை
மணி முதல் ஆறு மணிக்குள் தீபம்
ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும்
நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும்
எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில்
விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய்,
இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை
ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி
பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர
சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ
ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி
வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை
ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான்
விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில்
பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி
தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட
வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப்
படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை
சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால்,
சிறந்த பலன் கிடைக்கும்.

22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக்
கூடாது.

23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில்
காலையில் தினமும் கேட்பது நல்லது.

24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது
நின்றவாரே தொழுதல் குற்றமாகும்.
அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்ப
ோது காலை, மாலை வேளைகளில்
விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த
பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.
தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய்
உடைக்கக் கூடாது.

26. பூஜையின்போது விபூதியை நீரில்
குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள்
மட்டுமே விபூதியை நீரில் குழைத்து
பூசலாம்.

27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும்
இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது
பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால்
மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப்
பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.

29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல்
உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல்
கூடாது.

30. ஈர உடையுடனும், ஓராடையுடனும்,
தலைகுடுமியை முடியாமலும்,
தலையிலும், தோளிலும் துணியை
போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ
வழிபாடு செய்யக் கூடாது.

31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர
உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி
உதறி உதடுத்தலாம்.

32. சுப்ரபாதத்தை தினமும் காலை
வேளையில் மட்டுமே கேட்க வேண்டும்.
அவ்வாறு கேட்க முடியாத நிலையில்
மாலையில் கேட்பது அவ்வளவு
உசிதமானதில்லை எனப்படுகிறது.

33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க
தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே
வெற்றிதான். காலையில் விழித்தவுடன்
நாராயணனையும் இரவு தூங்கு முன்
சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி
தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில்
தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில்
எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம்
ஏற்றி வைக்கலாம்.

35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய
வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து
கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல்
இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

37. காலையில் நின்று கொண்டு செய்யும்
ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில்
உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால்
பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது
கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை
எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.

39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள்
அணைக்கக் கூடாது.

40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது
தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.

41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு
பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி
வைக்கக் கூடாது.

43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட
துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு
நிவேதனம் செய்யக்கூடாது.

44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும்.
மா இலை தோரணங்களுக்கு பதிலாக
பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால்
மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின்
வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு
வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது.
யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து
கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக்
கொள்கிறார்.

48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும்
துளசியை கையில் வைத்துக் கொண்டு என்
பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின்
தொடர்ந்து செல்வேன் என பகவான்
கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில்
துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை
அவருக்கு உண்டு.

49. தெய்வங்களுக்கு நிவேதனம்
செய்யும்போது வெற்றிலை மற்றும்
பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2,
4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு,
வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள்,
தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில்
நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற
பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில்
வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில்
வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம்
செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல
மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள்
போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும்.
நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில்
ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில்
போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட
வேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்
வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி
கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை
ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி
இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது
என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல
வழியனுப்பிய பிறகு பூஜை,
முதலியவைகளை செய்யக் கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம்,
திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை
வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும்.
வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம்
கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம்
பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள்
ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம்
இட்டுக் கொள்ள வேண்டும்.

57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப்
போட்டு கட்டாயம் வைக்க வேண்டும்.
ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும்
வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால்
சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களை
யும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு
குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி,
குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து
விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு
நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு.
காலையில் எழுந்ததும் துளசியைத்
தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம்
கொடுக்கும்போது சிறிது துளசியுடன்
தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு
தரப்படாத தானம் வீண்.

60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப்
படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க
வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக்
கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை
எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு
வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில்
எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த
அளவு பாக்கு வைக்க வேண்டும்.

61. வெற்றிலை நுனியில் லட்சுமியும்,
மத்தியில் சரவஸ்தியும், காம்பில்
மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே
வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு
வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு
வைக்க வேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு
இடது புறம் வருமாறு வைக்க வேண்டும்.
அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி
சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை
போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை
போடும் போது வாழை மரத்திலிருந்து
நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது
பக்கம் வரவேண்டும்.

64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு
முன் தான தருமம் செய்வதென்றால் செய்து
விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம்
செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும்
ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல
பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து
முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.
தலையை விரித்து போட்டு இருந்தால்
லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள்
உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப்
பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும்,
பாதமும் திறந்து நிலையில் இருக்க
வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான
வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்
படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து
இருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப்
படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும்.
வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத்
திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம்.
தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக்
கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால்
தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப்
பார்த்து படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு,
தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து
கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

71. பூஜை அறையில் அதிக படங்களையும்,
தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம்
என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக்
கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும்
இடையில் போதிய இடம் விட்டு வைக்க
வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில்
சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு
நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர்
பாத்திரங்களில் நேரடியாக வைத்து
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை
வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட
விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும்
விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு
செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது
நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு
அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும்
கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு
வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது
லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு
வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு
கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே
உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம்
சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது
வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி
வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும்
உதவும். வெளியே செல்லும்போது சட்டைப்
பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து
சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி,
தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

Friday, 3 August 2018

*உத்தவ கீதை*

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன் என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன் நிறைவேற்றுவாயா? என்றார் உத்தவர்.

உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, பகவத் கீதை. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், உத்தவ கீதை. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள் என்றான் பரந்தாமன்

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்; கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்? நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன் என்றான் கண்ணன்.

கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.மாறாக, திரவுபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, துகில் தந்தேன். திரவுபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைக் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா? என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான் என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான். துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார் என்றார் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான் என்று சொல்லியிருக்கலாமே?

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைகளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

ஐயோ.... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரவுபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.

அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை... துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், ஹரி.... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம் எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு? என்று பதிலளித்தான் கண்ணன்.

அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால் ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கிறேன் என்றார் உத்தவர். கேள் என்றான் கண்ணன்.


அப்படியானால்,கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா? புன்னகைத்தான் கண்ணன்.

உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சி பூதம். நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம் என்றான்.

நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே? என்றார் உத்தவர்.

உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான்.

எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?


இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். மிகவும் எளிமையாக இந்த தத்துவத்தை உத்தவருக்கும் உபதேசித்தான் கண்ணன்..

Wednesday, 1 August 2018

ராஜராஜ சோழனிடம்  வியந்தது
1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம்.பொருளாதாரம்,கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.

தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு
தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.
அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.

தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில்.கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.
சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே (சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்).

1,30,000ton இடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்கவேண்டும்,அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (HollowTower , அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்) .விமானத்தின் உச்சியில் 80ton (ரொம்பலாம் இல்ல just 72574.779kg தாங்க) இடையுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும்,இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது.

1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும்பொது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க கிரனைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்,மேற்கூறிய 80ton காலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு,மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் , இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்.

தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் காட்டியுள்ளனர்,கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட.

கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம்,சற்று யோசித்து பாருங்கள்,இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம் கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும், நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும்.ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போகிவிடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம்,தற்கொலை தாக்குதல் நடத்தலாம். எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரமஎதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.

7 வருடம் கைதிகளை அடக்கிஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை,அதேபோல் மற்ற கட்டிடக்கலை வல்லுனர்களும் மனம்கோணாமல் வேலை செய்ய வேண்டும்,மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் சாட்சி.

சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள்,ஆயிரம் ஆயிரம் யானைகள்,குதிரைகள்,1000க்கும் மேற்பட்ட சிற்பிகள்,ஓவியர்கள்,ஆசாரிகள், கொல்லர்கள், நடனகலைஞர்கள் ,சமையல் வேலையாட்கள்,கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழதேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.

*இது மட்டுமா.*
**************

7 வருடம் கோவில் கேட்ட தேவையான பொருட்செலவை ஈடுகெட்ட தொடர்ச்சியாக போர்களும் நடந்து இருக்கவேண்டும், வெற்றியும் அடைந்து இருக்கவேண்டும் .அதே நேரத்தில் எதிரிநாட்டு படையெடுப்பையும் தடுத்து இருக்க வேண்டும்..

ஒரு வேலை ராஜராஜ சோழனோ இல்லை மற்ற முத்த கட்டிடக்கலை நிபுணர்கள் இறந்தாலும் கோவில் வேலை தடை இல்லாமல் தொடர சுமார் 1000 வரைப்படங்களை தயார் செய்து இருக்கிறார்கள்..

கிரானைட் கற்களை செதுக்க என்ன வகை உளி, இரும்பு பயன்படுத்த வேண்டும் என்று முன்பே கொல்லர்கள் ஆராய்ச்சி செய்து இருக்கவேண்டும். அதே போல் கற்களை நெம்பிதூக்க உதவும் கம்பிகளை தயார் செய்ய வேண்டும் என்றால் பழுக்கக்காய்ச்சி உரமேற்றும் உத்தியும் தெரிந்திருக்க வேண்டும்..

தஞ்சையை சுற்றி 50 கிலோமீட்டருக்கு க்ரானைட் கற்கள் கிடையாது, கோவில் கட்ட தேவையான கற்களை திருச்சிக்கு சற்று தெற்கே 50km தூரத்தில் உள்ள நார்த்தாமலையில் இருந்து கொண்டு வரவேண்டும் என்றால் சோழதேசத்தின் சாலைகள் மற்றும் போக்குவரத்தும் மிக மிக தரமாகவும் சீராகவும் இருந்திருக்க வேண்டும்..

இது எல்லாவற்றையும் சமாளித்தலும் மிக பெரிய பூதம் ஒன்று உள்ளதே, அது தான் அரசியல். எந்த ஒரு சாம்ராஜ்யமாக இருந்தாலும் அரசியல் குழப்பம் இருக்காமல் இருக்காது.7 வருடம் அரசியல் குழப்பம் எதுவும் நடக்காமல் மிக நேர்த்தியாக ஆட்சி செய்திருக்க வேண்டும்.சோழ அரசியலில் பெண்களின் பங்கு கவனிக்கத்தக்கது ஆண்மகன்கள் கோவில் வேலையில் மும்முரமாக இருக்க பெண்கள் ( அதிகாரிச்சி ) அரசு இயந்திரத்தை திறன்பட இயக்கியுள்ளனர் என்று வரலாறு சொல்கிறது..

1000 வருடம் 6 நிலநடுக்கத்தை கண்டும் அசராமல் நிற்க்கும் தஞ்சை பெரிய கோவில் வெறும் தேவாலயம் இல்லை.
மருத்துவம்,பொருளாதாரம்,
கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் மிக மிக சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் .

தஞ்சை பெரிய கோவில் என்கின்ற மாபெரும் பொக்கிஷத்தை நமக்கு தந்த அருள்மொழிவர்மன் (எ) ராஜராஜ சோழனின் பெருமையை உலகம் முழுவதும் பரப்புவோம்...